Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label மருத்துவ படிப்பு. Show all posts
Showing posts with label மருத்துவ படிப்பு. Show all posts

மருத்துவர் படிப்பிற்கு கட்-ஆஃப் எவ்வளவு?‏.

சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் கட்ட எம்.பி.பி.எஸ்.கலந்தாய்வு மொத்தம் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா அல்லது 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு நடைபெறுமா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.


கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மத்திய அரசு மிக விரைவில் அனுமதி அளிக்கும்நிலையில் மொத்தம் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வைநடத்தி விடலாம் என்பதால் கலந்தாய்வு அட்டவணை தயாரிப்புப் பணியை மருத்துவக்கல்வி தேர்வுக் குழு ஒத்திப் போட்டுள்ளது.


நடப்பு ஆண்டு (2013-14) கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணையும் மருத்துவக்கல்வி தேர்வுக் குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லைகலந்தாய்வு முடிந்தபிறகே கட்-ஆஃப் மதிப்பெண்ணை வரையறை செய்ய முடியும் என்று மருத்துவக்கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


எனினும் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் நலன் கருதி எம்.பி.பி.எஸ்.ரேங்க் பட்டியல் அடிப்படையில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 2,065 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக கீழேமதிப்பிடப்பட்டுள்ளது.


அரசு கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். 2,065 எம்.பி.பி.எஸ்.இடங்களுக்கு கட்-ஆஃப்

ஓ.சி. 198.25
பி.சி.  197.25
பி.சி. (எம்)  196.00
எம்.பி.சி. 196.25
எஸ்.சி.  193.00
எஸ்.சி. (ஏ)  190.50
எஸ்.டி.  186.25

0 comments

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் கலந்தாய்வு‏...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன்19ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர்மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டசிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமைகலந்தாய்வுநடத்தப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கல்விஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வெளியிட்டார்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் 7 இடங்களைப்பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75 பெற்றுள்ள 3மாணவர்கள் என சிறப்பிடம் பெற்ற 10 பேரின் பெயரை அமைச்சர் கே.சி. வீரமணிஅறிவித்தார்சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org ரேங்க் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ்.இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தவும்இந்திய மருத்துவக் கவுன்சில்அனுமதித்துள்ள கூடுதல் 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்குமத்திய அரசு அனுமதிவழங்கியவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தவும் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுதிட்டமிட்டுள்ளது.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger