வீடியோவை நீக்க முடியாது – 2 வது முறையும் மறுத்த அமெரிக்க நீதிமன்றம்!


நடிகை Lee Garcia
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி தயாரிக்கப்பட்ட அமெரிக்க படத்தில் நடித்த நடிகை Lee Garcia லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிமன்றத்தில் ”தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் தனது வாய் அசைவிற்கு வேறு குரல் டப் செய்யப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் விதமாக படம் தயாரித்துள்ளதாகவும்” அமெரிக்க நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் தான் இடம் பெற்றுள்ள அந்த படத்தை Youtube நீக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். நடிகையின் கோரிக்கையை ஏற்க மறுத்து லாஸ் ஏன்ஜல்ஸ் நீதி மன்றம் முன்னர் தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து காப்புரிமை மீறல் என்ற அடிப்படையில் Federal Court ல் மற்றுமொரு வழக்கு தொடர்ந்தார்.
இதில் ”எனது அனுமதி இல்லாமல் என்னை தவறாக சித்தரிக்கும் படத்தை தயாரித்துள்ள இயக்குனர் மீதும் அதை வெளியிட்டள்ள Youtube மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் Youtube ல் இருந்து அந்த படத்தின் வீடியோவை நீக்குமாறு” கூறி இருந்தார்.
அந்த வழக்கை நேற்று விசாரித்த லாஸ் ஏன்ஜல்ஸ் Federal Court நீதிபதி தான் நடித்த படம் குறித்த காப்புரிமையை நடிகை Lee Garcia ரியாக நிரூபிக்க வில்லை எனவே அவரது கோரிக்கையை ஏற்று Youtube க்கு வீடியோவை நீக்குமாறு உத்தரவிடமுடியாது எனக் கூறி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த படத்திற்கு எதிராக அமெரிக்காவில் போடப்பட்ட ஒரே ஒரு வழக்கு இது தான். அந்த நடிகை எத்தனை முறை வழக்கு தொடர்ந்தாலும் அதையும் அமெரிக்க நீதிபதிகள் நிராகரித்து விடுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க முடியாது எனக் கூறியதுடன் வீடியோவையும் நீக்க முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
”நான் பேசாதவற்றை நான் பேசியதாக கூறி ஒரு வீடியோவை Youtube எனது அனுமதியில்லாமல் வெளியிட்டுள்ளது” என சம்பந்தட்ட நபரே புகார் அளிக்கையில் அதையெல்லாம் ஏற்க முடியாது என அமெரிக்க நீதிமன்றம் அசால்ட்டாக தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் ஒரு சாராக்கு மட்டும் தானா?
இந்த நீதிபதியின் வீடியோவை Youtube ல் போட்டு நீதிபதியின் பேச்சை மட்டும் Edit செய்து நீதிபதியின் குடும்பதாரை நீதிபதியே அசிங்கமாக திட்டுவது போன்று ஒருவன் செய்தால் இந்த நீதிபதி அப்பவும் இந்த தீர்ப்பை தான் வழங்குவானா ?
அமெரிக்காவின் முஸ்லிம் வீரோத போக்கு நீபதியின் தீர்ப்பில் தெளிவாக தெரிகின்றது.
அந்த நடிகை துவண்டு விடாமல் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகின்றேன் எனக் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.
நன்றி - tntj.net 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger