Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மறுமை. Show all posts
Showing posts with label மறுமை. Show all posts

மறுமை சிந்தனை

நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)
மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்
அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும். (40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.
 நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.
மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.
அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல்  மண்ணறையில் அவனை மகிழ்விக்கும்.
0 comments

நாமும் நமது மரணமும்

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!
 (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

நன்றி - ததஜ துபை
0 comments

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை!  ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன.

நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன.  இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  (அல்குர்ஆன் 7:200, 201)

தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் திக்ர் மழையில் நமது நாவுகள் நனைய வேண்டும்.  தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழ­ல் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.


''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழ­ன் மூலம் நிழலளிப்பான்.  1. நீதி மிக்க ஆட்சியாளர்.  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.  3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.  4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர்.  5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.  6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர்.  7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி),  நூல் : புகாரி 6806

பாதுகாப்புக் கேடயம்

''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்­ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது.  அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது.  அவன் எல்லாவற்றின் மீதும் வ­மையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.  மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.  அவரது கணக்கி­ருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும்.  மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.  மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது.  ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி).  நூல் : புகாரி 6403

அல்லாஹ்வை நினைத்தால் அவன் நம்மை நினைப்பான்

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன் 2:152)

நாம் நடந்து சென்றால் அல்லாஹ் ஓடி வருவான்

''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன்.  அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன்.  அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன்.  அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி). நூல் : புகாரி 7405

சுவனத்தின் புதையல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை.  நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.  அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்தி­ருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ''அப்துல்லாஹ் பின் கைஸ்!'' என்று அழைத்தார்கள்.  ''கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன். ''உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள்.  ''சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன்.  ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ர­லி). நூல் : புகாரி 4202
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.  அவர்கள் ஜும்தான் என்ற மலையைக் கடந்து சென்ற போது. ''செல்லுங்கள்! இது தான் ஜும்தான் மலையாகும்.  முஃப்ரிதூன் முந்தி விட்டனர்'' என்று சொன்னார்கள்.  ''முஃப்ரிதூன் என்றால் யார்?'' என்று நபித்தோழர்கள் வினவிய போது. ''அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்கள், பெண்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : முஸ்­லிம் 4834

சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும் திக்ர்

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : புகாரி 1142

ஆயிரம் நன்மைகள்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம்.  அப்போது. ''உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?'' என்று கேட்டார்கள்.  எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள். ''ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ர­லி), நூல் : முஸ்­லிம் 4866

பாவத்திற்குப் பரிகாரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையி­ருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன்.  உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)'' என்று சொல்பவர்களாக இருந்தனர்.  அப்போது ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?'' என்று கேட்ட போது, ''அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ர­லி), நூல் : அபூதாவூத் 4217

வல்ல  இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ....

நன்றி - துபாய் tntj 
0 comments

வெற்றி பெற்றோர்!


இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக் கூட்டித்தைச் சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கேப் புகழனைத்தும்!
இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாட்களில் சில காரியங்களை செய்தவர்களை வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளி­ருந்து தொகுத்துத் தருகிறோம். தாங்களும் அக்காரியத்தை செயல்படுத்தி வெற்றிபெற்றோர்களாக மாறுங்கள்!
கடமையான காரியங்களை சரியாக நிûவேற்றுவோர்
நஜ்த் என்ற ஊரைச்சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒழித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பக­லும் ஐவேளைத் தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா? என்று கேட்டார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை என்றார்கள். அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா? என்றார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர் அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என்மீது கடமையா? என்றார். அதற்கவர்கள் நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை என்றார்கள். உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ர­)
நூல் : புகாரீ (46)
இந்த நபிமொழியின் இறுதியில் அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறைவைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை மேற்சொன்ன ஹதீஸி­ருந்து விளங்கலாம்.
இது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அ­ஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகிவிட்டது. என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது! என்று கூறினார்கள். அதற்கு அவர் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் சப்பஹ அல்லது யுசப்பிஹூ என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக! என்று கூறியபோதும் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர் அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் இதா ஸ‎ýல்­த்தில் அர்லு ஸில்ஸாஹா என்ற சூராவை முழுமையாக ஓதிக்காண்பித்தார்கள். அம்மனிதர் உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒருபோதும் நான் அதிகமாக்கமாட்டேன் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள் ருவைஜில் வெற்றிபெற்றுவிட்டார் என்று இரு முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)
நூல் அபூதாவூத் (1191) அஹ்மத் (6287)
மார்க்கத்தின் கட்டளைகளை பின்பற்றுவதில் ருவைஜில் (ர­) அவர்கள் எவ்வளவு ஆர்வப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் (ர­) அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டுவிடாமல் அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையை அப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதை செயல்படுத்த ஆர்வமும் கொள்ளவேண்டும்..

நபிவழியை மட்டும் பின்பற்றியவர்
“ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையரை உள்ளது. யாருடைய வரையரை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். எவருடைய வரையரை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்துவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
நூல் : அஹ்மத் (6664)
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)
இஸ்லாத்தின் வழிமுறை தெளிவாக கூறும் நபிமொழி இது ! மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாக கண்டிக்கும் நபிமொழி.
இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாக கடைபிடிக்கவேண்டிய தொழுகை என்ற அமல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி நடைபெறுகிறதா? ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவு வித்தியாசப்படுவதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பவற்றுவதுதான். இவ்வாறு பின்பற்றுபவர் வெற்றியாளர்களா? என்பதை மேற்கூறிய நபிமொழி கவனித்து முடிவு செய்யுங்கள்!
இறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்­துகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா? அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் கிடையாது இருந்தும் நாம் அதை பின்பற்றிவருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதை செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெறமுடியாததோடு தண்டையும் பெறுவார்கள்.
(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பர் : ஜாபிர்
நூல் : நஸயீ (1560)
எனவே வெற்றியாளராக மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் முன்மாதிரிக் கொண்டும் அமல்களைச் செய்வோம்.
உள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்
நமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களை கவனித்து தேவையானதை வாங்கித் தந்தாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையே விரும்புவார்கள்.
பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதும் அதை பெறுவதற்கு வட்டி உட்பட பல மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதை பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் 1903
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)

உறுதியுள்ளவர்கள்
இ‏ஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிகமுக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்புக்காட்டியதைப் போல் அதை பின்பற்றுவதிலும் அதன் கொள்கை கோட்பாடுகளை பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்கவேண்டும். இன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும்போது அதையும் ஏற்று பொறுமையுடன் இருப்பதும் இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதிபெறவேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழிதவறிவிடக்கூடாது.
அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்கச் சென்று இணைவைத்தல் என்ற பெரும்பாவத்தில் சிக்கிவிடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையை காட்டுகிறது. இவ்வாறு நடந்துகொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைமாட்டார்கள். கொள்கையில் உறுதிதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள்.
நூல் அஹ்மத் 21380
அறிவிப்பாளர் சவ்பான்
தொழுகையைப் பேணியவர்
ரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலைமோதும் கூட்டத்தை காணலாம். தொழுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவெறிச்சோடிக் கிடக்கும்.
தொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்கு காரணம். காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுபவர்கள் ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.
ஆண்களுக்கு ஜமாத் தொழுகையை இஸ்லாம் வ­யுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வ­யுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டேத் தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்குகிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலையில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.
நம்மில் பலர் வயதானவர்கள் தான் தொழ வேண்டும். நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்று நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று அவனும் கூறவில்லை. அவனுடைய தூதரும் சொல்லவில்லை.பருவ வயதை அடைந்துவிட்டால் ஐவேளைத் தொழுவது கடமையாகும்.
சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளைத் தொழுவார்கள். ஆனால் ஃபஜர் தொழுகைக்கு வராமல் உறங்கிவிடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முத­ல் இந்தத் தொழுகையைப் பற்றித்தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்த குறைபாட்டையும் நாம் வைக்காமல் நிறைவேற்றியிருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை அவர் கூறிவிடமுடியும். முதல் கேள்வியிலே நாம் தோற்றுவிட்டால் அதன்பின்வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறமுடியமால் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.
அடியானிடம் முத­ல் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித்தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந்தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான்.
நூல் : நஸயீ (461), திர்மிதீ (378)
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ர­)

மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்
ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. அனைத்து உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் அவைகள் தீமைபுரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகிவிட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகிவிடுகின்றது. உள்ளம் கெட்டுவிட்டால் உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அதை தீயஉள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்றுவிட்டதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7லி10)
உதாரணமாக ஒருவர் தான் கொடைவள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக தர்மங்களை செய்கின்றார். இவர் செய்யக்கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுஅளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப்படுகின்றது.
100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப்பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரீ 3470)
அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையேப் பார்க்கின்றான். பார்ப்பதற்கு அறுவறுப்பாக கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற்குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகுகின்றாô.
இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் (ர­) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்கள் செயல்களை சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ர­) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்கள் இவ்வுலகத்திலேயே சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். (புகாரீ 1149)
யார் தனது உள்ளத்தை ஈமானுக்காக தூய்மையாக்கி மேலும் தன் உள்ளத்தை தவறுகளி­ருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மனநிறைவுபெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக்கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்னை (நல்லவற்றை) காணக்கூடியதாகவும் ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர­)
நூல் : அஹ்மத் (20348)
ஈமான் கொண்டு விட்டால் மறுஉலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றிபெறுவார்கள் என்பதை இதே அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1லி11)
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக
நன்றி - தமிழ் தவ்ஹீத் 
0 comments

தற்கொலைக் கலாச்சாரம்


ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வ­லி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால் இந்த வாந்தியும் வயிற்று வ­லியும் ஏற்பட்டுள்ளது என்று மனநோய் நிபுணர் சரியான காரணத்தைக் கண்டறிகின்றார்.

உள் மனதில் ஏற்படும் உயர் அழுத்தம் இப்படி உடல் ரீதியான அதிர்ச்சி அலைகளை, வாந்தி   பேதியை உருவாக்கி விட்டுள்ளது. இத்தனைக்கும் அந்த மாணவி கல்வியில் முதல் தரத்தை அடைந்தவள். தான் தோற்று விடுவோமோ என்ற எண்ணம், பரீட்சையைத் தட்டிக் கழித்து விட வேண்டும் என்ற எல்லைக்கு அவளைத் துரத்திச் சென்றுள்ளது.

சரியான ஆலோசனை, ஆறுதல் வழங்கப்பட்ட பிறகு அவள் சரியான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றாள்.

இவ்வாறு இந்த மாணவியின் மன நிலை மட்டுமல்ல! மொத்த மாண சமுதாயத்தின் மன நிலையும் இப்படித் தான் ஆகி விட்டது. பள்ளி வாழ்க்கையில், பாடத்தில், பரீட்சையில் தோல்வி என்பது சகஜமான ஒன்று தான் என்று அதை எடுத்துக் கொள்வதற்கு மாணவ சமுதாயம் தயாரில்லை. தோல்வியை நாங்கள் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்ற நிலைக்குச் சென்று விட்டனர்.


இதன் உச்சக்கட்டம் தான் மாணவ, மாணவியரின் தற்கொலைகள். இராயப்பேட்டையைச் சேர்ந்த இனியன் ராஜ் என்ற மாணவன் தமிழ்நாடு தொழில்சார் துறை நுழைவுத் தேர்வில் (TNPCEE) குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொள்கின்றான். அடுத்த நாள் குரோம்பேட்டை குருபாபு என்ற மாணவன் ப்ளஸ் டூ பரீட்சையில் தோல்வி என்பதால் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக் கொண்டான்.

National Crime Record Bureau Statistics  எனப்படும் தேசிய குற்றப் பதிவுத் துறையின் புள்ளி விபரப் படி, ஒவ்வொரு ஆண்டுத் தேர்வு முடிவு வெளியானதும் தமிழ்நாட்டில் மட்டும் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சராசரியாக 200 பேர் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தொட்டு விட்டது.

இது ஹிந்து நாளேடு தரும் உதிரத்தை உறைய வைக்கும் தகவல் ஆகும். ஜூனியர் விகடன் இந்த விவகாரத்தை அலசும் போது,

''தற்கொலைச் சாவுகள் பற்றிய புள்ளி விவரங்கள் நம்பிக்கைக் குரியவை அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனி­ருந்து திரட்டப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்துத் தான் நேஷனல் கிரைம் ரெக்கார்ட் பீரோ, தற்கொலை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கின்றது. ஆனால் மாநிலத்தில் நடக்கும் எல்லா தற்கொலைகளுமே போலீஸின் கவனத்திற்கு வந்து விடுவதில்லை. பல தற்கொலைகள் விபத்து என்றோ, நோயால் மரணம் என்றோ சொல்­ உண்மை மறைக்கப்பட்டு விடும். தேர்வு முடிவுகளால் தற்கொலைக்குத் தூண்டப்படும் மாணவர்களின் எண்ணிக்கை நாமெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகம்.

அது மட்டுமல்ல... தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் ஐந்து பேரில் ஒருவர் தான் உயிர் இழக்கின்றார் என்கிறது புள்ளி விவரம். இந்தப் புள்ளி விவரத்தின் படி பார்த்தால் ஆண்டு தோறும் தமிழகத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் என்பது புரியும்'' என்று ஸ்நேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின்  இயக்குநர் கூறுகின்றார். என்று ஜூனியர் விகடன் குறிப்பிடுகின்றது.

