முன்னால் த.மு.மு.க, தலைமை கழக பேச்சாளரின் மனம் திறந்த மடல்!!


அனுப்புநர்

  S.செய்யத அலி,
  முன்னாள் மாவட்ட செயலாளர், ம.ம.க.நெல்லை
  முன்னாள் த.மு.மு.க.தலைமை கழக பேச்சாளர்,
    புளியங்குடி.
    நெல்லை மாவட்டம்.

 
பெறுநர்
        மாவட்ட நிர்வாகிகள் / மாநில செயற்குழு உறுப்பினர்கள்,
        த.மு.மு.க. &  ம.ம.க.
        தமிழ்நாடு.


 
அன்புடையீர்!       
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

        இம்மடல் உங்களை பூரண உடல் நலத்துடனும், தூய இஸ்லாமிய உணர்வுகளுடனும் சந்திக்கட்டுமாக!

        எனது இக்கடிதத்தை திறந்த மனதுடன், விறுப்பு, வெறுப்புக்கு இடமளிக்காமல் வாசிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.

        அன்புச் சகோதரர்களே! நெல்லை மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த நான் த.மு.மு.க.வில் 13 ஆண்டு காலம் பணியாற்றியவன்.  1994 ஆம் ஆண்டு எனது 14வது வயதில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக் கொண்டு பள்ளிவாசல்களில் அடி, உதைகளை வாங்கி பிரச்சார களத்தில் போராடி தூய இஸ்லாத்தை நிலைநாட்டிட போராடியவன்.  1997ல் சமுதாய போராளி டாக்டர்.பழநிபாபா அவர்களின் மறைவுக்குப் பின் த.மு.மு.க.வில் இணைந்தேன்.  1999ம் ஆண்டு முதல் கிளை ஃ நகரம் ஃ மாவட்டம் ஃ மாநிலம் என பல்வேறு பொறுப்புகளில் த.மு.மு.க.வில் பணியாற்றினேன்.

        கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, கூலி எதையும் பெறாமல் முழுநேர பணியாளனாக, அல்லாஹ்விடத்தில் மட்டுமே நன்மையை எதிர்பார்த்து கழக பணியாற்றியவன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கழக வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டேன்.  இவற்றையெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. தாங்கள் நன்றாக அறிவீர்கள்.

        பல்லாயிரம் சகோதரர்கள் கழக பொறுப்பிற்கு வந்தது முதல் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, பிரதிபலனை எதிர்பாராமல் இரவு பகல் வேறுபாடின்றி தலைநகர் சென்னை முதல் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை த.மு.மு.க. இயக்கம் வளர அயராது பாடுபட்டு ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும்,  காவல் துறையாலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு ஜமாத்தார்களால் ஊர் நீக்கம், சொந்த குடும்பத்தார்கள் விரட்டி அடிப்பு, பிரச்சார களங்களில் மோதல், உயிர்பலி என்று பல்வேறு தியாகத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட இயக்கம் த.மு.மு.க. ஆனால் இந்த இயக்கம் இன்று தனிப்பட்ட இரண்டு நபர்களின் (ஜவாஹிருல்லாஹ்,  ஹைதர் அலி) சொத்தாக மாறிவிட்டது.  இவர்களின் ஜனநாயக விரோத, ஏதேச்சதிகாரத்தை கண்டித்து கருத்துரைக்கும் நிர்வாகிகள் மீது பொய் புகார்களை கூறி, எவ்வித விசாரணையும் இல்லாமல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் போக்கு இன்று வாடிக்கையாகிவிட்டது.  இந்நிலையில் புளியங்குடி தவ்ஹீத் ஜமாத் அறக்கட்டளைக்கு சொந்தமான இடமானது எந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சொந்தமானது அல்ல.  அறக்கட்டளையின் சொத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டு என்னைத் தொடர்ந்து தலைமை நிர்வாகிகள் தொந்தரவு செய்ததுடன் கொடுக்க மறுத்ததால் குற்றச்சாட்டு கூறி நீக்கிவிடுவதாகவும் மிரட்டினார்கள்.

                இவர்களின் இச்செயல்களை கண்டு மன வேதனை அடைந்து  கொண்டு இருக்கும்போது, 26-01-2011 அன்றைய தேதியிட்ட என்னுடைய ஈமெயிலுக்கு த.மு.மு.க.  தலைவர் M.H..ஜவாஹிருல்லாஹ்விடம்  இருந்து என்னை நீக்கிவிட்டதாக மெயில் கடிதம் வந்தது.  கழகத்திற்காக பாடுபட்ட என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமல் O.U.ரஹ்மத்துல்லாஹ் விசாரணை செய்ததாக பொய்கூறி என்னை நீக்கி உள்ளார்கள்.

ஆனால் என்னுடைய 13 ஆண்டுகால அப்பழுக்கற்ற தூய பணிகளுக்கான அங்கீகாரமாக கடந்த 28-01-2011 அன்று வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்ற த.மு.மு.க. மாநில செயற்குழு அமைந்ததாகவே கருதுகிறேன்.  எனக்கு எதிராக எடுக்கப்பட்ட த.மு.மு.க தலைமை நிர்வாகக் குழுவின் ஒரு தலைபட்சமான, தான்தோன்றித்தனமாக எடுக்கப்பட்ட முடிவை ரத்துசெய்திட வேண்டும் என வலியுறுத்தி பல மாவட்ட நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள் செயற்குழுவில் நியாயக்குரல் எழுப்பி பலமணி நேரம் போராடியது எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.  த.மு.மு.க. தலைமை எவ்வித விசாரணையும் இன்றி பல கட்டங்களில் பல மாவட்ட நிர்வாகிகளை கேள்வி கணக்கில்லாமல் நீக்கம் செய்திடும் முடிவை எடுக்கும்போது, அவர்களுக்காக நியாய குரல் எழுப்பிட யாரும் முன்வராத நிலையில் எனக்காக தலைமையிடம் போராட ஆள் இருக்கின்றது என்பதை நினைத்திடும் போது கண்களில் கண்ணீர்! (அல்ஹம்துலில்லாஹ்)..

        ஆனால் அதே நேரத்தில் தலைமை எடுத்த நிலைப்பாட்டை ஆதரித்தும், மாநில செயற்குழுவின் அனலை தணிப்பதற்காகவும், எனக்காக வாதாடிய சகோதரர்களின் நியாய குரலை அடக்குவதற்காகவும் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது வேண்டுமென்றே அபாண்டமான, ஜீரணிக்க முடியாத பொருளாதார குற்றச்சாட்டை சுமத்தி என்னை அங்கு அசிங்கப்படுத்தி உள்ளார்.  எனது பெயரை களங்கப்படுத்தினால் மட்டுமே என்னை உங்களிடமிருந்து தனிமைப்படுத்த முடியும் என நினைத்து அக்காரியத்தை செய்துமுடித்துள்ளார்.

        இந்நேரத்தில், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கூறிய புளியங்குடி பள்ளிவாசல் பணம் கையாடல், ஊழல் குற்றச்சாட்டு அபாண்டமானது என்பதை பிற செயற்குழு உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தவும், எனக்காக வாதாடிய அந்த நல்ல உள்ளங்களுக்கு நீதிக்காகத்தான் போராடி உள்ளோம் என்கிற மன ஆறதலை ஏற்படுத்துவதற்காகவுமே இக்கடிதத்தை உங்கள் அனைவருக்கும் எழுதுகின்றேன்.

        பிரச்சனையின் ஆரம்பத்துக்கு செல்வதற்கு முன்பாக சில ஆண்டுகள் பின்னோக்கி சென்று சில சம்பவங்களை தங்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

சகோதரர்களே!

        இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக துவக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு மாற்றமாக வாரிய பொறுப்பை ஏற்றவுடன் பதவிக்காக ஆட்சியாளருக்கு மாநில நிர்வாகிகள் ஜால்ரா போட ஆரம்பித்தவுடன் கழகத்தின் வீரியம் குறைய தொடங்கிவிட்டது.  கழகத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்தவர்கள் மாநிலம் முதல் கிளை கழகம் வரை தாங்கள் சார்ந்து இருக்கும் மஹல்லாக்களின் நன்மைக்காக உண்மையான காரணங்களுக்காக வாரிய தலைவர் ளு.ஹைதர் அலி அவர்களை சந்திக்கும்போது மாநில பொருளாளர் ழு.ரு.ரஹ்மத்துல்லா முதல் கிளை நிர்வாகிகள் வரை அவமானப்படுத்தப்பட்டார்கள்.  கழகத்திற்காக உழைத்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள்.  ஆனால் செல்வந்தர்களும், வாரிய சொத்தை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களும் வாரிய தலைவர் ஹைதர் அலி அவர்களால் கண்ணியப்படுத்தப்பட்டனர்.

        பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை எவரையும் மதிக்காமல் அவர் செயல்பட்ட விதத்தையும் சகோ.கோவை செய்யது அவர்களின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் தன்னுடைய ஆற்றலால், தன் முயற்சியால் தமக்கு கிடைத்த பதவி என நினைத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாகவும், அகம்பாவமும், கர்வமும் தலைக்கேறிய நிலையில் உள்ளார் பொதுச் செயலாளர் ஹைதர் அலி எனக் கூறுவார்.    இவ்வாறு இருந்த அவரது செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தவர்களில் அன்றைக்கு நானும் ஒருவனாக இருந்தேன்.  வக்பு வாரியத்தில் இவரது தனிப்பட்ட செயல்பாடுகளில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஒட்டுமொத்த கழகமும் பதில் சொல்ல வேண்டி வந்தது.  இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது.  கட்சியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, த.மு.மு.க. தலையீடே இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன், கட்சியை கைப்பற்ற அவர் செய்த சதிவேலைகளை அம்பலப்படுத்தியதற்கு பின்பாக அவரிடமிருந்து கட்சி காப்பாற்றப்பட்டது.இதிலும் எம்முடைய பங்கு இருந்தது.

       பின்னர் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ம.ம.க.வை அழிப்பதற்காக அவர் எடுத்துக் கொண்ட பகிரங்கமான முயற்சிகளுக்கு எதிராக மாபெரும் கருத்துரவாக்கம் செய்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.  மேலும் நெல்லை மாவட்டத்தில் தனக்கு என அவர் உருவாக்கிய கோஷ்டி அரசியலுக்கு எதிரானவர்களோடு  நான் கைகோர்த்தது என இவைகள் அனைத்தும் என் மீது சகோ.ஹைதர் அலி அவர்களின் தீராத பகையை ஏற்படுத்தியது.  இந்நிலையில் நெல்லையில் அவர் உருவாக்கிய கோஷ்டியை சேர்ந்தவர்களின் பல மாத முயற்சிகளுக்குப் பின்னால் எனது ஊரில் எனக்கு எதிரான கோஷ்டி உருவாக்கப்பட்டது.  ஒரு சிலரை கையில் வைத்துக் கொண்டு பொய்யான காரணத்தை வைத்து பிரச்சனை செய்ய சொன்னார்கள்.  பிரச்சனையும் எழுந்தது.  10 ஆண்டுகாலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகுந்த ஒற்றுமையோடும், கட்டுக்கோப்போடும், சிறப்பான முறையில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த நகர அமைப்பிற்கும் எடுத்துக் காட்டாக எனது ஊர் விளங்கியது.  எமது நகர அமைப்பை போன்று எவருமே செயல்பட முடியாத அளவுக்கு செயல் திட்டங்கள் பிரமிக்க வைக்க கூடியதாக இருந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)

       த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் இதற்காக பலமுறை என்னை பாராட்டியுள்ளார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று உருவாக்கப்பட்ட இந்த கோஷ்டிகள் மூலமாக எனக்கு எதிரான அவதூறுகள் பலமாக பரப்பப்பட்டது.  சகோதரத்துவம், கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது.  சகோதரத்துவம் உடைந்தது.  கழக வளர்ச்சி கடந்த 6 மாதமாக பெரிதும் பாதிக்கப்பட்டது.  கழகம் புளியங்குடியில் 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்டது.  இந்நிலைக்கு காரணமான கயவர்கள்.ஹைதர் அலி அவர்களின் நிழலில் ஒதுங்கினார்கள்.  நானோ, நெல்லை மாவட்ட நிர்வாகமோ, த.மு.மு.க. தலைமை நிர்வாகமோ ஒன்றுமே செய்ய முடியவில்லை.  கழக கட்டமைப்பையும், சகோதரத்துவத்தையும் உடைத்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட த.மு.மு.க. தலைமை நிர்வாக குழு தயங்கியது என்கிற நிலையை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

        இப்போது விசயத்துக்கு வருவோம்!  மாநில செயற்குழுவில் மதியம் 3 மணிக்கு பிறகு பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என் மீது சுமத்திய பள்ளிவாசல் பணம் மோசடி தொடர்பான குற்றச்சாட்டு இன்றைக்கு அல்ல.  மாறாக நான் த.மு.மு.க மாவட்ட பொருளாளராக இருக்கும் போது கடந்த 2010 ஜீலை மாதத்தில் எனது ஊரில் உள்ள ளு.ஹைதர் அலி அவர்களின் ஆலோசனையில் செயல்படும் கோஷ்டியினரால் பரப்பப்பட்டது.

        இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை சென்னையில் த.மு.மு.க. தலைமையகத்தில் வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற்றது.  இவ்விசாரணையின் போது பேரா.ஜவாஹிருல்லாஹ் சகோ.ஹைதர் அலி, ம.ம.க.  P.அப்துல் சமது ஆகியோர்  உடனிருந்தனர்.

        விசாரணையில், நான் 1 ரூபாய் மோசடி செய்திருந்தாலும் நீக்கிவிடுவது என்கின்ற அதிதீவிர முடிவில் சகோ.ஹைதர் அலி அவர்கள் இருந்தார்கள்.  அல்லாஹ்வின் உதவி மட்டுமே அன்றைக்கு எனக்கு உதவியாக இருந்தது.  விசாரணையில் குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. (திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் வசூலிக்கப்பட்ட சில ஆயிரம் ரூபாய்க்கும் திருச்சி லால்குடியைச் சார்ந்த நுச.ஷர்புதீன் அவர்கள் மூலமாக சவுதி அரேபியாவின் குடிமகனாகிய அரபு சகோதரர் முகமது அல் பர்ராஜ் அவர்களது சொந்த பணம் ரூ.3 லட்சம் உள்ளிட்டவைகளுக்கும், O.U.R. கொடுத்த பணம் ரூ.5 ஆயிரமும் சேர்த்து கணக்கு காண்பிக்கப்பட்டது).  ஆனால் குற்றச்சாட்டை பரப்பிய அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.  இதனை கண்டித்து நான் வாடகை கட்டிட மர்கஸ் நிர்வாகத்திலிருந்து ஒதுங்கி கொள்வதாகவும் வேறு யாரையாவது வைத்து மர்கஸ் நிர்வாகம் பார்த்து கொள்ளுங்கள் என்று நானே கூறிவிட்டதாலும், வாடகை கட்டிடம் மர்க்ஸ்க்கு அமைப்புக் குழு நியமனம் செய்யப்பட்டது.  அதே நேரம் அந்த விசாரணை நடைபெற்ற இடத்தில் வைத்தே நான் கோரிக்கை வைத்தேன்.   மேற்படி அவதூறு பிரச்சாரம் தொடர்பான உண்மை நிலையை எமது ஊரில் உள்ள மக்களுக்கு மத்தியில் தலைமை தெளிவுபடுத்திட வேண்டும் என்பதுதான். எனது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன்படி விசாரணை முடித்த 2 நாள் கழித்து ஆகஸ்ட் 6 ம் தேதி வெள்ளிக்கிழமை எமது பள்ளிவாசலில் நடைபெற்ற ஜீம் ஆ உரையில் தென்காசி  மைதீன் சேட்கான் அவர்களின் மூலமாக விரிவாக விளக்கம் கொடுக்கப்பட்டது.  'பள்ளிவாசல் பணத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை.  குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.  எனவே அவதூறை நம்பாதீர்கள்!  ஒற்றுமையுடன் அல்லாஹ்வுக்காக செயல்படுங்கள'; என தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் ஜீம்ஆ உரையாற்றி புளியங்குடியில் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். (VIDEO ஆதாரம் உள்ளது) அதன்பின்பு 1 நாள் கழித்து ஆகஸ்ட் 8 ம் தேதி காலையில் நடைபெற்ற புளியங்குடி நகர த.மு.மு.க. பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ம.ம.க. P.அப்துல்சமது, த.மு.மு.க. ழு.ரு.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  அவர்கள் ஆகஸ்ட் 4ம் தேதி தலைமையில் நடைபெற்ற விசாரணையை குறிப்பிட்டு பேசினார்கள்.  ஆதாரம் எதுவும் இன்றி எவருடைய மானத்தோடும் விளையாடாதீர்கள்!என அறிவுரை கூறிவிட்டு சென்றனர்.

(குறிப்பு : இதே தினத்தன்று (ஆகஸ்ட் 8) தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற சகோ ஹைதர் அலி அவர்கள் வருகை தந்தார்கள்.  அப்பொதுக் கூட்டத்திற்கு ம.ம.க. P.அப்துல்சமது அவர்களும் கலந்துகொள்ள சென்றார்கள்.  அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்கள்.   ஆகஸ்ட் 8,9 ம் தேதிகளில் தென்காசியில் சகோ.ஹைதர் அலி அவர்களால் நெல்லை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கோஷ்டியின் அட்டகாசத்தை நேரில் கண்டார்கள்.  மாவட்ட நிர்வாகத்தை மதிக்காமல் நிழல் மாவட்ட நிர்வாகமாக அவர்கள் செயல்படுவதையும் அதற்கு ஹைதர் அலி அவர்கள் உரமிட்டு வளர்க்கிறார் என்பதையும் P.அப்துல் சமது அவர்கள் பார்த்துவிட்டு மனம் குமுறிக் கொண்டே மன வருத்தத்தோடு சென்னை சென்றார் என்பதை இங்கே தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.)

இறுதியாக எனது நியாயமான கேள்விகள் என்னவென்றால்?

பள்ளிவாசல் பணம் தொடர்பாக நான் தவறு செய்திருந்தால். .. . ?

1)    ஆகஸ்ட் 4ம் தேதி விசாரணையின்போது நான் வகித்து வந்த த.மு.மு,க. மாவட்ட பொருளாளர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?

2)    ஆகஸ்ட்6 வெள்ளிக்கிழமை ஜீம்ஆ உரையில் அல்லாஹ்வின் பள்ளிவாசலில் வைத்து தென்காசி மைதீன் சேட்கான் அவர்கள் பொய் பேசினாரா?

3)    ஆகஸ்ட் 8 புளியங்குடி பொதுக்குழுவுக்கு வந்த P.அப்துல்சமது அவர்களும், மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் பொய் பேசினார்களா?

4)    ஆகஸ்ட் 4, 2010 முதல் 26-01-2011 வரை 6 மாத காலம் நெல்லை மாவட்ட நிர்வாகியாகவும், தலைமை கழக பேச்சாளராகவும் இருந்துள்ளேன்.  பள்ளிவாசல் பணத்தை மோசடி செய்த குற்றவாளியை ஏன் தண்டிக்காமல் விட்டிருந்தீர்கள்?

5)    டிசம்பர் 6, 2010 பாபர் மசூதி மீட்பு போராட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்திட சிவகங்கை மாவட்டத்திற்கு அனுப்பியது ஏன்?

6)    2011 ஜனவரி 25ம் தேதி வரையில் சகோ.ஹைதர் அலி அவர்களால் எனக்கு ஏற்படும் மன உளைச்சலை பற்றி நான் சந்திக்கும் அனைத்து தலைமை நிர்வாகிகளிடமும் புகார் தெரிவிக்கும் போது, ஹைதர் அலியின் கோரத் தாண்டவம் அதிகமாக உள்ளது.  கழகம் உடையும்  சூழ்நிலை உள்ளது எனவே பொறுமையாக இரு. பொறுத்துக் கொள் எனக் கூறியதோடு, மாநிலப் பொதுக்குழுவுக்குப் பின்னர், ஹைதர் அலி போய்விடுவார் எனவும், எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறியது எல்லாம் நாடகமா?  அல்லது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் ஈனச் செயலா?

மிக மிக முக்கியமான கேள்வி

7)    கடந்த 14-11-2010 அன்று சகோ ஹைதர் அலி அவர்களை சந்தித்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடமும், சில நாட்கள் கழித்து சந்தித்த தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளிடத்திலும், இன்னும் பல பேர்களிடமும், என்மீது வேண்டுமென்றே அவதூறுகளை அவர் பரப்பினார்.  எந்த விசாரணையும் இன்றி, வேண்டுமென்றே பல கேவலமான அவதூறுகளை என் மீது சுமத்தினார்.  அந்நேரத்திலும் பள்ளிவாசல் பணம் மோசடி செய்தவன் என குற்றம் சாட்டினார்.  இதனை கேள்விப்பட்டவுடன் நான் நேரடியாக கோவைக்கு சென்று, அங்குள்ள நிர்வாகிகளிடம் உண்மை நிலவரத்தை கூறிவிட்டு, ளு.ஹைதர் அலி உண்மையாளராக இருந்தால் நிரூபிக்கட்டும்! என்ன தண்டனை வேண்டுமானாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என கூறிவிட்டு வந்தேன்.  ஆனால் இதுநாள் வரை நிரூபிக்கப்படவில்லை.

8)    கடந்த 23-11-2010 அன்று தலைமையகத்தில் நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவுக்கு முதல் நாள் 22ம் தேதி நிர்வாகக் குழுவுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.   அக்கடிதத்தில் சகோ.ஹைதர் அலி அவர்கள் என்மீது சுமத்தும் மோசமான அவதூறை விசாரியுங்கள்.  பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்! குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் ஹைதர் அலி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியிருந்தேன்.  அதற்கும் எந்த விசாரணையும் இல்லை.

9)    அடுத்து, அதே கருத்தை வலியுறுத்தி 'எனது உயிரை விட எனது மானம் முக்கியம்' எனவே ஹைதர் அலி கூறிய குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுங்கள் என கடந்த 31-12-2010 அன்று தலைமை நிர்வாக குழுவுக்கு மறுபடியும் நினைவூட்டல் கடிதம் எழுதினேன்.  அதற்கும் பதில் இல்லை. என்ன கொடுமை பார்த்தீங்களா?      

10)    கடந்த ஜனவரி 26 ம் தேதியிட்ட ஒரு கடிதம் (இமெயில்) மூலமாக பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது.  அக்கடிதத்தில் எவ்வித விசாரணையும் இன்றி, தான்தோன்றித்தனமாக பொய்யான 4 காரணங்களை கூறி 13 ஆண்டுகாலம் உழைத்த உண்மை தொண்டனை எவ்வித ஆதாரமுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்காக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூறியிருக்கும் 4 காரணங்களும் எவ்வளவு அபத்தமானது என்பதை அக்கடிதத்தை படிக்கும் அனைவரும் நன்றாக அறிவார்கள்.  இருப்பினும் அக்கடிதத்திலேயே 5வது காரணமாக பள்ளிவாசல் பணம் மோசடியில் ஈடுபட்ட காரணத்தினாலும் எனக்கூறி நீக்கம் செய்திருக்க வேண்டியது தானே?  ஏன் செய்யவில்லை?

11)    என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தவுடன் தமிழகம் முழுவதும் உள்ள என் மீது பாசம் கொண்ட த.மு.மு.க. நிர்வாகிகள் தலைமை கழகத்தில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டபோதும்,  வெளிமாவட்ட நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சொல்லாத காரணத்தை தலைமை நிர்வாகிகள் செயற்குழுவில் சொன்ன காரணம் என்ன?

12)    எனது விவகாரமாக தலைமை நிர்வாகிகளிடம் சண்டையிட்ட முக்கியமான ஒரு நபரிடம் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், அவரை 3 மாதம் பொறுத்துக் கொள்ள சொல்லுங்கள் இப்போது நிலைமை சரியில்லை, அவரை பொறுமையாக இருக்கச் சொல் என கூறியதன் காரணம் என்ன?
13)  செயற்குழுவுக்கு 10 நாட்களுக்கு முன்பே ஹைதர் அலி TORTURE பொறுக்க முடியாமல் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததை ஏற்க மறுத்து பொதுக்குழு முடியட்டும்  ஹைதர் அலி சென்று விடுவார் என்று கூறியதன் காரணம் என்ன?

 எனவே சகோதரர்களே! . . . .          


ஜனவரி 28 ந் தேதி காலை 11 மணிக்கு பிறகு நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து கொண்டு தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) ஆகியோரின் கம்பெனியாக த.மு.மு.க. மாறிவிட்டது.  கருத்துச் சுதந்திரம் இல்லை என நான் நெல்லை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதற்கு பின்பாக நான் திருடனாகிவிட்டேன்.  என்ன கொடுமை இது! பாருங்கள்! இந்த அநியாயத்தை நியாயக் குரல் எழுப்பி மாநில செயற்குழுவில் பேசிய அனைத்து உள்ளங்களுக்கும் வல்ல இறைவனிடம் 'துஆ' செய்கின்றேன்.  நீங்கள் நீதிக்காகவே போராடியுள்ளீர்கள்.  'திருடனுக்கு பரிந்து பேசவில்லை.  அநீதி இழைக்கப்பட்ட, கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி ஜீவனுக்காகவே வாதாடியுள்ளீர்;கள்.  (அல்ஹம்துலில்லாஹ்) எனவே நீங்கள் பெருமைப்பட்டு கொள்ளலாம்.

        என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்வதற்கு தலைமைநிர்வாக்குழு கூறியுள்ள முதல் காரணம், கழக பொதுச்செயலாளர் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், இழிவாகவும், பொதுஇடத்தில்                                                                                                                                                                                                     பேசியதுதானே சகோதரர்களே!

        சகோ.ஹைதர் அலி அவர்களை நான் தரக்குறைவாகவும், இழிவாகவும் எவனிடத்தில் பேசினேன்? பேசியது தொடர்பாக என்னை ஏன் விசாரணை செய்யவில்லை.  விசாரிக்காமலேயே 13 ஆண்டுகாலம் உழைத்தவனை அடிப்படை உறுப்பினர் பொருப்பிலிருந்து நீக்கம் செய்திடும் அதிகாரத்தை தலைமை நிர்வாக குழுவுக்கு யார் கொடுத்தது? இப்படி விசாரிக்காமலேயே யாரை வேண்டுமானாலும் நீக்கம் செய்யலாம் என்கிற உரிமையை செயற்குழு பொதுக்குழு இவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதா?

        தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களே!  எல்லாம் சிலகாலம் தான்.  இதேநிலை உங்களில் எவருக்கும் வரலாம்.  அல்லாஹ்வை மறந்து ஆட்டம்  போடாதீர்கள்!

        சரி!  நான் கேட்கிறேன்!

சகோ.ஹைதர் அலி அவர்கள், பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை பலநேரங்களில் பொதுஇடத்தில் தரம் தாழ்த்தி விமர்சித்திருக்கிறார்களே!

அவருக்கு என்ன தண்டனை?

    மௌலவி J.S.ரிபாயி, தமிமுன்அன்சாரி, P.அப்துல் சமது ஆகியோரைப்பற்றியும், என்னைப்பற்றியும் தரம் தாழ்ந்து ஹைதர் அலி அவர்கள் கடுமையாக பலரிடத்தில் விமர்சித்திருக்கிறாரே?  அதற்கு என்ன தண்டனை?

சகோ.ஹைதர் அலி அவர்களை வாரிய பொறுப்பு ஏற்ற நாள்முதல் இன்றுவரை கடுமையாகவும், மிக, மிக இழிவாகவும், கேவலப்படுத்தி, என்னிடத்திலும், என்னைப் போல் பலரிடத்திலும் பேசியுள்ள கோவை செய்யது மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

        மிகச் சமீபத்தில், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகியிடத்திலும், என்னிடத்திலும் பேரா.ஆ.ர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களை மிக, மிக கொச்சைப்படுத்தி கேவலமாக விமர்சனம் செய்த கோவை செய்யது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

சரி, . . .

    நான் ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாக விமர்சித்தேன் என்பதை ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டாலும் நான் மட்டுமா அவரை பேசினேன்?

       ஹைதர் அலி அவர்களை தரக்குறைவாகவும், மிக, மிக கேவலமாகவும், இன்னும் ' உளவுத் துறையின் கைக்கூலி' என்றெல்லாம் விமர்சித்தவர்கள் தலைமை நிர்வாக குழுவில் அங்கம்வகிக்கும் மாநில நிர்வாகிகள் தானே?

  அவர்களுக்கு என்ன  தண்டனை  சகோதரர்களே!

        என்னுடைய 13 ஆண்டுகால உழைப்பினாலும், வளர்க்கப்பட்ட  அமைப்பு என்பதால் பல ரகசியங்களை வெளியிடாமல் பாதுகாத்து வருகின்றேன்.  மாநில நிர்வாகிகள், என் மீது எல்லை மீறும்போது நானும் எல்லை மீறுவேன் என்பதை இப்போதைக்கு சொல்லி           வைக்கின்றேன்.

           என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது நீங்கள் அங்கம் வகிக்கும் இயக்கத்தில் இல்லை.  எனது இரத்தத்தை உறிஞ்சிய, எனது இளமையை அபகரித்துவிட்டு, 13 ஆண்டுகால எனது இயக்கப் பணியையும் பயன்படுத்திக் கொண்டு இன்று என் மீது அவதூறு பரப்பும் தலைமை நிர்வாகிகள் (ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி) மீது நிச்சயம் மறுமையில் வல்ல இறைவனிடம் வழக்கு தொடருவேன்.  எனது உடல் பலவீனத்தையும் மறந்து இரவு பகல் பாராமல் உழைத்;த உண்மைத் தொண்டனை விசாரணை எதுவும் இன்றி அநியாயமாக பழிபோடும் அனைத்து தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களும் அல்லாஹ்விடம் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும்.

        என் அன்பு சகோதரர்களே!  நான் இப்போது உங்களுக்கு அறவே பிடிக்காத ஒரு இயக்கத்தில் சேர்ந்துவிட்ட ஆத்திரத்தில் இருப்பீர்;கள்.  இருப்பினும் உங்களுடன் 13 ஆண்டுகாலம் பணியாற்றியவன் என்கிற முறையில் ஒரே ஒரு கோரிக்கை மட்டும்வைக்கின்றேன்.

சகோதரர்களே!  தன்னுடைய சுயநலத்திற்காக சகோ.ஹைதர் அலி அவர்களோடு என்னைப்போல பலரையும் பகடை காயாக்கி, மோதச் செய்துவிட்டு இன்றைக்கு எதிர்வரும் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலுக்காக ளு.ஹைதர் அலி அவர்களோடு நேசக்கரம் நீட்டுவதற்கு உண்மையை குழிதோண்டி புதைத்துவிட்டு என்னைப் போல் பலரையும் அவமானப்பட செய்த பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் வார்த்தை ஜாலத்தையும், கபட நாடகத்தையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.  தான் நினைக்கும் காரியம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் பலிகடாவாக்க தயங்கவே மாட்டார் பேரா.ஜவாஹிருல்லாஹ்.  தான் நினைத்தால் சகோ.ஹைதர் அலி அவர்களுடன் கூட்டு!  நினைக்கவில்லை என்றால் வேட்டு! என்ன கொடுமை பாருங்கள்! மாநில நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதவி சுகத்திற்காக எதைவேண்டுமானாலும் செய்யத் துணிபவர்களாகவே உள்ளனர். இப்போதைக்கு அவர்களுக்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்த திருப்தியில் உள்ளனர்.  தேர்தலுக்கு பின் மோதல் ஆரம்பமாகும்.  என்னைப்போல் பலர் அப்போது அவர்களுக்கு தேவைப்படும்!  நிச்சயம் என்னைப் போல் ஏமாளிகள் ஜவாஹிருல்லாஹ்,P.அப்துல் சமதுவுக்கு கிடைப்பார்கள்.

எனவே தூய உள்ளங்களே!  அன்பு மாவட்ட நிர்வாகிகளே!  மாநில செயற்குழு உறுப்பினர்களே! நம்பிவிடாதீர்கள், மோசம் போய்விடாதீர்கள்!  என்பதை மட்டும் அறிவுரையாக இல்லாமல், கோரிக்கையாக பாசத்துடன் உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  எனவே தலைமையை மாற்ற முயற்சியுங்கள்!

 எதையும் தீர விசாரியுங்கள்!  ஆய்வு செய்யுங்கள்!  கேள்விப்படுவதை எல்லாம் நம்பி விடாதீர்கள்.  எல்லாம் வல்ல இறைவன் நாம் ஆற்றும் அனைத்து நற்பணிகளுக்கும் உயரிய கூலி வழங்கிட போதுமானவன்.  மறுமையில் இறைவனின் கடும் பிடியிலிருந்து தப்பிக்க உண்மை மட்டும் பேசுவோம்!

                  வஸ்ஸலாம்.

                                           இப்படிக்கு,

                                   (S.செய்யது அலி)
                      முன்னாள் மாவட்ட செயலாளர்,

                            மனித நேய மக்கள் கட்சி,

                             நெல்லை மாவட்டம்,

                    முன்னாள் தலைமை கழக பேச்சாளர்.

     முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர்.

நன்றி:-http://rhnthoweed.blogspot.com/
நன்றி - ayanguditntj.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger