இஸ்லாம் தீமையான அனைத்தையும் தடைசெய்துள்ளது. நன்மை தரும் அனைத்தையும் ஏவியுள்ளது. எனினும் முஸ்லிம்களில் பலர் இஸ்லாமியப் போதனைகளில் அதிக அக்கறை காட்டுவதில்லை. எனினும் அந்நியர்கள் இஸ்லாமிய சட்டங்களை நோக்கி கவனத்தைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களில் கணிசமான ஒரு தொகுதியனர் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம். ஆனால் புகையின் பாதகத்தை அறிந்து ஒரு சாரார் அதை விட்டு ஒதுங்கத் தீாமானித்துவிட்டனா். அந்த செய்தியை இங்கே தருகின்றோம்.
அண்மையில் வர்த்தக நிலையத்தினர் ஒன்றிணைந்து சிகரட் விற்பனையை முற்றாக நிறுத்திக் கொண்டுள்ள முன்மாதிரி சம்பவமொன்று பதுளை படல்கும்பறை நகரில் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டு பிறப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
படல்கும்பறை பொது சுகாதார சேவைப் பணிப்பாளர் சந்திக்க ரனகலவின் ஏற்பாட்டின்பேரில் கடந்த டிசம்பர் 31ஆம் திகதி நகர வர்த்தகர்களின் கூட்டம் இடம்பெற்றது. சிகரட் பாவனையால் ஏற்படும் தீமைகள் குறித்து அக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனையடுத்து நகர வர்த்தகர்கள் அனைவரும் 1ஆம் திகதி முதல் சிகரட் விற்பனை செய்வதில்லை என ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் ‘உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளோம்’ என மும்மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகளை வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் காட்சிப்படுத்தியுள்ளனர்.
படல்கும்பறை நகரில் நாளொன்றுக்கு 3ஆயிரம் சிகரட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
படல்கும்பறை நகரில் நாளொன்றுக்கு 3ஆயிரம் சிகரட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல் குர்ஆன் 2:195
நன்றி - sltjweb.com
Post a Comment