Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label தெழுகை. Show all posts
Showing posts with label தெழுகை. Show all posts

முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளி எது?


masஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். அல்குர்ஆன் 9:108
ஒரு நிதி நிறுவனம் ஒரு கிளையில் பள்ளி கட்டிக் கொடுக்கிறது. உடனே இன்னொரு கிளை நிர்வாகிகள் தலைமைக்கச் சென்று பள்ளி கட்டிக் கொடுத்துள்ளீர்கள் அதே போல் எங்களுக்கும் பள்ளி கட்டிக் கொடுங்கள் என்று ஒரு பள்ளி இருக்கத்தக்கன கேட்டு அடம்பிடிக்கிறார்கள். உடனே கொமிசன்  பேராசை தலைமை நிர்வாகம் அந்தப் பள்ளியை அப்படியே விட்டுவிட்டு அதற்குப் பக்கத்தில் இன்னொரு பள்ளிகட்டிக் கொடுக்கிறது. துலைமையக நிர்வாகிகளுக்கு கொழுத்த கமிஷன் கிடைக்கிறது.இந்த அப்பாவிகளுக்கு இது தெரியாது.பாவம் இவர்கள்.
இவ்வாறு கட்டுவது போட்டி மனப் பான்மையா? இறையச்சமா? பள்ளி இறையச்சத்தின் அடிப்படையில் கட்டப’பட வேண்டும். இன்று கொமிஷனுக்காக குராபிகளுக்கும் கட்டப்படுகிறது. அங்கே தவ்ஹீத் புதைக்கப்படுகிறது.
இப்படிப்பட்டபட்ட நிறுவனப் போலித் பள்ளிவாசல்கள் நிறைந்து காணப்பட்டாலும் இன்று  உண்மையான தவ்ஹீத் பள்ளிகள்  பல எமது நாட்டில் உருவாகி வருகிறது. அவைதான் கொள்கையில் முன்னிலை வகிக்கின்றன.
இன்றைக்குத் தவ்ஹீத் பள்ளிகள் ஏழை மக்கள் நாடிவரும் தலங்களாகவும் துயர் துடைக்கும் இடங்களாகவும் திகழ்கின்றன. தவ்ஹீத் பள்ளிகளின் பணிகளை பட்டியலிடத் துவங்கினால் இந்த ஆக்கம் போதாது.
மக்களுக்கு இடையூறு செய்தல் என்பது தவ்ஹீத் பள்ளிகளில் அறவே கிடையாது. முஃமின்களைப் பிரிக்கக்கூடிய மத்ஹபுப் பிரிவினைகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. அனைத்து மத்ஹபிலிருந்தும் நபிவழிக்கு வந்தவர்களும் இன்றைக்கு ஒரே முறையில் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிறைவேற்றுகின்றனர்.
மேலும் மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்களும் அவர்களது முறைப்படி தொப்பி அணிந்து விரலசைக்காமல் கொழும்பில் எமது தலைமைத் தவ்ஹீத் பள்ளிகளில் தொழுகையை நிலை நாட்டுகின்றனர். அவர்கள் தாக்கப்படுவது கிடையாது. பித்அத்தான காரியங்களைச் செய்வதற்குத் தான் தவ்ஹீத் பள்ளியில் தடை விதிக்கப்படுமே தவிர, வேறு யாரும் தடுக்கப்படுவது கிடையாது. மேலும் நபி வழியின் அடிப்படையில் தொழுபவர்கள் மட்டுமே இங்கு வரவேண்டும் என்ற போர்டுகளும் தவ்ஹீத் பள்ளிகளில் கிடையாது. மேலும் ஏகத்துவத்தை எடுத்துரைத்து, இணை கற்பிக்கும் காரியங்களை அழிக்கக் கூடிய தளங்களாகத் தான் தவ்ஹீத் பள்ளிகள் திகழ்கின்றன.
இறைவன் கூறிய பண்புகளுக்குச் சொந்தக்காரர்கள் தான் தவ்ஹீத் பள்ளிவாசல் நிர்வாகிகளாகத் திகழ்கின்றனர். எனவே தான் இன்றைக்கு ஊருக்கு ஊர் தவ்ஹீத் ஜமாஅத் தனிப் பள்ளிகளை உருவாக்கி வருகின்றது. இவை அடித்தளமிடப்படும் போதே இறையச்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
இதை இங்கு எழுதுவதற்குக் காரணம், அனைத்து இறையாலயங்களும் இதைப் போன்று மாற வேண்டும் என்பதற்காகத் தானே தவிர, மற்ற ஆலயங்களைத் தகர்க்க வேண்டும் என்பதற்கல்ல. இந்நிலை கனியும் தருணம் இறைவன் நாடினால் வெகு தூரத்தில் இல்லை. மிக அருகில் தான் காட்சியளிக்கிறது.
மேற்கண்ட நான்கு தீய நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொண்டு பள்ளிவாசல் நிர்வாகிகள் திருந்திக் கொண்டால் அப்போது தான் அவை பள்ளிவாசல்களாகக் கருதப்படும்.
இதனை வேறொரு விதமாகவும் அல்லாஹ் நமக்குத் தெளிவு படுத்துகிறான். இப்ராஹீம் நபியிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது என்று கூறும் இறைவன், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கூட்டத்தை விட்டு நாம் விலகி விட வேண்டும் என வழி காட்டுகிறான்.
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
அல்குர்ஆன் 60:4

இணை கற்பிப்பவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி வாசல்களைப் புறக்கணித்து, தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படையில் பள்ளிகளை அமைப்பது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். அது குடிசையாக இருந்தாலும் சரியே!
அல்லாஹ் நம்மனைவரையும் நேர்வழியில் தொடர்ந்து நடக்கச் செய்வானாக.
thanks to - mahsalafi • 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger