ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-3

ஏசுவின் இன்னொரு முகம்
படுதோல்வியான படையெடுப்பு
 இவ்வளவு வரவேற்புக்கள்! வாழ்த்து மழைகள்! அனைத்தும் வெற்றியைப் பெற்றுத் தந்தனவா என்றால் இல்லை. சீடர்கள் கூட்டமும், திரண்டு வந்த மக்கள் கூட்டமும் ஏசுவுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இல்லை.
 சீடர்களின் உணர்ச்சிப் பெருக்குகளைப் பார்த்து, அவர்களின் இலட்சணங்களைப் புரிந்திருந்த பரிசேயர்கள் சிலர், "அவர்களைத் தட்டி வையுங்கள்' என்று ஏசுவிடம் சொல்லி வைத்தனர். ஆனால் ஏசு அவர்களைத் தட்டி வைக்கவில்லை. பரிசேயர்கள் எச்சரித்தது போன்று சீடர்களின் போக்கு அமைந்தது.
யூத மத குருமார்களுக்கு இப்போது தகுந்த காரணம் கிடைக்கின்றது.
"
இனம் முழுவதும் அழிந்து போவதை விட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது'' என்று மத குரு காய்பா கூறினார்.
                                                                                                                                   யோவான் 11:50
   விளக்கம் தெரியாத ஒரு கூட்டம் ஏசுவைச் சுற்றி வளைத்து, மொய்த்துக் கொண்டிருப்பதால் இப்போது அவரைப் பகிரங்கமாகக் கைது செய்வது பொருத்தமாகாது என்று எண்ணி, யூதாஸைப் பிடிக்கின்றார்கள்.
ஆயுதம் தாங்க ஆயத்தமான ஏசுஏசு இப்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குகின்றார். யூதர்களை எதிர்கொள்ளக் களமிறங்கவும், கைகளில் ஆயுதம் ஏந்தவும் ஆயத்தமாகின்றார். அதற்கான ஆணைகளையும் பிறப்பிக்கின்றார்.
   இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப் பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பிய போது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார். அவர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை'' என்றார்கள். அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக் கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக் கொள்ளட்டும்''
                                                                                                                                 லூக்கா 22:35, 36
யூதர்களுக்கு எதிரான புனிதப் போருக்காக ஒரு போர் முழக்கத்தை, ஒரு போர்த் தளபதியாக மாறிப் போன ஏசு முழங்குகின்றார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டச் சொன்ன ஏசு தான் இந்தப் போர் முழக்கத்தைச் செய்கின்றார்.
 
பேதுரு இயேசுவை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்து வந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?'' எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது; ஏழு முறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழு முறை என நான் உனக்குச் சொல்கிறேன்.
          மத்தேயு 18:21, 22எழுபது தடவை ஏழு முறை, அதாவது 490 முறை மன்னிக்க வேண்டும் என்று கூறிய ஏசு தான் இந்தப் போர்ப் பிரகடனத்தைச் செய்கின்றார்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
                                                                                                                           மத்தேயு 10:16
இந்த வெள்ளாடுகளைத் தான் வேங்கைகளாக மாறச் சொல்கிறார் ஏசு! சமாதானப் புறாக்களை சண்டைக் கோழிகளாக்கிக் கொண்டிருக்கிறார். ஏன்? சூழ்நிலை மாறி விட்டது. அதனால் ஏசுவின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. அதனால் தான் இந்தப் புனிதப் போர் முழக்கம். சீடர்களும் வாளாவிருக்கவில்லை. ஆசானின் ஆணையை ஏற்று இரண்டு வாள்களை வாங்கி விட்டனர்.
ஏசுவின் இன்னொரு முகம்இங்கே தான் ஏசுவின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். கிறித்தவ அழைப்பாளர்கள் ஏசுவின் ஒரேயொரு முகத்தை மட்டுமே காட்டுகின்றனர். அது தான் சமாதான முகம்; சாந்த முகம்; அமைதி முகம்; ஆன்மீக முகம்.

அவர்கள் ஏசுவின் மற்றொரு முகத்தை மறைத்தே விட்டனர். அது தான் சண்டை முகம்! சாகச முகம்! ஆர்ப்பரிக்கும் போர் முகம்! அரசியல் முகம்! இந்த முகத்தைக் கிறித்தவர்கள் திரை போட்டு மறைத்தே விட்டனர். 


அவ்வாறு மறைப்பதற்காக அவர்கள் இந்த வாளுக்கு ஆத்மீக வாள் என்று விளக்கம் தருகின்ற
னர்.

இதன்படி வாள் வாங்குவதற்குப் பண்ட மாற்றாகப் பயன்படுத்தப்பட்ட ஆடைகளும் ஆத்மீக ஆடைகள் என்று தான் கொள்ள வேண்டும். அப்படியானால் ஏசுவின் சீடர்கள் ஆடையில்லாமல் முழு அம்மணமாகத் தான் காட்சி தந்திருக்க வேண்டும். வாள் என்பதற்கு இப்படிப் பொருள் கொண்டால், ஏசுவின் சீடர்கள் நிர்வாணிகள் என்று பொருளாகி விடும்.

மக்களை எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்று பாருங்கள். ஆன்மீக வாள் என்றால் யாரையும் பதம் பார்க்காமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அது சாதாரண கூர்வாள் தான் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்துக் காட்டி விடுகின்றது.
இயேசு அவனிடம், "தோழா, எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
                                                                                                                                  மத்தேயு 26:50,51
ஏசு கைது செய்யப்படும் வேளையில் இந்த வாள் அரசுப் பணியாளரின் காதைக் கொய்து விட்டது. எனவே ஆன்மீக வாள் என்ற வாதம் ஒரே வீச்சில் அறுந்து போய் விடுகின்றது. ஏசு ஒரு ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் தர மாட்டார் என்ற ஒரு பக்கத்தை மட்டுமே கிறித்தவ அழைப்பார்கள் காட்டி வருகின்றனர். இங்கே ஏசுவின் இன்னொரு முகம் பட்டாங்கமாகத் தெரிகின்றது.
             அந்த இன்னொரு முகத்தை பைபிள் இன்னும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.
                                                                                                                                மத்தேயு 10:34, 35

மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
                                                                                                                                       லூக்கா 12:49-51

"
நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள்'' என்று சொன்னார்.
                                                                                                                                            லூக்கா 19:27
இராணுவத்திற்கு இரு வாட்கள் தாா?
   ஏசு போருக்காக ஆயத்தமாகும் போது அவரது ராணுவத்திற்கு இரு வாட்கள் போதுமா? என்ற கேள்வி இங்கே எழலாம்.
அதற்குப் பதில், போதும் என்பது தான். காரணம், ஏசு எதிர்கொள்ளப் போவது ரோமானிய ராணுவத்தை அல்ல! கோவில் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு குட்டி சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கின்ற மத குரு தலைமையிலான படையைத் தான்.
இது ரோமானியர்களை எதிர்த்து நிற்கும் யுத்தக் களம் அல்ல! அதற்குத் தான் மொத்தத் தளவாடங்களும் தேவை. யூதர்களை, யூதர்களே எதிர்த்து நிற்கும் இந்தக் களத்திற்கு இந்த இரட்டை வாட்கள் போதும். பாறையைப் போன்ற பேதுரு (பீட்டர்), யோவான் (ஜான்) போன்ற பக்த சீடர்கள் இருக்கும் போது ஏசுவிற்கு என்ன கவலை?
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger