Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

தகவல் உரிமைச் சட்டமும், கட்சிகளின் எதிர்ப்பும் !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் கட்டுப்பட வேண்டும் என ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ள அந்தக் கட்சிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை தவறென்று சொல்கிறார்கள்.

தகவலுரிமைச் சட்டம் தேவையே!
'தகவல் உரிமை’ ஒரு ஜனநாயக தேசத்தின் அடிப்படைத் தேவை. இதன் மூலமாக ஏராளமான ஊழல்களை, முறைகேடுகள் அம்பலப்பட்டிருக்கின்றன. பெரும் நிறுவனங்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் – கூட்டு சேர்ந்து செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த கூட்டணி, தன் தேவைக்காக சட்டங்களை வளைப்பதும், திட்டங்களை மாற்றுவதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல் இன்று தேசத்தின் மையமான பிரச்சனையாக எழுந்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இடதுசாரி முதல்வர்கள் 8 பேர் இருந்துள்ளார்கள். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த  ஜோதிபாசு உள்ளிட்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன்,  புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என ஒருவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால், ஊழலை எதிர்க்கும் பொதுமக்களுக்கு, இடதுசாரிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.

இதனால், ’தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட கூடாது’ என்று சொல்வது - விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்க இடதுசாரிகள் சொல்லும் காரணம் ’கட்சி என்பது ஒரு பொது ஸ்தாபனம் அல்ல’, ‘அனைவருக்கும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவிப்பது, கட்சிகளின் செயல்பாட்டை, ஜனநாயகத்தை பாதிக்கும்’ என்பதாகும்.

தகவல் உரிமைச் சட்டத்தில், அரசியல் கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எப்படி வந்தது?

இந்தக் கருத்து தகவல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டு, தகவல் உரிமைப் போராளிகளால் வழிமொழியப்படுகிறது. இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதன் மூலமும் , அரசு நிர்வாகத்தில் உள்ள நேர்மையானவர்களின் உதவியிலும் முறைகேடுகள் பல வெளிவந்தன. அந்தச் செய்திகள் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தியதையடுத்து – ’அரசியல் கட்சிகளின் போராட்டங்களும்’ ‘சிவில் சொசைட்டி’ போராட்டங்களும் நடந்தன.

ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வெறும் தகவல் போராட்டங்கள் மட்டும் போராது, அரசியல் போராட்டமும், சமூக மாற்றமும் அவசியம் என்பது புரிபடத் தொடங்கிய நேரத்தில் – ஊடகங்கள் சிவில் சொசைட்டி போராட்டங்களையும், லோக்பால் மசோதாவுக்கான உண்ணாவிரதத்தையும் முன் நிறுத்தினார்கள். இப்படி, ஊழல் எதிர்ப்பு போராட்டம் ‘அரசியலை எதிர்த்தவர்களின், அரசியலற்ற போராட்டமாக’ குறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ‘தகவல் உரிமைச் சட்டத்தை’ அனைத்து பிணிகளுக்கும் ஒரே மருந்து என்ற ரீதியில் முன்வைக்கும் வாதங்கள் உருவாகின. 

இது சரியான வாதமா?:
           
இல்லை. மிகத் தவறான வாதம். அரசியலை எதிர்த்த போராட்டங்கள் அரசியலற்றவர்களால் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்பது - அதிகாரத்திற்கு அருகில் ஊழல்வாதிகளை நிறுத்திவிட்டு - எதிர்ப்பாளர்களை வெறும் ‘விமர்சகர்களாக’ சுறுக்கிவிடும். ’குளத்துக்குள் இறங்காமலே குளத்தை சுத்தப்படுத்தலாம்’ என்ற வியாக்கியானமாக அமைகிறது.

அரசியல் என்பது ஒரு போர்க்களம். இங்கே பல்வேறு கருத்துக்களும் மோதுகின்றன. உதாரணமாக ஊழலை எதிர்த்த கட்சிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து போராடுகிறார்கள். தகவல் உரிமையில் ‘அமைப்புகளின் உள் விவகாரங்களையும் கேட்கலாம்’ என்பதானது ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் பயன்படும். ஊழலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். இது அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிவிடும்

அரசியல் கட்சிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா? 

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளை உட்படுத்தாத போது - அவர்களை யாருமே கேள்வி கேட்கக் கூடாதா? என்ற கேள்வி வருகிறது. 
அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த ஏற்கனவே உள்ள அமைப்புகளில், பல குறைகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் மாற்றியமைப்பதே - அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக ‘நபர்களை முன் நிறுத்தும்’ தேர்தல்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறுகின்றன, கொள்கைகள் மக்கள் விரோதமாய்த் தொடர்கின்றன.
எனவே நம் நாட்டின் தேர்தல் தேர்தல் ஆணையத்தை இந்த அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் முறையை “கொள்கை அடிப்படையில் மாற்றுவது”, தேர்தல் பிரச்சாரத்துக்காக கார்பரேட்டுகளின் கையேந்துவதையும், தனி நபர்களை சார்ந்திருப்பதையும் மாற்றி - தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட அளவில் அனைவருக்குமான பிரச்சாரத்தை மேற்கொள்வது. லோக்பால் சட்டத்தை அமலாக்குவது என பல கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டிருப்பது மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினராகவும் உள்ள ‘பொதுமக்கள்’அரசியல் மயப்பட்டால் – கொள்கை விவாதங்கள் முன்னுக்கு வரும். அப்போது கட்சிகளின் தலைமைகள் கேள்விக்குள்ளாகும். சரியான கொள்கைகள் கவனத்தைப் பெறும்.

ஊழலை ஒழிக்க இதுவே போதுமா??

ஊழலை ஒழிப்பதற்கு இது போதாது. மாறாக ஊழலுக்கு போராட்டக் களத்தை அமைக்க இது உதவியாக இருக்கும். மிகப்பெரும் பண முதலைகளின் கையிலிருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது மட்டுமல்ல, மாற்றியமைப்பதும் இன்றைய தேவை. சாமானியர்களின் நலன்கள் முன்னுக்கு வரச் செய்வது - சாமானியர்களின் பங்களிப்பில்லாத அரசியலால் நடக்காது. மாற்றத்தை தொடங்கி வைப்பபவர்களாகவும் – நாமே இருக்க வேண்டும்.

- சிந்தன் ரா
நன்றி - மாற்று
0 comments

உண்மைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி...!


ஜெய்ப்பூரிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பொறியாளர் ரஷீத் ஹுசைன் என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் ஜெய்ப்பூரில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் காவல்துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்தத் தொடங்கினர்.

குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பொறியாளர் ரஷீத் ஹுசைனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று பத்து நாள்கள் காவலில் வைத்திருந்தனர்.

பிறகு அவர் மீது எந்த தவறும் இல்லை என்றுகூறி அவரை விடுதலை செய்து அனுப்பி விட்டனர்.

இந்தப் பத்துநாள்களுக்குள் இன்போசிஸ் நிறுவனம் எந்தவிதமான முன்னறிவிப்பும் தராமல் ரஷீதைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தது.

ஆனால் ரஷீத் ஹுசைன் சும்மா உட்கார்ந்துவிடவில்லை.

2008 ஆகஸ்டில் அவர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராக லேபர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும் ரஷீதுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

இன்போசிஸ் நிறுவனம் ரஷீதுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் முன்னிலையில் இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பும், ராஜஸ்தான் மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முதல் நாளிலிருந்தே ரஷீதின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததுடன் நீதிக்கான நெடும்பயணத்தில் முன் நின்று போராடின. வெற்றி பெற்றன.

“ ரஷீதுக்குக் கிடைத்துள்ள தீர்ப்பு இந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஆகும். அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது இழைக்கப்படும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். தவறான நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரிகளும் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகிறார் ராஜஸ்தான் முஸ்லிம் அமைப்பின் தலைவரும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த தேசியச் செயலாளருமான முஹம்மது சலீம் அவர்கள்.

முஸ்லிம் இளைஞர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தும் போக்கு இனியேனும் நிறுத்தப்படுமா?

நன்றி - வலையுகம் 

01-15 ஏப்ரல் 2013முன்
பக்கம்
பக்க
எண்
007அடுத்த
பக்கம்
 
Background
Background

0 comments

வெற்றி பெற்றோர்!


இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக் கூட்டித்தைச் சார்ந்தவர்களாக ஆக்கியுள்ளான். அவனுக்கேப் புகழனைத்தும்!
இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாட்களில் சில காரியங்களை செய்தவர்களை வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளி­ருந்து தொகுத்துத் தருகிறோம். தாங்களும் அக்காரியத்தை செயல்படுத்தி வெற்றிபெற்றோர்களாக மாறுங்கள்!
கடமையான காரியங்களை சரியாக நிûவேற்றுவோர்
நஜ்த் என்ற ஊரைச்சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒழித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பக­லும் ஐவேளைத் தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா? என்று கேட்டார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை என்றார்கள். அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா? என்றார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர் அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என்மீது கடமையா? என்றார். அதற்கவர்கள் நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை என்றார்கள். உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ர­)
நூல் : புகாரீ (46)
இந்த நபிமொழியின் இறுதியில் அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறைவைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை மேற்சொன்ன ஹதீஸி­ருந்து விளங்கலாம்.
இது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அ­ஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகிவிட்டது. என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது! என்று கூறினார்கள். அதற்கு அவர் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் சப்பஹ அல்லது யுசப்பிஹூ என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக! என்று கூறியபோதும் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர் அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் இதா ஸ‎ýல்­த்தில் அர்லு ஸில்ஸாஹா என்ற சூராவை முழுமையாக ஓதிக்காண்பித்தார்கள். அம்மனிதர் உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒருபோதும் நான் அதிகமாக்கமாட்டேன் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள் ருவைஜில் வெற்றிபெற்றுவிட்டார் என்று இரு முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)
நூல் அபூதாவூத் (1191) அஹ்மத் (6287)
மார்க்கத்தின் கட்டளைகளை பின்பற்றுவதில் ருவைஜில் (ர­) அவர்கள் எவ்வளவு ஆர்வப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் (ர­) அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டுவிடாமல் அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையை அப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதை செயல்படுத்த ஆர்வமும் கொள்ளவேண்டும்..

நபிவழியை மட்டும் பின்பற்றியவர்
“ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையரை உள்ளது. யாருடைய வரையரை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். எவருடைய வரையரை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்துவிட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
நூல் : அஹ்மத் (6664)
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)
இஸ்லாத்தின் வழிமுறை தெளிவாக கூறும் நபிமொழி இது ! மார்க்கத்தின் பெயரால் எத்தனை அனாச்சாரங்கள் நடக்கிறதோ அவை அனைத்தையும் கடுமையாக கண்டிக்கும் நபிமொழி.
இன்று இஸ்லாமியர்கள் முதன்மையாக கடைபிடிக்கவேண்டிய தொழுகை என்ற அமல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறைப்படி நடைபெறுகிறதா? ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவு வித்தியாசப்படுவதை கண்கூடாக நாம் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை விட்டு விட்டு முன்னோர்கள் சொன்னது, பழக்கத்தில் உள்ளது என்று கூறி அவற்றை பின்பவற்றுவதுதான். இவ்வாறு பின்பற்றுபவர் வெற்றியாளர்களா? என்பதை மேற்கூறிய நபிமொழி கவனித்து முடிவு செய்யுங்கள்!
இறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்­துகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா? அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் கிடையாது இருந்தும் நாம் அதை பின்பற்றிவருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதை செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெறமுடியாததோடு தண்டையும் பெறுவார்கள்.
(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பர் : ஜாபிர்
நூல் : நஸயீ (1560)
எனவே வெற்றியாளராக மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் முன்மாதிரிக் கொண்டும் அமல்களைச் செய்வோம்.
உள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்
நமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களை கவனித்து தேவையானதை வாங்கித் தந்தாலும் இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையே விரும்புவார்கள்.
பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதும் அதை பெறுவதற்கு வட்டி உட்பட பல மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதை பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்­ம் 1903
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­)

உறுதியுள்ளவர்கள்
இ‏ஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிகமுக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்புக்காட்டியதைப் போல் அதை பின்பற்றுவதிலும் அதன் கொள்கை கோட்பாடுகளை பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்கவேண்டும். இன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும்போது அதையும் ஏற்று பொறுமையுடன் இருப்பதும் இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதிபெறவேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழிதவறிவிடக்கூடாது.
அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்கச் சென்று இணைவைத்தல் என்ற பெரும்பாவத்தில் சிக்கிவிடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையை காட்டுகிறது. இவ்வாறு நடந்துகொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைமாட்டார்கள். கொள்கையில் உறுதிதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள்.
நூல் அஹ்மத் 21380
அறிவிப்பாளர் சவ்பான்
தொழுகையைப் பேணியவர்
ரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலைமோதும் கூட்டத்தை காணலாம். தொழுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவெறிச்சோடிக் கிடக்கும்.
தொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்கு காரணம். காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுபவர்கள் ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.
ஆண்களுக்கு ஜமாத் தொழுகையை இஸ்லாம் வ­யுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வ­யுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டேத் தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்குகிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலையில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.
நம்மில் பலர் வயதானவர்கள் தான் தொழ வேண்டும். நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்று நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று அவனும் கூறவில்லை. அவனுடைய தூதரும் சொல்லவில்லை.பருவ வயதை அடைந்துவிட்டால் ஐவேளைத் தொழுவது கடமையாகும்.
சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளைத் தொழுவார்கள். ஆனால் ஃபஜர் தொழுகைக்கு வராமல் உறங்கிவிடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முத­ல் இந்தத் தொழுகையைப் பற்றித்தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்த குறைபாட்டையும் நாம் வைக்காமல் நிறைவேற்றியிருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை அவர் கூறிவிடமுடியும். முதல் கேள்வியிலே நாம் தோற்றுவிட்டால் அதன்பின்வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறமுடியமால் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.
அடியானிடம் முத­ல் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித்தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந்தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான்.
நூல் : நஸயீ (461), திர்மிதீ (378)
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ர­)

மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்
ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. அனைத்து உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் அவைகள் தீமைபுரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகிவிட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகிவிடுகின்றது. உள்ளம் கெட்டுவிட்டால் உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அதை தீயஉள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்றுவிட்டதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார். (அல்குர்ஆன் 91:7லி10)
உதாரணமாக ஒருவர் தான் கொடைவள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக தர்மங்களை செய்கின்றார். இவர் செய்யக்கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுஅளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப்படுகின்றது.
100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப்பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள். (புகாரீ 3470)
அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தையேப் பார்க்கின்றான். பார்ப்பதற்கு அறுவறுப்பாக கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற்குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகுகின்றாô.
இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும் பிலால் (ர­) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்கள் செயல்களை சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ர­) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்கள் இவ்வுலகத்திலேயே சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்கள் கூறிச்சென்றுள்ளார்கள். (புகாரீ 1149)
யார் தனது உள்ளத்தை ஈமானுக்காக தூய்மையாக்கி மேலும் தன் உள்ளத்தை தவறுகளி­ருந்து பாதுகாப்பாக்கி (ஈமானில்) மனநிறைவுபெற்றதாக்கி தனது நாவை உண்மை பேசக்கூடியதாகவும் தனது சரீரத்தை சீரானதாகவும் தனது செவிப்புலனை (நல்லவற்றை) கேட்கக் கூடியதாகவும் தனது கண்னை (நல்லவற்றை) காணக்கூடியதாகவும் ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். யார் தனது உள்ளத்தை (நல்லவற்றை) ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்கிவிட்டாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ர­)
நூல் : அஹ்மத் (20348)
ஈமான் கொண்டு விட்டால் மறுஉலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றிபெறுவார்கள் என்பதை இதே அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1லி11)
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக
நன்றி - தமிழ் தவ்ஹீத் 
0 comments

அமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..! அம்மாடியோவ்!

வறட்சியை பார்க்க போன தமிழக அமைச்சர்களின் ஒருநேர மதிய சாப்பாடு பில் ரூ87,020..! 

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியைப் பார்க்க சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20.. இதை உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார். 

போதுமான பருவமழை இல்லை.. இதனால் தமிழக மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது 
இக்குழுவினர் கடந்த 16-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரத்துக்கு சென்றனர். 

சிவகங்கையில் இளையான்குடியில் மட்டும் வறட்சியை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினரின் மத்திய உணவு பில் தொகை ரூ87 ஆயிரத்து 20 என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

இந்தத் தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். 

பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை தலா ரூ2,417, நகராட்சிகள் தலா ரூ9,670 தொகையை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயருக்கு டிடி எடுத்து உடனே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வறட்சியைப் பார்க்க போன அமைச்சர்களின் ஒருநேர சாப்பாடு பில் சுமார் 1 லட்சமா? என்னத்த சொல்றது!! 
0 comments

தமுமுக தவ்ஹீத்வாதிகளே உஷார் ???? உஷார் ?????? உஷார் ??????




திக என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சிலர் ஜாதிகளை ஒழிப்போம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண் ஒருத்திக்கு இந்து (வன்னியன்) பையனை பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். இந்த சம்பவத்தை கண்டு நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாட எண்ணி விட்டான் என்றால் அதனை யாராலும் தடுத்துவிட முடியாது. அது போல் ஒருவரை வழி தவற இருக்கும் சமயத்தில் அவர்களை மீட்டெடுக்கும் அதிகாரம் அவனையன்றி வேறு எவருக்கும் இல்லை. இந்த பெண்ணும் சைத்தானின் பிடியில் சிக்கி வழி தவறுகின்றாள் என்பது இந்த முஸ்லீம் பெயர் தாங்கிக்கு தெரியாமலில்லை. இது போன்ற முஸ்லீம் பெயர் தாங்கிகளை எல்லாம் பொதுச் செயலாளராக வைத்திருக்கும் அந்த [தமுமுக] உத்தமர்களே நாளை மறுமையில் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளார்கள்.
நாங்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சில அடிவருடிகள் இன்று வரை முகநூலில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி?அல்லாஹ்வின் இறை வேதத்தில் கூறப்பட்டுள்ளவற்றிற்கு மாறு செய்யும் இத்தகையோர் தான் நேர்வழி பெற்றவர்களா? நீங்களே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.
இந்த செய்தி வெளியான பதிவின் ஒரிஜினல் லிங்க்:https://www.facebook.com/photo.php?fbid=522287217794551&set=a.104550569568220.8627.100000398329669&type=1&theaterஇவர்கள் இதனையும் கிராபிக்ஸ் என்று சொன்னாலும் சொல்வர்.
அல்லாஹ்! இது போன்ற திருமணம் குறித்து கூறப்பட்டுள்ள வசனத்தை கொஞ்சம் படித்து பாருங்கள். முடிந்தால் உங்களின் [தமுமுக] பொதுச் செயலாளருக்கும் எத்தி வையுங்கள்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான். 91
திருக்குர்ஆன்-2:221
விரிவான தகவல் விளக்கம்:
முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை
'
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.
இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும் போது மனித குல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
எந்தவொரு மதத்தையும் இன்னொரு மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே அதிகமான ஒற்றுமை களும், குறைந்த அளவு வேற்றுமை களும் இருப்பதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை எந்த மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் வேறுபாடுகள் அதிகமாகவும், ஒற்றுமை மிக மிகக் குறைவாகவும் இருக்கும்.
இப்படி மிகப் பெரிய கொள்கை வேறுபாடுகளுடைய முஸ்லிமும் முஸ்லிமல்லாதவரும் திருமண பந்தத்தின் மூலம் இணைவார்களானால் அந்த இணைப்பு உளப்பூர்வமானதாக இருக்க முடியாது; அது நீடிப்பதும் சிரமமாகும்.
இதனால் தான் கடவுள் இல்லை என்ற கொள்கையில் உறுதியுடைவர்கள், தங்கள் குடும்பத்துப் பெண்களைக் கடவுள் நம்பிக்கையுடையவருக்கு மணமுடித்துத் தர மாட்டார்கள். இதைக் கொள்கை உறுதி என்று தான் அறிவுடையோர் எடுத்துக் கொள்வார்களே தவிர துவேஷமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரே ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்கிறான் என்றும், அவனுக்கு மனைவி,மக்கள், குடும்பம் மற்றும் பலவீனங்கள் எதுவுமே இல்லை என்றும் இஸ்லாம் சொல்கிறது. இந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் மறுமையில் கடும் தண்டனை உண்டு எனவும் இஸ்லாம் கூறுகிறது. இதை நம்புகின்ற ஒருவர் இதற்கு நேர் மாறாக நடப்பவர்களுடன் திருமணம் செய்தால் அவர்களிடையே புரிந்துணர்வோ,நல்லிணக்கமோ நீடிக்க முடியாது.
திருமணம் என்பது இயன்ற அளவுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டிய ஒரு வாழ்க்கை. தம்பதியரிடையே கொள்கை அளவிலான மிகப் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அவர்களின் இல்லற வாழ்வு நரகமாகி விடும்.
நிறைய கடவுள்கள் இருக்கலாம் என்று சொல்கின்ற ஒருவரோடு ஒரே ஒரு கடவுள் தான் என்று சொல்கின்ற கொள்கை உடையவரால் கடைசி வரை ஒத்துப் போக முடியாது.
இது போல் ஒரே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம்புகின்ற முஸ்லிம், கடவுளே இல்லை என்று சொல்கின்ற குடும்பத்தோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி வைத்துக் கொண்டாலும் அது நல்ல வாழ்க்கையாக அமையாது.
அதிகக் கட்டுப்பாடுகளை விரும்பக் கூடியவருக்கும் கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போருக்கும் இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போர் யாருடனும் இணங்கிப் போக முடியும். கட்டுப்பாடுகளுடன் இருப்பவர் களால் அவ்வாறு இணங்கிப் போக இயலாது.
அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ளக் கூடியவராக ஒருவர் இருக்கிறார். அதில் எந்தக் கட்டுப்பாடும் இவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் சைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார். அசைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார்.
ஆனால் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்ற கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் சைவ உணவு விடுதியில் மட்டுமே சாப்பிட முடியும். இது போல் தான் பல கடவுள் கொள்கை உடைய ஒருவர் முஸ்லிம்கள் நம்பும் கடவுளையும் ஏற்றுக் கொள்வதில் அவருக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம் வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது.
குழந்தையை எப்படி வளர்ப்பது, சொத்துக்களை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று பல விஷயங்களில் அத்தம்பதிகள் வேறுபடுவார்கள்.
அதே சமயம் பல கடவுளை நம்புகின்ற ஒருவர் அது தவறு என்பதை உணர்ந்து ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்க முடியும் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடன் முஸ்லிம்கள் திருமண உறவை வைக்கிறார்கள்; வைத்துக் கொள்ளலாம்.
சாதி அடிப்படையிலான துவேஷ உணர்வு இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
பிறப்பின் காரணமாக உள்ள உயர்வு தாழ்வு இதற்குக் காரணம் இல்லை. 'இவர் ஒரு கொள்கையில் இருக்கிறார்; அவர்கள் வேறொரு கொள்கையில் இருக்கிறார்கள்; இது இணைந்து வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது' என்பதற்காக அவர் தவிர்க்கிறார்.
இதில் எந்த விதமான துவேஷமும் இல்லை.
நாத்திகம் பேசும் நாயகர்களே! உங்களுக்கு தைரியமிருந்தால் தீண்டாமை ஒழிப்பு என்று சொல்வது போல் இதே ஒரு வன்னியனுக்கும் ஒரு தீண்டாமை கொடுமை இழைக்கப்பட்டவருக்கும் திருமணம் நடத்தி பாருங்கள்.
இவர்கள் கூறுவது எல்லாம் வெறும் போலியானவையே ஒரு வன்னியன்னும் தீண்டாமை என்று கூறும் ஒரு இனத்தவருக்கும் இடையே நடந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேர்கள்? சூறையாடப்பட்ட சொத்துகளின் மதிப்புக்கள் தான் எத்தனை எத்தனை?
இதோ அதற்கான ஒரு உதாரணமான லிங்க்:
http://kractivist.wordpress.com/2012/12/07/attack-on-dalits-of-dharmapuri-a-fact-finding-report/
தகவல் பகிர்வு :
கருத்தாக்கம்: அதிர்வுகள் தொடரும்
நன்றி - rhnthoweed.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger