Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இந்து மதம்.துறவறம். Show all posts
Showing posts with label இந்து மதம்.துறவறம். Show all posts

துறவறம் மனித குல தீர்வா??


உலகில் இந்து ,கிறிஸ்தவ ,புத்த போன்ற பெறும்பான்மையான மதங்கள் துறவறத்தை ஊக்குவிக்கின்றன இஸ்லாத்தை தவிர ,துறவறம் செல்பவர் புனிதர்களாக சித்தாந்தம் கற்பிக்க படுகின்றன .

துறவறம் மனித சமுதாயத்திற்கு நல்வழி காட்டுமா என்பதை நாம் அறிவு பூர்வமாக ஆராய்வோம் .

ஒரு மனிதன் முக்தி அடைய துறவறம்தான் வழி என கூறும் மார்க்க சகோதரர்களுக்கு ,

ஒருவன் முக்தி பெற துறவறம்தான் வழி என்றால் மனிதர்கள் அனைவரூம் முக்தி பெறுவது சாத்தியாமா?

ஒரு துறவி சாமியாரின் தாயும் தந்தையும் முக்தி பெற விரும்பியிருந்தால் இந்த சாமியார் இந்த உலகில் பிறந்திருக்க முடியுமா? 

ஒரு ஆணும் பெண்ணும் (பெற்றோர்) இருவர் முக்தியை இழந்து ஒருவருக்கு (சாமியார் )முக்தி கிடைப்பதாக இருந்தால் இது நியாயமா? இது இறைவன் கொடுத்த வழியாக இருக்க முடியுமா? துறவறம் மூலம் மனிதர்கள் அனைவரும் முக்தி -( இறைவனின் பொருத்தம்) பெற முடியுமா? 


அப்படியே மனிதர்கள் அனைவரும் துறவறம் பூண்டு இறை பொருத்தம் பெற முடிவு பண்ணி விட்டால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பின் இவ்வுலகம் இயங்குமா? 

அனைவரும் துறவறம் பூண்டுவிட்டால் உலகம் ஸ்தம்பித்து விடாதா ???

தாம்பத்யம் என்பது கடவுள் மனிதனுக்கு அளித்த இயற்கை வரம் அதை எப்படி கட்டுபடுத்த முடியும் ?ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே இறைவனின் சித்தம் 

துறவறம் பூண்டவர்கள் மற்றவர்களை விட எல்லா வகையிலும் தாழ்ந்தவர்களாவர்.துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இல்லை என்றால் அவரால் எந்தப் பிரச்சனையும் இல்லை. துறவறம் பூண்டவர்களுக்கு ஆண்மை இருந்தால் நிச்சயம் அவர்கள் தவறான வழியில் அந்த சுகத்தைப் பெற முயல்வார்கள்.இது தான் மனிதனின் இயற்கை.

தீரேந்திர பிரம்மச்சாரி,சந்திரா சாமி,நித்யானந்தா ,பிரேமானந்தா ,என பல ஆனந்தாகளின் ஆனந்த தாண்டவங்கள் அரங்கேறியது எல்லாம் இதன் அடிப்படையில் தான் .

சுவாமி நித்யானந்தாவை எடுத்துக்கொள்வோம். அவர் இதுபோன்ற 

ஈனச்செயலில் ஈடுபடுவதற்கு அடித்தளமிட்டது எது? துறவறம் என்பதை 
எவராலும் மறுக்க முடியாதல்லவா? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் ஆசைகள், உணர்ச்சிகள் இருக்கவே செய்கின்றன. அந்த ஆசைகளும் உனர்ச்சிகளும் வரையரையோடு இருந்தால் அவன்தான் மனிதன். வரையரையை விட்டும் அப்பாற்பட்டு விட்டால் அவன் மிருகமாக மாறி விடுகின்றான்.


இவ்விரண்டிற்கும் அப்பால் தனக்கு எந்தவித ஆசாபாசங்களும் இல்லை, தான் ஒரு துறவி என்று வாதிடுவானாயின் அவன் வெறும் பொய்யனாகத்தான் இருப்பான்.

புத்த்தர் கூட திருமணம் ஆகி குழந்தை பெற்று எடுத்து பின்புதான் அவர் துறவம் பூண்டார்.

துறவி எக்காலத்திற்கும் பொருந்தா ஒன்று அப்படி வாதிடுபவர்கள் பொய்யன் தவிர வேற ஒன்றும் இல்லை.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger