இவர்தான் பீ.ஜைனுல் ஆபிதீன்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹ்) இந்த பதிவை எல்லா சகோதரர்களும் முழுவதுமாக நிச்சயம் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  

மேலும் இந்த சம்பவத்தில் ஒரு வார்த்தை கூட மிகைபடுத்தி எழுதவில்லை என்று 
அல்லாஹுவின் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன். 
  

இன்று தோஹாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற போது"என்னுடைய மாமா 
சென்னையில் இருந்து உம்ரா செய்வதற்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அறிமுகம் செய்து 
வைத்தார்.அவர் பெயர் ரபியுல்லாஹ்.சுமார் 70 வயது மதிக்கத்தக்க அந்த சகோதரர் உருது 
மொழியை தாய்மொழியாக கொண்டவர்.அவரிடம் மார்க்க விஷயங்களை பற்றி 
பேசிக்கொண்டிருதந்த போது விஷயம் ஊரில் நடக்கும் ஏகத்துவ பிரசாரங்களை பற்றி வந்தது.
  

அப்போது அவர் "நான் நீண்ட காலமாக தாவா பணிகளை மேற்கொண்டு வருகிறேன். "1984 
காலகட்டங்களில் சென்னை பூந்தமல்லியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு 
செய்திருந்தோம்.அதில் யாரை உரையாற்ற அழைப்பது என்று ஆலோசித்தப்போது பிஜே என்ற
 இமாம் ஒருவர் தொண்டி என்ற ஊரில் இருக்கிறார்.நல்ல பேச்சாற்றல் உள்ளவர் அவரை 
அழைக்கலாம் என்று சிலர் ஆலோசனை சொன்னார்கள்.
  

அவரிடம் டெலிபொன் வசதி இல்லாத காரணத்தால் நேரில் சென்று அழைப்பதற்காக என்னை 
நியமித்தனர்.என்னிடம் அவருடைய வீட்டை விசாரிக்கும் போது அவருடைய தந்தை மளிகை 
கடை வைத்திருக்கிறார். அவரை காண வேண்டும் என்று விசாரிக்குமாறு அறிவுறுத்த பட்டது.
  

ஏனென்றால் பிஜே விற்கு அந்த அளவு எதிர்ப்பிருந்த காலகட்டம் அது. நானும் தொண்டியில் 
பஸ்விட்டு இறங்கி அடுத்துள்ள கடையில் சென்று விசாரித்தேன்.கடைக்காரருக்கு ஆரம்பத்தில் 
யாரென்று புரியவில்லை.பின்னர் நான் பிஜேவை பற்றி சொன்னபோது "ஓ கிறுக்கனுடைய வீடா?
அப்படி தெளிவாக சொல்லுங்கள் என்று எனக்கு வழி காண்பித்தார்.நான் அவருடைய வீட்டை 
கண்டுபிடித்து விட்டேன்.சிறிய குடிசை வீடு.வாசலில் கதவிற்கு பதிலாக துணியை மறைப்பாக 
தொங்க விட்டிருந்தனர்.வாசலில் அவருடைய தந்தை என்னை கண்டதும் என்னவிஷயம் என்று
 வினவினார்.

 நான் வந்த விஷயத்தை சொன்னதும் "ஏனப்பா அவன் உயிரோட இருக்கிறது உங்களுக்கு 
பிடிக்கலையா?டைபாய்டு ஜுரம் வந்து சாககிடக்கிறான் என்புள்ளை.தயவு செய்து அவனை
 எங்கேயும் கூப்பிடாதீர்கள்"என்று கோபப்பட்டார்.

இதை கேட்டு ரூமில் படுத்து கிடந்த பிஜே யாரு அத்தா அது"அவரை உள்ளே வரசொல்லுங்கள் 
என்று சொன்னதும் நான் உள்ளே சென்றேன் ஒரு சிறிய அறையில் அவர் சோர்வாக படுத்து 
கிடந்தார்.அவரை பார்த்ததும் சலாம் சொல்லிவிட்டு நான் வந்த விஷயத்தை சொன்னேன்.
ஆனால் தற்போது உள்ள நிலைமையில் தங்களால் வரமுடியாதல்லவா?என்று கூறி 
வருத்தப்பட்டேன்,அதற்க்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.நான் கண்டிப்பாக 
வருவேன் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் என்னோடு மார்க்கப்பணிகள் முடிந்துவிட 
போவதில்லை.என்னை விட திறமையான ஆலிம்கள் நிறையப்பேர் உள்ளனர் என்றார்.

சரி என்று டாக்ட்டரை பார்க்க இருவரும் கிளம்பினோம்.டாக்டர் பரிசோதித்து விட்டு 104 டிகிரி 
விஷ காய்ச்சல் உள்ளது.அதனால் பயணம் செய்வது நல்லது இல்லை என்று அறிவுறுத்தினார்.
ஆனால் பிஜேவோ நிச்சயம் போகவேண்டும் ஏதாவது செய்யுங்கள் என்று டாக்டரிடம் சொன்னார்.
டாக்டர், அதற்க்கு மேல் உங்கள் இஷ்டம் என்று சொல்லிவிட்டு ஒரு ஊசி போட்டு விட்டு 
மாத்திரை கொடுத்து 3 மணிநேரம் நன்றாக தூங்கிவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.நாங்கள்
 வீட்டுக்கு வந்ததும் பிஜேவின் தாய் எங்களுக்கு டீயும் பண்ணும் சாப்பிடதந்தார்கள். சாப்பாடு 
முடிந்ததும் பிஜே என்னிடம் "பாய் நீங்களும் சோர்வாக இருப்பீர்கள்.என்னுடைய அருகில் 
படுத்து கொள்ளுங்கள்" என்றார்.

இருவரும் உறங்கிவிட்டு லுஹருடைய பாங்கு சத்தம் கேட்டு எழுந்தோம்.பிஜே எழுந்ததும் 
மலர்ச்சியுடன் காணப்பட்டார்.காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் என்னிடம் கூறினார்.லுஹர் 
தொழுது விட்டு புறப்பட தயாரானோம்.தொண்டி_எழும்பூர் பஸ்ஸில் ஏறினோம்.டிக்கெட் எடுக்க 
நான் பணம் எடுத்த போது அவர் "பாய் நான் எடுக்கிறேன் என்றார்"அதற்க்கு நான் இது 
என்னுடைய பணம் இல்லை.ஜமாஅத் பணம்.நம்முடைய செலவிற்கு தந்தது என்றேன்.
அதற்க்கு அவர் அப்படியானால் நீங்கள் உங்கள் டிக்கெட் எடுத்துகொள்ளுங்கள் நான் 
என்னுடையதை எடுத்துகொள்கிறேன்"என்றார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்க்க வில்லை.பின்னர் மறக்க விஷயங்களை பற்றி 
பேசி கொண்டு எழும்பூரை அடைந்தோம்.அன்றய பூந்தமல்லி சொற்ப்போழிவில் ஏராளமானோர்
 கலந்து கொண்டனர்.பிஜேவின் உரையும் மிக சிறப்பாக அமைந்தது. அன்றிலிர்ந்து சுமார் 30 
வருடமாக நானும் பிஜேவும் நல்ல நண்பர்களாக உள்ளோம்.பழகுவதற்கு மிகவும் 
எளிமையானவர்.முடிவுகள் எடுப்பதில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்று தன் 
நண்பனை பற்றி பெருமையாக என்னிடம் சொன்னார்.
  

கேட்டு கொண்டிருந்த எனக்கு பிஜே மீது உள்ள மரியாதை கூடியது என்றே சொல்லலாம்.இதன் 
மூலம் இஸ்லாமிய சகோததர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒருவர் மீது 
அவதூறு சொல்லும் முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்.காரணம் நாம் சொன்ன 
ஒவ்வொரு வார்த்தைக்கும் நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் 
உள்ளோம்."இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம்மீது என்றென்றும் உண்டாவட்டுமாக.....!!!!!





நன்றி அதிரை பாரூக் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger