மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு கம்ப்யூட்டர் படிப்புகளை
கோடை விடுமுறையில் படித்துப்பயன்பெறலாம்....
இது கம்ப்யூட்டர் யுகம். மளிகை கடையிலிருந்து மல்ட்டி ஸ்பெஷாலிட்டி
மருத்துவமனை வரை, எங்கும்கம்ப்யூட்டரின் ஆதிக்கம். காகிதப் பயன்பாட்டைக்
குறைத்து அனைத்துத் தகவல்களையும் பென்டிரைவ் அல்லது
டிஸ்க்குகளுக்குள் அடைத்து வைத்துக்கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பிளஸ் டூநிலையிலோ அல்லது கல்லூரிகளிலோ கம்ப்யூட்டர்
படிப்பை எடுத்துப் படித்தவர்கள் மட்டுமல்லாமல்,சாமானியனும் கம்ப்யூட்டர்
அறிவு பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர்
தொடர்பான பாடங்களைப் படித்துஅத்துறையில் நிபுணர்களாவது ஒரு வகை. ஏதாவது
ஒரு பட்டப் படிப்பைப் படித்தாலும்கூட, கம்ப்யூட்டர்தொடர்பான படிப்புகளைப்
படித்து தங்களது தகுதிகளை உயர்த்திக் கொள்பவர்கள் மற்றொரு வகை. ஏற்கெனவே,
கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்து வருபவர்களும் கூட, அவர்களது தேவைக்கேற்ப
படிக்க பல்வேறுகம்ப்யூட்டர் படிப்புகள் உள்ளன. இவற்றை கற்றுத் தர பல நிறுவனங்கள்
இருக்கின்றன. கோடை விடுமுறையைஇந்தப் படிப்புகளைப் படிக்கப் பயன்படுத்திக்
கொள்ளலாம். இதன்மூலம், மாணவர்களின் வேலைவாய்ப்புக்கானசாத்தியங்கள்
அதிகரிக்கும். மாணவர்களுக்குப் பயன்படும் சில கம்ப்யூட்டர் பயிற்சிகள், படிப்புகள்
குறித்தவிவரங்கள் இதோ...
எம் எஸ் ஆபீஸ் (–MS Office) : இதில் எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்ஸெல், எம்எஸ்
பவர் பாயிண்ட் என்று பலஅப்ளிகேஷன்கள் உள்ளன. கம்ப்யூட்டர் குறித்த
அடிப்படைத் தகவல்கள், இயக்கும் விதம், நவீன முறை ஆபரேட்டிங் சிஸ்டம்,
பெயிண்ட், கால்குலேட்டர் போன்ற டூல்களை உபயோகிக்கும் முறை, டைரக்டரி,
ஃபைல்கள் மற்றும் ஃபோல்டர்களை உபயோகிக்கும் முறை, இன்டர்நெட்டை
கையாளும் முறை, ஹெச்டிஎம்எல் போன்ற பலவற்றையும் கற்றுத் தருகிறோம்.
இந்தப் படிப்புகளை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஒரு மாதத்தில்
இந்த கோர்ஸை கற்றுக்கொள்ளலாம். பிபிஓ கம்பெனிகள், மெடிக்கல்
டிரான்ஸ்கிரிப்ஷன் துறையினருக்கு இந்த புரோகிராம் மிகவும் உபயோகமாக இருக்கும்.
DTP பணிகள், ஒரு புராஜெக்ட்டை எப்படி சரியாக வடிவமைப்பது போன்ற பல
விஷயங்களையும் எம்எஸ் ஆபீஸில் கற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு
படித்தவர்களிலிருந்து யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியைப் பெறலாம்"
என்கிறார் தனியார் கம்ப்யூட்டர்நிறுவன நிர்வாகி நரேஷ்குமார்.
பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் தொழில்நுட்பப் பிரிவுகளில்
பணிபுரிபவர்களுக்கு ஏற்ற வகையில் மல்டி மீடியா படிப்புகள் உள்ளன. டிடிபி,
போட்டோஷாப், வெப் டிசைனிங், அடோப் டிரீம்வீவர், அடோப் ஃப்ளாஷ் போன்ற பல
பிரிவுகள் இந்தப் படிப்பில் அடங்கும். அடையாள அட்டைகள் வடிவமைப்பது,
விசிட்டிங் கார்டுகள் தயாரிப்பது, வாழ்த்து அட்டைகள் வடிவமைப்பது போன்ற பல
செயல்களையும் போட்டோஷாப்பிலேயே செய்துவிடலாம். பத்திரிகைகளில்
கிராபிக் டிசைனராக விரும்புபவர்கள் அடோப் இன்டிசைன், அடோப் போட்டோஷாப்,
அடோப் இல்லஸ்டிரேட்டர் போன்றவற்றைத் தெரிந்திருக்க வேண்டும்.
ஆடியோ கம்பெனிகள், ரெக்கார்டிங் தியேட்டர்கள் போன்றவற்றில்
கம்ப்யூட்டரை உபயோகித்து செய்யும் வேலைகளுக்கு அடோப் ஆடிஷன்,
அடோப் பிரீமியர் போன்ற படிப்புகள் உள்ளன. இதிலேயே மல்டிமீடியா விஷுவலைசர்
என்ற படிப்பும் உள்ளது. ஆட்டோடெஸ்க், கம்பஸ்ஸன்,
ஆட்டோடெஸ்க் 3 டிஎஸ் மேக்ஸ், ஆட்டோடெஸ்க் மாயா, அனிமேஷன் போன்ற
பல பிரிவுகள் இதில் உள்ளன. எந்திரன் படத்தில் வரும் கிராபிக்ஸ் டிசைன்கள்
எல்லாம் இப்படி வடிவமைக்கப்பட்டவையே. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி
திரைத்துறையில் கலக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற படிப்பு இது" என்று
விளக்குகிறார் அவர்.
ஜாவா நெட் (Java Net) : கம்ப்யூட்டர் துறையில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கான கோர்ஸ்
இது. பி.சி.ஏ., எம்.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ., பி.டெக்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இசிஇ படித்த மாணவர்கள் இந்த கோர்ஸைப் படிக்கலாம்.
ஆரக்கிள், ஜாவா போன்றவை, சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பெருமளவில்
பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர் புரோகிராம்களாகும். இணைய தகவல்களை உருவாக்குவது,
பலரும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பது, தேவையான தகவல்களைச் சேர்ப்பது
போன்ற பல நடவடிக்கைகளுக்கு பிஹெச்பி (PHP), எஸ்.க்யூ.எல் (SQL) புரோகிராமிங் பயன்படும்.
பி.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ. படித்த மாணவர்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் கோர்ஸ்,
டேலி (Tally). இதில் நிதி அறிக்கைகள், கணக்குப் புத்தகங்கள்,
பதிவேடுகளை உருவாக்குதல், வவுச்சர்கள், இன்வென்டரி புத்தகம் தயாரித்தல்,
டேட்டா மேனேஜ்மெண்ட் போன்ற பல விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும்.
ஒரு மாத காலப் படிப்பு இது.
கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படிப்பில் கம்ப்யூட்டர் ரிப்பேரிங், சர்வீஸ், அசெம்பிளிங்,
சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேஷன், நெட்வொர்க்கிங் சர்வர் போன்ற பல பிரிவுகள் உள்ளன.
C,C++, ஜாவா, சேப், எஸ்.க்யூ.எல். போன்ற புரோகிராம்கள் நடைமுறையில் அதிகம்
புழக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர் புரோகிராம்களாகும். இவற்றைக் கற்றுக்கொள்வது,
கம்ப்யூட்டர் தொடர்பான நிறைய வேலைவாய்ப்புகளுக்கு உதவும்" என்கிறார்
வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கம்ப்யூட்டர் துறை தலைவர்
பேராசிரியர் பத்மாவதி.
C,C++, ஜாவா, எஸ்.க்யூ.எல். (SQL) போன்ற கம்ப்யூட்டர் புரோகிராம்களை கற்றுக்கொள்ள
பிளஸ் டூ படித்திருந்தாலேபோதுமானது. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின்
சம்பளம், ஒரு வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மதிப்பெண்கள் என்பது
போன்று நிறைய விவரங்களை சேகரித்து ஒரு அட்டவணை தயாரித்தல் போன்ற
பணிகளுக்கு இந்த புரோகிராம்கள் பயன்படுகின்றன.
CCNA, CCNP: இந்தப் படிப்புகளை கற்றுக்கொண்டவர்கள், நெட்வொர்க்
அட்மினிஸ்டிரேட்டர்களாகப் பணியாற்றலாம். ஒரு கம்பெனியில் நான்கைந்து
கம்ப்யூட்டர்கள் இருந்தால் அவற்றை சர்வர் மூலம் இணைப்பது, இன்டர்நெட் இணைப்புக்
கொடுப்பது, தேவையற்ற இணையதளங்களை மறைப்பது போன்ற பல பணிகள் இதில் அடங்கும்.
பிஹெச்பி (PHP): Personal Home Page எனப்படும் PHP கோர்ஸ், தற்போது Hypertext Preprocessor
என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் வெப் டிசைனராகப்
பணியாற்றலாம். இணைய தளத்தை உருவாக்கித் தர முடியும்.
எம்பெட்டட் சிஸ்டம் (Embedded System): கம்ப்யூட்டர் ஹார்டுவேர் கோர்ஸ்களில்
முக்கியமானது, எம்பெட்டட் சிஸ்டம். சிறிய வகை ரோபோ டிசைனிங்,
வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், காலிங்பெல் போன்ற பலவகையான
எலெக்ட்ரானிக் இயந்திரங்களில் புரோகிராம்களை செட் செய்ய, எம்பெட்டட்
சிஸ்டம் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். சிறிய சிஸ்டம் ஒன்றை பெரிய பொருளுக்குள்
வைப்பதுதான் எம்பெட்டட் சிஸ்டம். மின்னணுப் பொருட்களை டிஜிட்டலைஸ்டாக
மாற்ற உபயோகிக்கும் சிஸ்டம் இது. இரண்டு மாதங்களிலிருந்து ஓராண்டுகள்
வரை இந்த கோர்ஸை கற்றுக்கொள்ள முடியும். என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு
ஏற்ற படிப்பு இது.
சாஃப்ட்வேர் டெஸ்டிங்: நாம் எழுதிய புரோகிராம் சரியானதா அல்லது
தவறானதா என்பதைக் கண்டுபிடிக்க சாஃப்ட்வேர் டெஸ்டிங் பயன்படுகிறது.
இதற்கான பயிற்சிகளைப் பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள்
காத்திருக்கின்றன. 3 மாதங்களுக்குள்ளாக இதில் பயிற்சி பெற்றுவிடலாம்.
மெயின்ஃபிரேம்ஸ் : சூப்பர் கம்ப்யூட்டர் போன்ற பழங்காலக் கணினிகளில் பயன்படுத்தும்
புரோகிராம் மெயின்ஃபிரேம்ஸ். இதன் மெமரி மற்றவற்றைவிட அதிகம்.
வழக்கமாக எந்த ஒரு புரோகிராமையும் நம்முடைய கம்ப்யூட்டரிலேயே
உபயோகிக்க முடியும். ஆனால் மெயின்ஃபிரேம்களை சூப்பர் கம்ப்யூட்டர்
இருக்கும் இடத்திற்குப் போய்தான் உபயோகிக்க முடியும். ஏற்கெனவே பதிவு
செய்து வைத்திருக்கும் விஷயங்களில் பிழைகளைக் கண்டறிவது,
அவற்றைப் பாதுகாப்பது போன்றவற்றுக்கு இவை பயன்படுகின்றன. ராணுவம்
தொடர்பான விவரங்கள், ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க, பராமரிக்க
இந்த புரோகிராம் பயன்படுகிறது. இதைக் கற்றுக்கொண்டவர்களுக்கு
நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த கோர்ஸை கற்றுக்கொள்ள
ஓராண்டு ஆகும் என்கிறார்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கம்ப்யூட்டர் துறை
உதவிப் பேராசிரியர்கள் பூங்கொடி, சுசீலா, சசிகுமார் ஆகியோர்.
சேப் (SAP) : ஸ்டாட்டிஸ்டிக்கல் அனலிட்டிக்கல் புராசஸ் எனப்படும் SAP புரோகிராம்,
வணிகத் துறைக்கும், பிஸினஸ் செய்பவர்களுக்கும் மிகவும்
உபயோகமானது. மருத்துவத்துறையிலும் இதைப் பயன்படுத்துவார்கள். பி.காம்.,
பிசிஏ., எம்.பி.ஏ. பட்டதாரிகளுக்கு ஏற்ற படிப்பு இது. இன்ஜினியரிங் மாணவர்களும்
இந்த புரோகிராமை படிக்கிறார்கள்.
மைக்ரோசாஃப்ட் சர்ட்டிஃபைட் புரோகிராமர் என்ற கோர்ஸ் படித்தால், வெப்சைட்
உருவாக்குவது, ஆன்லைன் பிஸினஸ் செய்வது போன்ற பல விஷயங்களைக்
கற்றுக்கொள்வது எளிது.ஜாவா புரோகிராமில் சன் சர்ட்டிஃபைட் ஜாவா புரோகிராம்,
மைக்ரோசாஃப்ட் சர்ட்டிஃபைட் டேட்டா பேஸ்ட் அட்மினிஸ்ட்டிரேட்டர் போன்ற
பல புரோகிராம்கள் உள்ளன. இந்த புரோகிராம்களைக் கற்றுக்கொண்டு நாம் ஆன்லைனில்
தேர்வெழுதி இந்தச் சான்றிதழ்களைப் பெற முடியும். அதேபோல ரெட்ஹேட் (Redhat)
சர்ட்டிஃபைட் செக்யூரிட்டி ஸ்பெஷலிட் என்ற புரோகிராம் ஓபன் சோர்ஸ் வகையைச் சார்ந்தது.
Sunsolaries சர்ட்டிஃபைட் புரோகிராம்களும் இதைப்போன்றவைதான். Drupal என்ற சாஃப்ட்வேர்
படிப்பு, ஓபன் சோர்ஸ் படிப்பாகும். வெப்சைட் உருவாக்குவதற்கு ஏற்ற
சாப்ட்வேர் பயிற்சிஇது. Python என்ற சாஃப்ட்வேர், வெப் டிசைனிங் துறையில்
ஸ்கிரிப்டிங் மொழியாகப் பயன்படுகிறது. Apache, Lamp Pro, Lamp போன்ற
பல ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர்கள் உள்ளன.
CAD, CAM– போன்ற படிப்புகள், சிவில் என்ஜினீயர்கள், மெக்கானிக்கல் என்ஜினீயரிங்
படித்தவர்களுக்கு ஏற்றவை. வீடு கட்ட புளூ பிரிண்ட் தயாரிப்பது, ஒரு இயந்திரத்தை
டிசைன் செய்வது, கார்களை வடிவமைப்பது போன்ற பணிகளுக்கு இந்தப் படிப்பு உதவும்.
ஆரக்கிள் (Oracle) போன்ற சாஃப்ட்வேர் புரோகிராம்களை கற்றுக்கொண்டால்,
டேட்டாக்களை பாதுகாத்து வைப்பது, ஆன்லைன் டிக்கெட் புக்கிங், ரிசர்வேஷன்
போன்ற பணிகளை செய்வதற்கு உதவும்.
நன்றி:- புதியதலைமுறைக்கல்வி
நன்றி - tntjsw
Post a Comment