Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label வணிக செய்திகள். Show all posts
Showing posts with label வணிக செய்திகள். Show all posts

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு!

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது.
மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க மைய வங்கி பிற நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்வதாக கடந்த புதன்கிழமை அறிவித்ததாலும், இந்திய அரசு தங்கம் இறக்குமதிக்கு விதித்துள்ள அதிக வரிவிதிப்பாலும், ஆசிய நாடுகளில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்து வருவதாலும் இவ்வாறு விலை குறைவு ஏற்படுவதாக தங்க வணிகர்கள் கூறுகின்றனர்.
0 comments

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது

தங்கம்சில காலமாக இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 அளவில் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது.

மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஆறு சதவிகிதத்திலிருந்து எட்டு சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.  நடப்பு கணக்கில் பற்றாக்குறை அதிகரித்து வருவதையடுத்து மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்தது.

இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து தங்கத்தின் விலை உயரும் நிலை ஏற்பட்டது. அதன்படி, இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. அதாவது, ஒரு கிராம் 2 ஆயிரத்து 600க்கும், ஒரு சவரன் 20 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனையானது. இந்த விலையேற்றம் தொடரக்கூடும் என்று நகைவியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நேரம் 

0 comments

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பெட்ரோல் விலை உயர்கிறது

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பெட்ரோல் விலை உயர்கிறது!புது டெல்லி: இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்ததால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 4.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கடந்த 10 மாதத்தில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலின் விலையினைச் சர்வதேச சந்தைவிலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி ஆகியவற்றின் அடைப்படையில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையிருப்பதால், தற்போது வீழ்ச்சியடைந்துள்ள ரூபாயின் மதிப்பினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1ரூபாய் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதன்படி விலை உயர்த்தப்படுமானால், நாளை முதல் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் அதிகம் கொடுக்கவேண்டியிருக்கும்.


0 comments

இந்தியாவில் கத்தர் தேசிய வங்கி கிளை துவங்க அனுமதி


இந்தியாவில் கத்தர் தேசிய வங்கி கிளை துவங்க அனுமதி!புது டெல்லி: அரபு நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டின் முதல் வியாபார தேசிய வங்கியான கத்தர் தேசிய வங்கிக்கு இந்தியாவில் கிளை துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் அரபு நாடுகளில் ஒன்றான கத்தர் நாட்டின் முதல் வியாபார தேசிய வங்கிகத்தர் தேசிய வங்கி(QNB). இவ்வங்கி குழு 1964 ஆம் ஆண்டு கத்தரில் ஆரம்பிக்கப்பட்டது. 

50 சதவீத உரிமை கத்தர் முதலீட்டு கழகத்திற்கும் 50 சதவீதம் தனியாருக்கும் சொந்தமான இவ்வங்கி குழு, சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள தொழில் சந்தைகளில் நுழைவதில் மும்முரமாக செயல்படுகிறது.

அதன் ஒரு பாகமாக, சர்வதேச சந்தையில் வாங்கும் திறனில் மூன்றாவது இடத்திலும் விற்கும் திறனில் பத்தாவது இடத்திலும் இருக்கும் இந்தியாவில் கிளை துவங்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு, தற்போது இந்திய அரசு அனுமதியினைப் பெற்றுள்ளது.

க்யூஎன்பி(இந்தியா) பிரைவேட் லிமிடெட்(QNB India Pvt ltd) என்ற பெயரில் இந்தியாவில் துணை வங்கி அமைப்பதற்கு தேவையான அனைத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் கிடைத்துவிட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இவ்வாண்டு(2013) செப்டம்பர் மாதத்தில் வங்கிப் பணிகள் துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நேரம் 

0 comments

தங்கம் விலை சரிவு!


தங்கம் விலை சரிவு!தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைவதும், கூடுவதுமாக இருந்தாலும் நேற்றும், இன்றும் தான் வெகுவாகக் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2,485க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.26, 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 15ம் திகதி அதிகப்படியாக 10 கிராமுக்கு ரூ.1,160 குறைந்து ரூ. 26,640க்கு விற்பனையானது. இதையடுத்து தங்கத்தின் விலை நேற்று தான் வெகுவாகக் குறைந்தது. அதாவது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து ரூ.27,300க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை சரிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நன்றி - இந்நேரம் 

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger