அண்மையில் இறப்பைத் தழுவிய வெனிசுலா அதிபரும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளருமான ஹ்யூகோ சாவேஸ் அமெரிக்கச் சதியால் மரணமடைந்ததாகவும் பேச்சு எழுந்துள்ளது.
சாவேஸின் மரணம் அமெரிக்காவின் சதியாக இருக்கும் என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி சியுகானவ் கூறியுள்ளார்.
இரஷ்ய தொலைக்காட்சி ஓடை ஒன்றுக்கு பேட்டி அளித்த இரஷ்யாவின் கென்னடி கூறுகையில் "ஆறு இலத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் தாக்கியதன் பின்னணி ஆராயப்பட வேண்டும்" என்றார். "இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் அடாவடியை எதிர்த்து வலிமையான கூட்டணியை உருவாக்கியவர்கள் என்ற கோணத்தில் இது பார்க்கப்பட வேண்டும்"என்றார் கென்னடி.
பிரேசில் அதிபர் டில்மா ரோஸ்செப், பிரேசிலின் முன்னாள் தலைவர் லூயிஸ் இனசியோ லுலாடா சில்வா, பராகுவே நாட்டின் பெர்னாண்டோ லூகோ, அர்ஜெண்டினாவின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ், தற்போது வெனிசுலா அதிபர் சாவேஸ்ஆகியோர் உள்ளிட்ட ஆறு இலத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் அமெரிக்க அரசின் கொள்கையை கடுமையாக எதிர்த்தவர்கள் என்பது குறிக்கத்தக்கது.
கென்னடியின் இக்கூற்றுக்கு முன்னோடியாக அமைவதைப் போல வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் "சாவேஸ் ஏகாதிபத்தியத்தின் சதிக்கு பலியாகி விட்டார். நமது நாட்டின் நீண்டகால எதிரிகள், சாவேஸின் உடல் நிலைக்கு தீங்கு விளைவிக்க வழிகளை தேடி வந்தனர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்காவால் பன்முறை உயிருக்குக் குறி வைக்கப்பட்ட சாவேஸ், தன்னிடம் ஃபெடல் காஸ்ட்ரோ "'நீ மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். அவர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர். நீ என்ன சாப்பிடுகிறாய், அவர்கள் உனக்கு என்ன சாப்பிட கொடுக்கிறார்கள், என்ன ஊசி போடுகிறார்கள் என்பதில் கவனமாய் இரு" என்று கூறியதாக முன்பு ஒரு முறை தெரிவித்திருந்ததும் இங்கே நினைவு கூரத்தக்கது.
Post a Comment