உலகின் வேறுபட்ட நாடுகளைச் சோந்த 1907 பேர் புனித இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக துபாயில் அமைந்துள்ள தார் அல்-பத்ர் சமூகநிறுவனத்தின், இஸ்லாமிய தகவல் நிலையப் பணிப்பாளர் ராஷித் ஸலீம் அல்ஜூனைபி தெரிவித்துள்ளார்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு துபாயின் இஸ்லாமிய விவகாரத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதல்களும், ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அல்ஜூனைபி மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களுக்கு அபாயா மற்றும் இஸ்லாமிய சட்டரீதியான உடைகள் என்பன இஸ்லாமிய நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக இஸ்லாத்தில் நுழைந்தவர்களை வரவேற்கும் முகமாக விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன்,ரமழான் காலத்தில் ஸஹர் உணவுபரிமாறும் விருந்துகளும் இடம்பெற்றன. 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில், இஸ்லாத்தை வரைவிலக்கணப்படுத்தும் 2055 புத்தகங்கள் மற்றும் இறுவட்டுகள் இஸ்லாமிய நிறுவனத்தின் மூலம் விநியோகிக்ப்பட்டுள்ளதுடன், புதிய முஸ்லிம்களுடன் கலந்துரையாடும் பல தொலைக்காட்சி மற்றும் வானோலி நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி -berunews
Post a Comment