இது நமது உதிரத்தை மேலும் உறை நிலைக்குக் கொண்டு செல்கின்றது. மாணவ மாணவியரின் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் அவர்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்நேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குநர் இது பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வமைப்பில் தொடர்பு கொள்கின்ற 60 சதவிகிதம் பேர் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிவிப்பதாகக் கூறுகின்றார்.

மனோதத்துவ ரீதியிலான சிகிச்சை

ஒரு இழப்பு ஏற்படும் போது அது விதியினால் ஏற்பட்டது என்று நம்பி பொறுத்திருந்தால் அவனுக்கு ஏற்பட்ட இழப்பை சரி கட்டி வேறொரு சிறந்த பரிகாரத்தையும் வழங்கி விடுகின்றான்.

சங்கடம் ஏற்படும் போது ஒருவர், இன்னா­ல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும் மஃஜிர்னீ ஃபீ முஸீபதீ வஅக்­ஃப்லீ கைரன் மின்ஹா (பொருள்: நாம் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள். அவனிடமே திரும்பச் செல்பவர்கள். அல்லாஹ்வே! எனக்கு ஏற்பட்ட சங்கடத்தில் எனக்குப் பகரமாக ஆக்குவாயாக!) என்று கூறினால் அதைவிடச் சிறந்த ஒன்றை அல்லாஹ் பகரமாக ஆக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

(என் கணவர்) அபூஸலமா (ர­லி) இறந்த போது, 'முஸ்­லிம்களில் அபூஸலமாவை விட சிறந்தவர் யார் இருக்கின்றார்? நபி (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் சென்ற குடும்பத்தில் அவர் முதல் மனிதராவார்' (என எண்ணினேன்) பின்பு நான் அந்தப் பிரார்த்தனையைக் கூறினேன். அல்லாஹ் எனக்கு ரசூல் (ஸல்) அவர்களைப் பகரமாக வழங்கினான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ர­லி) நூல்: முஸ்­லிம் 1525

இங்கு மார்க்கம் மேற்கண்ட பிரார்த்தனையை வெறும் மந்திர வார்த்தைகளாகச் சொல்ல வேண்டும் என்று கூறவில்லை. அவனது மன பாரத்தை இந்த வார்த்தைகள் கீழே இறக்கி வைக்கின்றது. அவனது பாரத்தை வாயாரச் சொல்­, அவனை அமைதிப்படுத்துகின்றது.

மன அழுத்தத்தைப் போக்க இதை விட மாமருந்து உலகில் கிடையவே கிடையாது.

மறுமை மீது மாறாத நம்பிக்கை

இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு ஒரு பரிகாரமாக சுவனத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

அல்லாஹ் கூறுகின்றான்: இறை நம்பிக்கையுள்ள என் அடியான் அவனுக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றி விடும் போது, நன்மை நாடிப் பொறுமை காப்பாரானால் சொர்க்கமே நான் அவருக்கு வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி 6424, அஹ்மத் 9024

இதுவும் மன அழுத்தத்திற்கு ஒரு சிறந்த மருந்தாக அமைந்து விடுகின்றது.

இப்படி மேற்கண்ட இந்த வழிமுறைகளில் மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ளாமல் தற்கொலை என்ற பெயரில் தன்னை அழித்துக் கொண்டால் அவன் இறை ஏற்பாட்டைக் குறை கூறியவனாக ஆகி விடுகின்றான். இதனால் தான் அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடை செய்து விடுகின்றான்.

இப்படித் தற்கொலை செய்பவர் போர்க்களத்தில் வந்து இஸ்லாத்திற்காக போராடியவராக இருந்தாலும் சரி தான்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட, மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிப் படையில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பவர், படையி­ருந்து விலகி தனியே சென்றவர் என எவரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டிய படி துரத்திச் சென்று கொண்டிருந்தார்.

நபித் தோழர்கள், ''இந்த மனிதர் போரிட்டதைப் போல் நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ''அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.

அப்போது அந்தக் கூட்டத்தி­ருந்த ஒரு மனிதர், ''நான் அவருடன் இருக்கிறேன்'' என்று சொல்­லி விட்டுப் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார்.  அவர் கடுமையாகக் காயப்படுத்தப் பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி தன் வாளின் (கைப்பிடி) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(கண்காணிக்கச் சென்ற) அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், ''சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். உங்களுக்காக நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறி விட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். உடனே அவர் சீக்கிரமாக மரணிக்க விரும்பி வாளின் பிடி முனையைப் பூமியில் நட்டு, அதன் கூர் முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையில் வைத்து அதன் மீது தன்னை அழுத்தி தற்கொலை செய்து கொண்டார்'' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''மக்களின் வெளிப் பார்வைக்கு ஒருவர் சொர்க்கத்திற்குரிய செயலைச் செய்வார். ஆனால் அவர் நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால் அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ர­லி),  நூல்: புகாரி 2898

புனிதப் போர் என்ற பெயரில் நடைபெறும் தற்கொலைத் தாக்குதல்களும் இந்த அடிப்படையில் அமைந்தவை தான்.

ஜனாஸா தொழுகை இல்லை

இதுபோன்று தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவும் மறுத்து விட்டார்கள்.

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ''அவர் இறந்து விட்டார்'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். ''நான் அவரை (இறந்திருக்கக்) கண்டேன்'' என்று அம்மனிதர் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அவர் இறக்கவில்லை'' என்று சொன்னார்கள். பிறகு அம்மனிதர், (நோயாளியிடம்) வந்ததும் அவர் கூரான ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அவர் இறந்து விட்டார்'' என்று தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், ''அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''அவர் தன்னிடமிருந்த கூரிய முனையுள்ள ஈட்டியால் அறுத்துக் கொள்வதை நான் பார்த்தேன்'' என்றார். ''நீ பார்த்தாயா?'' என்று நபி (ஸல்) கேட்க, அவர் ஆம் என்றார். ''அப்படியானால் நான் அவருக்குத் தொழுவிக்க மாட்டேன்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ர­லி) நூல்: அபூதாவூத் 3185

புகாரியில் 6606வது ஹதீஸில், முஸ்­மான உயிரைத் தவிர வேறு எந்த உயிரும் சுவனம் செல்ல முடியாது என்று கூறுவதன் மூலம், தற்கொலை செய்தவன் காஃபிராகி விட்டான் என்று அடித்துச் சொல்­லி
 விடுகின்றார்கள்.

விதியின் மீது கொள்கின்ற நம்பிக்கை, மறுமையின் மீது கொள்கின்ற நம்பிக்கை, தற்கொலை செய்து விட்டால் ஜனாஸா தொழுகை இல்லை, சுவனம் செல்ல முடியாது என்று பல்வேறு அடிப்படைகளில் தற்கொலையை இஸ்லாம் வேரோடு கிள்ளி எறிகின்றது.

இப்படி இஸ்லாம் காட்டித் தரும் இந்த நம்பிக்கை மற்றும் வழிமுறைகளில் தான் தற்கொலையை ஒழிக்க முடியுமே தவிர வேறு எந்த வழிமுறையிலும் ஒழிக்க முடியாது என்பதை நாம் தெளிவாகப் பிரகடனப் படுத்துகின்றோம். இது தத்துவார்த்த அடிப்படையில் அல்ல! நடைமுறை செயல்பாடு அடிப்படையில் உலகப் புள்ளியியல் அடிப்படையில் நிரூபணமான உண்மையாகும். இந்த அடிப்படையில் தற்கொலை இல்லாத ஒரு சமுதாயத்தைப் படைக்க உலக மக்களை இஸ்லாத்தின் பால் வாருங்கள் என்ற அழைப்பை முன் வைக்கிறோம்.

அதே சமயம் முஸ்­லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் சில நடப்பதை மறுப்பதற்கில்லை. முஸ்­லிம்களுக்கு மத்தியிலும் இந்தத் தற்கொலைகள் நடப்பதற்கு முழு முதற் காரணம் மார்க்க அறிஞர்கள் தான்.

நபி (ஸல்) அவர்கள் தற்கொலையில் இறந்தவருக்குத் தொழுவிக்காமல் ஒதுங்கியிருக்கின்றார்கள். அது மட்டுமல்ல! தற்கொலை செய்தவன் முஸ்லிம் கிடையாது என்று தெளிவாக உணர்த்தியும் இருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இந்த மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர், நபி (ஸல்) அவர்களை விஞ்சிய மேதாவிகள் போன்று தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துகின்றார்கள். தெரிந்தே இந்த     அக்கிரமத்திற்குத் துணை போகின்றார்கள். இது தான் முஸ்­லிம்களிடம் தற்கொலைச் சாவுகள் நடப்பதற்குக் காரணமாக அமைகின்றது. 

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் தற்கொலை என்பது எத்தகைய பாவம் என்பதை இந்த ஆ­ம்கள் தங்களின் பிரச்சாரத்தின் போது விளக்கியிருந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்றிருப்பார்கள். ஆனால் அதைச் செய்யாமல் தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அதற்குத் துணை போகின்றார்கள் என்பது தான் வேதனை.

எனவே தற்கொலையைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து நிரந்தர நரகத்தைத் தரும் பாவமான தற்கொலையி­ருந்து நம்மையும் நமது சமுதாயத்தையும் காப்போமாக!!
நன்றி - tntjdubai 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger