பெண்களின் கால்களில் முத்தமிட்ட போப் ஆண்டவர்!

பெண்களை தேவாலயப் பணிகளில் ஈடுபடுத்த புதிய யுக்தி(?) கடந்த மார்ச் 28ஆம் தேதி உலகம்முழுவதும் உள்ள கிறித்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினமான புனித வெள்ளிக்குமுந்தைய தினமான புனித வியாழன் தினத்தை அனுசரித்தார்கள். ஏசு சிலுவையில்அறையப்படுவதற்கு முந்தைய தினம் நடைபெற்றதாகச் சொல்லப்படும் விருந்து நிகழ்ச்சியில்  தனது12 சீடர்களின் கால்களை கழுவி ஏசு முத்தமிட்ட நிகழ்ச்சியை நினைவு கூறும் புனித வியாழன் வழிபாடுவாடிகன் நகரத்தில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றது.

வழக்கமாக வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பாதிரியார்களின் கால்களை கழுவிஆண்டுதோறும் போப்  முத்தமிடுவார்ஆனால்இந்த முறை புதிதாக பொறுப்பேற்றுள்ள போப்பிரான்சிஸ் இதுவரையிலான மரபுகளை மாற்றினார்.
பெண்களின் கால்களை முத்தமிட்டு புதிய புரட்சி(?):
இதற்கு முன்பு போப்பாக இருந்தவர்களெல்லாம் ஆண்களுடைய கால்களில்தான் முத்தமிட்டனர்.ஆனால் புதிய போப்போ இரண்டு பெண்களது கால்களை முத்தமிட்டு சரித்திர சாதனை புரிந்துள்ளார்.இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பெரிய வியாழன் என்று சொல்லப்படக்கூடிய தினமான மார்ச் 28ஆம் தேதி  ரோம் நகரில் உள்ளசிறைச்சாலையில் இருந்த 14 வயது முதல் 21 வயதுள்ள இளம் குற்றவாளிகளுக்கும்அங்கிருந்த 2இளம்பெண்களுக்கும் அவர்களது பாதங்களை கழுவி போப் முத்தமிட்டார்.
இதற்கு முன்னர் இருந்த எந்த போப்பும் பெண்களது பாதங்களை கழுவி முத்தமிட்டதில்லைமுதல்முறையாக சர்ச் மரபுகளுக்கு மாறாக போப் பிரான்சிஸ் செய்தது சரியா தவறா என்று விவாதம்தற்போது எழுந்துள்ளது.
 ‘கேள்விக்குரிய ஒரு முன்னுதாரணத்தை போப் ஏற்படுத்தி இருக்கிறார்’ என்று போப் செய்த செயலைஎதிர்ப்பவர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.
ஆனால்சர்ச் நடவடிக்கைகளில் பெண்களையும் இடம்பெறச் செய்ய போப்பின் இந்த முத்தநடவடிக்கை உதவும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முத்தம் கொடுத்துவிட்டு ஆற்றிய உரை:
பெண்களது காலில் முத்தம் கொடுத்துவிட்டு போப் பேசியதாவது :
 “உங்கள் பாதங்களை கழுவியதன் அர்த்தம்நான் உங்களுக்காக சேவை செய்யவே இருக்கிறேன்என்பதை உணர்த்தத்தான்ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்கள்.
இயேசு இதைத்தான் நமக்கு கற்றுத் தந்தார்அதைத்தான் நான் செய்கிறேன்ஒரு போதகராகஒருபிஷப்பாக மனப்பூர்வமாக நான் இதை செய்கிறேன்இதற்கு விளக்கம் தேவையில்லைசேவை செய்யவேண்டியது என் கடமை’ என்று தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.
அதாவது பெண்களுக்கு யாராவது சேவை செய்ய விரும்பினால் அவர்களது கால்களைக் கழுவிமுத்தமிட வேண்டும் என்பதுதான் புதிய போப்பின் புதிய அறிவுரை.
போப் மீது குற்றச்சாட்டு :
இயேசு தனது ஆண் சீடர்களின் கால்களைத்தான் கழுவினாரே தவிரபெண்களுடைய கால்களைக்கழுவி பெண்களுக்கு முத்தம் கொடுக்கவில்லைஇயேசுவுடைய வழிகாட்டுதலை மீறி போப்பெண்களது காலில் முத்தம் கொடுத்துள்ளார்இது தவறான அணுகுமுறை என்று கிறித்தவர்களில்ஒருதரப்பினர் பகிரங்க குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகின்றனர்.
ஆனால் இவர்களது குற்றச்சாட்டுகளுக்கு அசராத போப் அவர்களோபெண்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தத்தான் பெண்களது கால்களையும் கழுவிஅவர்களுக்கு முத்தம் கொடுத்தேன் என்ற கருத்துப்பட விளக்கமளித்துள்ளார்.
இப்படி அளவுக்கதிகமாக பாதிரிமார்கள் பெண்களுக்கு சேவையாற்றுவதும்(?), பெண்களுக்கு உதவிசெய்வதும்(?), அவர்களை கண்ணியப்படுத்தி(?) கவனிப்பதும்தான் கருக்கலைப்புவரைக் கொண்டுசெல்கின்றது என்பது போப் ஆண்டவருக்குத் தெரியாதது அல்ல.
பெண்களுக்கு போப் ஆண்டவர் முத்தம் கொடுத்தது தவறு என்று இவரை எதிர்க்கக்கூடியவர்கள்வைக்கக்கூடிய மற்றொரு வாதம் ரொம்ப நகைச்சுவையானதும்அதே நேரத்தில் வெட்கித்தலைகுனிய வேண்டியதுமாக உள்ளது.
விசித்திர விளக்கம் :
போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது இயேசுவுடைய வழிகாட்டுதலில் இல்லாதசெயல்எனவே போப் ஆண்டவர் பெண்களுக்கு முத்தம் கொடுத்தது தவறுபோப் ஆண்டவருக்குபெண்கள் முத்தம் கொடுத்தால் அது தவறில்லை.
மேற்கண்ட விளக்கத்தைக் கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளனர்காரணம்என்னவென்றால் ஏசுவுக்கு ஒரு பெண் தைலம் பூசிவிட்டு ஏசுவுடைய பாதங்களை முத்தமிட்டுள்ளார்.அதை ஏசுவுடைய சீடர்கள் கண்டித்தபோதுமுத்தம் கொடுத்த பெண்ணை கண்டித்த சீடர்களை ஏசுகண்டித்துள்ளார்.
நீங்கள் எப்போதாவது இதுபோன்று எனக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களாஇல்லையேஇந்தப் பெண்எனக்கு முத்தம் கொடுப்பதை நீங்கள் ஏன் தடுக்கின்றீர்கள்இப்படி அவள் எனக்கு தைலத்தைப்பூசிவிட்டுமுத்தம் கொடுத்த காரணத்தால் அவளது பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டனஎன்று கூறியுள்ளார்.
(பார்க்க : லூக்கா அதிகாரம் 7 : 27 முதல் 48 வரையோவான் அதிகாரம் 12 : 3முதல் 8 வரை)
அதாவது பெண்கள் பாதிரியார்களுக்கு தைலம் பூசிஅவர்களது பாதங்களில் முத்தம் கொடுத்தால்அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஏசுவின் வழிகாட்டுதல்அதைவிடுத்துவிட்டுபாதிரியாராக இருக்கக்கூடியவர் பெண்களுக்கு முத்தம் கொடுப்பது எவ்விதத்தில் நியாயம் என்பதுதான்போப் ஆண்டவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் ஆழமான(?) கேள்வி.
தேவாலயங்களில் இத்தகைய ஊழியங்களில் பெண்களை ஈடுபடுத்தத்தான் போப் பெண்களுக்குமுத்தம் கொடுத்தாரோ என்னவோ?. நமக்குத் தெரியவில்லைகர்த்தருக்கே வெளிச்சம்.
பெண் அதிபருக்கு முத்தம் கொடுத்த போப்:
அதுமட்டுமல்லாமல் புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்றவுடன்அர்ஜெண்டினாவின் பெண் அதிபர் கிரிஸ்டினா பெர்னான்டிஸ் கடந்த மார்ச் 18ஆம் தேதி போப்ஆண்டவரை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்அப்போது போப் ஆண்டவர் பெண் ஜனாதிபதிக்குபல பரிசுகளை வழங்கினார்அத்தோடு பெண் ஜனாதிபதியை கட்டித்தழுவி முத்தத்தையும் பரிசாகவழங்கினார் போப்.
பின்னர் வெளியே வந்த பெண் ஜனாதிபதியோ, “போப் எனக்கு முத்தம் கொடுத்தார்இதுவரை இப்படிநான் எந்த போப்பிடமும் முத்தம் பெறவில்லை” என்று பெருமையாக பத்திரிக்கையாளர்களிடத்தில்தெரிவித்தார்இதுவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தீமையோடு நீங்கள் எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு சொன்ன உதாரணத்தைக் கூறி நான்எந்த தீமையையும் எதிர்க்கமாட்டேன்தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கமாட்டேன் என்று போப்ஆண்டவர் உரை நிகழ்த்தியதன் அர்த்தம் இதுதானா என்று பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
நான் நீங்கள் செய்யக்கூடிய அநியாயங்களை தட்டிக் கேட்கமாட்டேன்அதுபோல நான் செய்யக்கூடியஇதுபோன்ற சேட்டைகளை நீங்களும் கண்டுகொள்ளக்கூடாதுகண்டிக்கக் கூடாதுகண்டனம்தெரிவிக்கக்கூடாது என்பதைத்தான் புதிய போப் சூசகமாகச் சொல்லியுள்ளாரோ என்று அனைவரும்சந்தேகப்படுகின்றனர்.
அதே நேரத்தில் போப் ஆண்டவரிடத்தில் மற்றுமொரு கேள்வியையும் நாம் கேட்கவிரும்புகின்றோம்தீமைகளுக்கு கண்டனம் தெரிவிக்கக் கூடாது என்று சொல்லும் தாங்கள்தீமைகளைச் செய்தவரை சிறையில் தள்ளி அழகு பார்க்கலாமா?
தீமைகளைக் கண்டிக்கக் கூடாது என்றால் அந்த தீமைகளைச் செய்தவர்களை சிறையிலும்அடைக்கக்கூடாதல்லவாஅவர்களது கால்களைக் கழுவி அவற்றை முத்தமிடுவது அவர்களுக்குச்செய்யும் சேவையாஅல்லது திருடர்களை விடுதலை செய்து சிறைக் கொட்டடிகளைஒழித்துக்கட்டுவது அவர்களுக்கு உதவுவதா என்பதை போப் முதலில் விளக்க வேண்டும்.
ஆகமொத்தத்தில் போப் செய்யும் அத்தனை செயல்களும் பைபிளுக்கும்இயேசுவின்போதனைகளுக்கும் மாற்றமாக உள்ளதோடுமட்டுமல்லாமல் பல பிரச்சனைகளுக்குவழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது.
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger