கணித அறிவியல் துறையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளில் முதன்மைபெறும் நோக்கத்தில் சென்னை மேத்தமேட்டிகல் இன்ஸ்டியூட் எனப்படும் சென்னைக்கணித மையம் 1989ல் நிறுவப்பட்டது. இது ஸ்பிக் சயின்ஸ் பவுண்டேஷனின் ஒருபகுதி
நடவடிக்கை. இந்த கல்வி நிறுவனம் 1996 முதல் தன்னிலை பெற்று இயங்கிவருகிறது. இந்த மையத்தின் சார்பாக பல்வேறு கணிதப் பிரிவுகளில் சேர்க்கைக்கானஅறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் தகுதி நிலைகள்:
சென்னைக் கணித மையத்தின் பி.எஸ்.சி., (ஹானர்ஸ்) மேத்தமேட்டிக்ஸ் அண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ்பிரிவு மற்றும் பி.எஸ்.சி., (ஹானர்ஸ்) கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவுகளுக்கு ப்ளஸ் 2 விற்குநிகரான படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிதத்தில் எம்.எஸ்.சி., படிப்புக்கு பி.எஸ்.சி., (கணிதம்), பி.மேத்., பி.ஸ்டாட்., பி.இ., பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்.சி., அப்ளிகேஷன் ஆப் மேதமேடிக்ஸ் படிப்புக்கு பி.எஸ்.சி., (கணிதம்,இயற்பியல், புள்ளியியல்), பி.மேத்., பி.ஸ்டாட்., பி.இ., பி.டெக்., முடித்தவர்கள்விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., (சி.எஸ்.,), பி.சி.ஏ., பி.எஸ்.சி.,(மேத்ஸ்) முடித்தவர்கள்விண்ணப்பிக்கலாம். கணிதத்தில் ஆராய்ச்சிப் படிப்பான பி.எச்.டி., க்கு பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., (மேத்ஸ்), எம்.எஸ்.சி.,(மேத்ஸ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் ஆராய்ச்சிப் படிப்பான பி.எச்.டி.,க்கு பி.இ., பி.டெக்., எம்.எஸ்.சி.,(சி.எஸ்.,), எம்.சி.ஏ., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியலில்ஆராய்ச்சிப் படிப்பான பி.எச்.டி., க்கு பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி.,(இயற்பியல்), எம்.எஸ்.சி.,(இயற்பியல்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதர தகவல்கள்:
சென்னைக் கணித மையத்தின் மேற்கண்ட படிப்புகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் பிரிவைப் பொறுத்து ஸ்டைபண்டு கிடைக்கும். பி.எஸ்.சி., (ஹானர்ஸ்) படிப்புகளுக்கு மாதம் ரூ.4 ஆயிரமும், எம்.எஸ்.சி., படிப்புகளுக்கும் மாதம் ரூ.5 ஆயிரமும், ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு ரூ.16 ஆயிரத்துக்கு குறையாமலும் பெற முடியும். இந்தப் படிப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் 15.05.2013 அன்று ஆமதாபாத், அலகாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், கோழிக்கோடு, சென்னை, கோவை, டில்லி, கவுகாத்தி, ஐதராபாத், இம்பால், கோல்கட்டா, மதுரை, மும்பை, நாக்பூர், பாட்னா, புனே, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வரும் 15.04.2013க்குள் ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். முழு தகவல்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
இணையதள முகவரி:
Thanks to dinamalar தொகுப்பு - திருத்துறைபூண்டி ராஜா முகம்மது
thanks to - tntjsw
|
Post a Comment