தர்காஹ் (தர்ஹா ) என்பதன் விளக்கம்


இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான தர்காக்கள் உருவான வரலாறு கண்டிப்பாக அனைத்து முஸ்லிம்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே!

தர்காஹ் என்பது பாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.

இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்ப டுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த சூஃபிக்கள் தான் மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் (ஸல்) காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க வழிகேடாகும்.

தர்காஹ் முதன்முதலில் எதற்காக கட்டப்பட்டது!

சூஃபியிஷத்தை பாரசீகத்திலிருந்து பரப்ப வந்த சுஃபியிஷத்தைச் சேர்ந்த சில மார்க்க ஞானிகள் (உங்களைப்போன்ற படிப்பறிவுள்ள அறிஞர்கள் இவர்களுக்கு எந்த மறை ஞானமுமில்லை) பாரசீகத்தில் நிலவி வந்த வன்முறைக் கொடுமைகளுக்கு ஆளாகி தங்கள் கொள்கையையும் உயிரையும் இழந்துவிடக்கூடாது என்றும் சூஃபி கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொண்டார்கள்.

அன்றைய காலகட்டங்களில் இந்தியா செல்வச்செழிப்பில் தழைத் தோங்கியிருந்தது எனவே சொந்த தாய்நாட்டை துரந்த சூஃபி அறிஞர்கள் இந்தியாவில் தங்கள் கொள்கைகளை பரப்பி வந்தனர். இவர்கள் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தங்கள் கொள்கைப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ஒரு இடத்தில் நிலையாக தங்கவும் (அதாவது ஹெட் ஆபிஸ்) அமைத்தனர்.


இந்த தலைமைச் செயலகத்தில் இந்த சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கஷ்ட நஷ்டங்களையும், நல்ல நிலைமைகளையும் பரிமாறிக் கொள்ளவும் சூஃபிக் கொள்கைகளை வீரியப்படுத்தவுமே பயன்பட்டது எனவேதான் நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் தர்காஹ் கட்டிடங்கள் (கிளை அலுவலகம்) எழுப்பினர் அந்த கட்டிடத்தில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதுவே தர்ஹா கட்டிடம் எனப்படும். இவ்வாறு இந்த கட்டிடங்களில் தங்குவதற்கு பாரசீக மொழியில் கான்காஹ் (khanqah)என்று அழைப்பர்.

பின்னர் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) மரணித்துவிட்டால் அவர்களை கவுரவப் படுத்தும் விதமாக அந்த கட்டிடங் களிலேயே கப்ரு தோண்டி அவரை அவ்லியாவாக பிரகடனப்படுத்திவிடுவார்கள் மேலும் அவர் தெய்வீக பதவியை அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்வர் இது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட ஏன் அணுவளவும் தொடர்பில்லாத தத்துவமாகவும் தவறான கொள்கையுமாகும் மேலும் இவர்களுடைய இந்த அவ்லியா கொள்கை முற்றிலும் யுத கிருத்தவ கொள்கையின் அடிப்படையில் அமைந்ததாகும்! இதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே உள்ளதை படியுங்கள்”

கிருத்தவ கொள்கையுடன் தொடர்புடைய சூஃபிக்களின் அவ்லியா கொள்கை.

கிருத்தவ மார்க்கத்தை பரப்ப வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த தெரஸா அவர்கள் சென்ற 10 ஆண்டகளுக்கு முன்னர் (1997ல்) மரணித்தார்அன்னை இந்த அம்மையார் செய்த சமுதாய தொண்டுகள் இன்றளவும் உலகம் முழுவதும் போற்றப்பட்டு வருகிறது.

இதை கண்ட வாடிகன் மத போதகர்கள் மற்றும் மதகுரு போபாண்டவர் இந்த அம்மையாரை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணி இவரை செயின்ட் (தமிழில் சொல்வதாக இருந்தால் புனிதவதி என்றும் அரபியில் சொல்வதாக இருந்தால் அவ்லியா என்றும்) கூறி அவரை கடவுளுக்கு இணையான தர்ஜாவை (பதவியை) அளிக்க முயன்று வருகின்றனர்.

இது ஒன்றே போதும் சூஃபிக்கள் பின்பற்றும் அவ்லியா கொள்கை யுத, கிருத்தவ மார்க்கத்தை தாயகமாக கொண்ட கொள்கை என்பதற்கு. இப்போது புரிகிறதா எவ்வாறு அவ்லியாக்கள் உறுவாகின்றனர் என்று. இந்த மூடப் பழக்கத்தை நாம் பின்பற்றலாமா?

குறிப்பு-
அன்னை தெரஸா உயிருடன் இருக்கும்போது என்றைக்காவது தான் மரணித்துவிட்டால் என்னை வணங்குங்கள் நான் உங்களுக்கு அருள்புரிகிறேன் என்று தொலைக்காட்சியிலோ, பத்திரிக்கைகளிலோ பேட்டி கொடுத்துச் சென்றார்களா? இது இந்த அம்மையாருக்கு செய்யும் பச்சை துரோகமல்லவா?

சூஃபிக்களினால் தவறான பாதை காட்டப்பட்ட இந்தியர்கள்

பிற்காலத்தில் சூஃபிக்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மாற்றுமதத்தவர்கள் (நம் முன்னோர்கள்) சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) கூறுவதுதான் இஸ்லாம் என்று நம்பினார்கள் காரணம் அவர்களுக்கு இஸ்லாமிய கோட்பாடுகள் தெரியவில்லை! பாவம் என்ன செய்ய முடியும்!

ரோஜா மலரை வாழ்க்கையில் ஒருமுறை கூட கண்களில் கானாதவர்கள் முன் கல்லிச் செடியை காண்பித்து இதுதான் ரோஜா மலர் என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்”

நாம் யாரை உயிரினிலும் மேலாக மதிக்கிறோமோ அவர்கள் விஷம் கலந்த பாலை நமக்கு கொடுத்தால் என்ன செய்ய முடியும் அப்பாவிகளாக மக்கள் அந்த விஷம் கலந்த பாலை குடித்து சாகத்தானே வேண்டும். இது நம்பிக்கை துரோகமல்லவா?

இதே நம்பிக்கை துரோகத்தைதான் சூஃபி ஞானிகள் (அறிஞர்கள்) அறியாத மக்களிடம் இஸ்லாம் என்று கூறி தங்கள் கெட்ட கொள்கைகளை பரப்பினார்கள் அதன் தாக்கம் இன்றளவும் உள்ளது.

சகோதரரே இப்போது சொல்லுங்கள் நாம் தர்காஹ்வுக்கு செல்லலாமா?


நன்றி- ஏகத்துவம்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger