உலமாக்களால் தூண்டி விடப்பட்ட மார்க்கம் அறியாத மக்கள் தவ்ஹீத் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் கல வரங்களை ஏற்படுத்தினார்கள்.
பீ.ஜே. அவர்கள் முத்துப்பேட்டை, நாகூர், மதுரை, சென்னை, உமுராபாத், பொதக்குடி, பண்டாரவாடை, லெப்பைக் குடிக்காடு, தேங்காய்பட்டினம், கோவை எனப் பல ஊர்களில் தாக்கப்பட்டார். மேலப்பாளையத்தில், கொலை
செய்யும் முயற்சியில் மேடையேறி அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். மற்ற பிரச்சாரகர்களும் ஆங்காங்கே தாக்கப் பட்டனர்.
அந்தத் தடைகளைக் கண்டு தவ்ஹீத் பிரச்சாரங்களும் கொள்கைவாதிகளும் நிலை மாறவில்லை. முன்பைவிட இன்னும் உறுதியுடனும் தீவிரமாகவும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
ஜாக் தலைவராக இருந்த கமாலுத்தீன் மதனியும், மதீனாவில் படித்த மற்ற மதனிகளும், சவூதி அரசிருந்து சம்பளம் பெற்று வந்தனர். இந்தத் தொடர்பை பயன்படுத்தி சவூதி ஆதரவுடன் தொடர்பு கொண்டு ஜாக் இயக்கத்துக்கும் நிதியாதாரங்களைப் பெற முயன்ற னர். எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மேடையில் அரபு மொழியில் பெரிய பேனரைக் கட்டி அதை வீடியோவாக்கி அதை சவூதிக்கு அனுப்புவது மட்டுமே குறிக்கோளாக ஆனது.
அரபு நாட்டிருந்து உதவிகள் பெற வேண்டாம் என்று பீ.ஜே. மறுப்புத் தெரிவித்ததால் அவரை அழைக்காமலே ஆலோசனைக் கூட்டம் நடக்கலானது.
அரபு நாட்டுப் பணம் வர ஆரம்பித் துள்ளது என்பதற்காக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் சுய ஆதாயத்துக்காக அரபு நாட்டு நிதி உதவி பெறுவதை ஆதரித்து தூபம் போட்டனர். பள்ளி வாசல், மதரஸா, நோன்புக் கஞ்சி, தஃவா என்று பல வகைகளில் இலட்சம் இலட் சமாகப் பணம் வர ஆரம்பித்தது. என்ன வரவு என்பதும், என்ன செலவு என் பதும் மதீனாவில் சம்பளம் வாங்குப வர்களுக்கும் மட்டும்தான் தெரியுமே தவிர, ஜாக் மாநில நிர்வாகிகளுக்குக் கூட தெரியாத நிலை ஏற்பட்டது.
தங்களுக்கு கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக தவ்ஹீத்வாதி இல்லாத ஊரிலும், பள்ளிவாசல் கட்டப் பணம் வாங்குவது மட்டுமே இவர்களின் குறிக் கோளாக ஆனது. ஆனாலும் சிரமப் பட்டு உருவாக்கிய இயக்கம் பாழாகி விடக்கூடாது என்பதற்காக பிரச்சார கர்கள் உள்ளிருந்து போராடி வந்தனர்.
கோவை அய்யூப் உள்ளிட்ட பலர் மீது பொருளாதார மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் பீ.ஜே. யால் எடுத்துக்காட்டப்பட்டும் அவர் மேலான நிலைக்கு உயர்த்தப்பட்டார். அதற்கு கமாலுத்தீன் மதனியும் உடந்தை என்பது உறுதியானது. (ஜாக் விளக்கம் என்ற 5 சி.டி.களில் ஆதாரம் பார்க்கவும்.)
அரபு நாடுகளில் உதவி பெறக் கூடாது; மோசடிக்காரர்கள் பொறுப்பில் இருக்கக் கூடாது; கொள்கைவாதிகளுக்கு தட்டிக் கேட்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் அதற்காக உறுப்பி னர் அட்டை வழங்க வேண்டும் என் பன போன்ற கோரிக்கைகளை கமாலுத்தீன் மதனி ஏற்க மறுத்தார். இவர்களுடன் சேர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
மற்ற நிர்வாகிகளுக்குக் கூடத் தெரியாமல் வரவு - செலவு வைப்பது முறையா? நீங்கள் மரணித்து விட்டால் என்னவாகும் என்று கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே. நேரடியாகக் கேட்டபோது, ''எல்லாக் கணக்குகளும் என் மனைவிக்குத் தெரியும்'' என்று பதில் அளித்தார். இவர் நிர்வாகிகளிடம் கூட கணக்குக் காட்டத் தயார் இல்லை என்றால், இதை விட மோசடி இருக்க முடியாது என்ற எண்ணம் தவ்ஹீத் பிரச்சாரத்தில் முன்னணியில் இருந்த அனைத்து பிரச்சாரகர்களுக்கும் ஏற்பட்டது.
இதே காலகட்டத்தில்தான் அல்- ஜன்னத் என்ற மாத இதழ் துவக்கப்பட்டது. ஐ.ஏ.சி. இயக்கத்தின் ஆதரவில் தான் புரட்சி மின்னல் நடத்தப்பட்டாலும், நமக்கே சொந்தமான இதழ் இருந்தால்தான் இன்னும் அழுத்தமாக செய்திகளைச் சொல்ல முடியும் என்ற நோக்கத் தில்தான் அல்-ஜன்னத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
பீ.ஜே.யின் சொந்தப் பத்திரிகையாக அவரது சொந்தப் பொறுப்பில் நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் லாப - நட்டம் பீ.ஜே.யைச் சேர்ந்தது என்ற அடிப் படையில்தான் அல்-ஜன்னத் நடத்தப்பட்டது.
பத்திரிகையின் விற்பனை அதிகமாக இருந்தாலும், பத்திரிகையின் ஏஜெண்டுகள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், நாளுக்கு நாள் நட்டம் அதிகரித்தது. இனிமேல் தொடர்ந்து நடத்துவது என்றால், மக்களிடம் நன்கொடை திரட்டித் தான் நடத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நன்கொடை கேட்டு மக்களி டம் அறிவிப்புச் செய்தால் கடந்த கால நட்டத்தையும் ஈடு செய்யலாம். இனியும் நட்டமில்லாமல் நடத்தலாம் என்று நண்பர்கள் ஆலோசனை கூறினார்கள்.
பத்திரிகையின் லாப - நட்டம் ஜமா அத்தைச் சேர்ந்தது என்றால், நன்கொடை கேட்கலாம். எனக்குச் சொந்த மான பத்திரிகை எனும்போது நன்கொடை கேட்க மாட்டேன் என்று திட்ட வட்டமாக மறுத்து, ''நான் ஆக்கங்களை எழுதித் தருகிறேன்; ஜாக் இதன் உரி மையைப் பெற்றுக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று பீ.ஜே. விட்டுக் கொடுத்தார். இதற்காக எந்தத் தொகையையும் அவர் கேட்கவில்லை.
இதன் பின்னர் ஐ.ஏ.சி.யின் சார்பில் புரட்சி மின்னலும் ஜாக் சார்பில் அல்-ஜன்னத்தும் இரட்டைக் குழல் துப்பாக் கிகளாக வலம் வந்தன.
ஷிர்க், ஃபித்அத், லஞ்சம், லாட்டரி, சினிமா போன்ற தீமைகளை மட்டுமே எதிர்த்துப் பிரச்சாரம் அமைந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சினைகளில் நாம் ஆர்வம் காட்டவில்லை.
சமுதாயப் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் பாபரி மஸ்ஜிதும் பயண மாற்றமும்
இப்படியே தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணம் தொடர்ந்தது. காலம் எனும் சாலையில் 89, 90, 91 என்றமைல் கற்களைத் தாண்டி 92 ஆம் ஆண்டில் அந்த நிகழ்வு நிகழ்ந்தது. 1992, டிசம்பர் 6ஆம் தேதி அன்று பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்டதுதான் அந்த நிகழ்வு. பட்டப்பகல் சங்பரிவார பயங்கரவாதி களால் பள்ளிவாசல் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
உடைக்கப்பட்டது பள்ளிவாசல் மட்டுமல்ல! சமுதாயத்தின் முதுகெலும்பும் தான்.
சமுதாய இயக்கங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த லீக்குகள் சமுதாயத் தைக் காக்கின்ற ஆயுதங்களாகவும், சமுதாயத்தின் மானம் காக்கும் ஆடைகளாகவும் இருக்கத் தவறி விட்டன.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகும் கேரளாவில் முஸ்லிம் லீக், காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து அமைச்சர் பதவியை அனுபவித்துக் கொண்டிருந்தது. இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயம், தான் ஒரு அனாதை என்பதை உணர்ந்து கொண்டது.
இத்தகைய காரணங்களால் இவர்கள் சமுதாயத்தில் செல்லாக் காசானார்கள். செல்லரித்துப் போனார்கள். இந்த இயக்கங்கள் அவரச சிசிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இருந்ததால் கேரளாவில் அப்துந் நாஸர் மதானி போன்றோர் சமுதாயப் பணி செய்யக் களமிறங்கினார்கள்.
இதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பயணத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன் விருப்பமின்றியே ஒரு திருப்பம் திணிக்கப்பட்டது. சமுதாயப் பிரச்சினைகளில் தலையிட்டே ஆக வேண்டும் என்பது தலைவிதியானது
அதுவரை தவ்ஹீத் என்ற இலக்கை மட்டும் நோக்கிப் பயணம் செய்த தவ்ஹீத் ஜமாஅத், அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் சமுதாயப் பிரச்சினைகளையும் கையில் எடுத்தாக வேண்டும் என்று முடிவுக்கு சகோதரர் பீ.ஜே. வந்தார். தானாக வந்தார் என்று சொல் வதை விட அந்த முடிவுக்குத் தள்ளப் பட்டார்.
தமிழகத்தில் தலைகாட்டிய பி.டி.பி. (P.D.F)
அப்துந் நாஸர் மதானியின் உணர்வுப்பூர்வமான உரையில் மக்கள் கவரப்பட்டனர். மக்களிடம் அப்படியொரு தோற்றமும், தணியாத தாகமும் இருந்தது. அதனால் அவரது கட்சிக் கொடி கேரள எல்லையைத் தாண்டி தமிழகக் கம்பங்களிலும் பறக்க ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் தமிழக முஸ்ம் சமுதாயத்திலும் ஒரு தேட்டம் இருந்தது. பி.டி.பி. (மக்கள் ஜனநாயகக் கட்சி) என்ற அவரது கட்சிக்கு தமிழகத்திலும் செல்வாக்கு ஏற்பட ஆரம்பித்தது.
ஆனால் அப்துந் நாஸர் மதானி அவர்கள் அப்போது ஷிர்க்கான கொள்கையில் இருந்தார். அவரது உரை, யாஸய்யிதீ, யாரசூலுல்லாஹி என்ற இணைவைப்புக் கவிதைகளுடனே துவங்கும்.
சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்ம் லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.
ஜிஹாத் கமிட்டி
கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு அப்துந் நாஸர் மதானி தேவைப்பட்டது போலவே தமிழகத்தில் ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.
இவரிடம் பேச்சுத் திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே கூட் டத்தில் ஒருவரை எழுப்பி, ''உனக்கு ஐந்து கமா தெரியுமா?'' என்று கேட் பார். இந்த ஐந்து கமாக்கள் என்ப தெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால்தான் ஒருவர் முஸ்ம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம்கூட அவருக்கு இருக்க வில்லை.
எனினும் மக்களுக்கு ஒரு தேட்டம் இருந்தது. ஒரு தேவை இருந்தது. அந்தத் தேட்டத்தையும், தேவையையும் பழனிபாபா நிறைவேற்றினார்.
அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.
அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!
இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.
சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
இன்ஷா அல்லாஹ்... தொடரும்....
நன்றி - துபாய் tntj
Post a Comment