Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அல்லாஹ்வை நேசிப்பது. Show all posts
Showing posts with label அல்லாஹ்வை நேசிப்பது. Show all posts

போதுமென்ற மனம்

நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும்.

 "யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் பொறுப்பு ஏற்கிறார்களோ அவருக்கு சுவனத்தை நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸவ்பான் (ரலி) அவர்கள், "நான் (அவ்வாறு இருப்பேன்)' என்று கூறினார்கள். அவர் யாரிடமும் எதையும் கேட்காதவராக ஆகிவிட்டார். 

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: அபூதாவூத் 1400 

நாம் பிறரிடத்தில் யாசகம் கேட்காமல் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். 

ஏழைக்கு தர்மம் செய்ய வேண்டும் 

பிறருக்குத் தருவதாகயிருந்தால் ஏழைக்குக் தர வேண்டும். நமது அந்தஸ்திலுள்ள பணக்காரனுக்குக் தரக் கூடாது. 

வாழ்க்கையில் போதிய செல்வம் இல்லாமலிருந்தாலும் யாரிடமும் கேட்காமல் இருப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்பவரே ஏழையாவார். அப்படிக் கேட்டாலும் பிறரிடத்தில் கெஞ்சிக் குழைந்து கேட்காமல் தனது சுய மரியாதையைப் பேணுபவன் தான் ஏழை. இப்படிப்பட்டவர்களுக்குத் தான் நமது செல்வங்களை தர்மம் செய்ய வேண்டும்.  

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓரிரு கவளம் உணவுக்காக அலைபவன் ஏழையல்லன். மாறாக, தன் வாழ்க்கைக்குப் போதிய செல்வம் இல்லாமலிருந்தும் பிறரிடம் கேட்க வெட்கப்படுகின்றவனும் அல்லது (அப்படிக் கேட்டாலும்) கெஞ்சிக் குழைந்து கேட்காதவனுமே ஏழையாவான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1476 

கேட்கக் கூடாது; தந்தால் வாங்கலாம் 

நாம் ஏழையாக இருந்தாலும் பிறரிடத்தில் கேட்கக் கூடாது. நமது சுயமரியாதையை நாம் பேண வேண்டும். அவர்களே நமது கஷ்டங்களைப் பார்த்து நமக்குத் தந்தால் அதை வாங்கலாம். அதை மறுக்கக் கூடாது.      

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். நான் இதை என்னைவிட ஏழைக்கு கொடுங்களேன் என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இதை வாங்கிக் கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும் பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதைத் தொடரச் செய்யாதீர்! (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்)'' என்றார்கள். 

நூல்: புகாரி 1473 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வலிந்து) கேட்காமலும் உள்ளம் ஆசைப்படாமலும் தனது சகோதரனிடமிருந்து ஏதாவது பொருள் ஒருவருக்கு வந்தால் அதை அவர் ஏற்கட்டும். அதை மறுக்க வேண்டாம். அது அல்லாஹ்விடமிருந்து வந்த உணவாகும். 

அறிவிப்பவர்:  காலித் பின் அதீ அல்ஜுஹ்னி (ரலி) நூல்: அஹ்மத் 17257 

பிறருக்காகப் பரிந்துரைத்தல் 

நமக்குப் போதுமான செல்வம் இருக்கும் போது நமக்கு யாராவது அன்பளிப்பு வழங்கினால், அது நமக்குத் தேவையில்லையென்றால் அதைப் பிறருக்குத் தருமாறு பரிந்துரைக்கலாம். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடமும் கேட்காமலும் உள்ளம் ஆசை வைக்காமலும் இந்த உணவிலிருந்து ஏதாவது ஒன்று ஒருவருக்கு வந்தால் அவர் அதைத் தனது உணவில் சேர்த்து விசாலமாக்கிக் கொள்ளட்டும். அவர் தேவையில்லாதவராக இருந்தால் அவரை விடத் தேவை உடைய ஒருவருக்குக் கொடுக்கட்டும்     

அறிவிப்பவர்: ஆயித் பின் அம்ரு (ரலி) நூல்: அஹ்மத் 19726 

போதுமென்ற மனமுள்ளவன் பணக்காரன் 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1898 

போதுமென்ற மனமுள்ளவன் வெற்றியாளன் 

அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்திலிருந்து போதுமாக்கிக் கொள்ள வேண்டும். யாரிடத்தில் போதுமென்ற மனம் இருக்கிறதோ அவர் தான் வெற்றியாளர் ஆவார். 

அவன் மாடி வீடு கட்டுகிறான்; நாமும் மாடி வீடு கட்ட வேண்டும். அவன் பைக் வாங்குகிறான்; நாமும் பைக் வாங்க வேண்டும். அவள் நகை வாங்குகிறாள்; நாமும் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். 

வீடு கட்டுவதற்கும், பைக் வாங்குவதற்கும், நகை வாங்குவதற்கும் நாம் கடன் வாங்குகிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு வழங்கியது போதும் என்ற மனம் நம்மிடத்தில் இருந்தால் யாரிடத்திலும் கடன் வாங்காமல் குடும்பத்தை நடத்தலாம். 

நாம் கடன் வாங்கி விட்டு அதை திருப்பித் தருவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். நாம் மரணித்து விட்டால் நம்முடைய குடும்பத்தாரிடம் அந்தக் கடனைக் கேட்கிறார்கள். அதைச் செலுத்துவதற்கு அவர்களும் கஷ்டப்படுகிறார்கள். அதனால் அல்லாஹ் நமக்கு வழங்கிய செல்வத்தைப் போதுமென்ற மனதுடன் நாம் பொருத்திக் கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1903   

 உனக்கும் கீழே உள்ளவர் கோடி 

நாம் ஏழையாக இருக்கும் போது நமக்குக் கீழ் உள்ளவரைப் பார்க்க வேண்டும். நாம் ஏழை என்றால் நமக்குக் கீழ் உள்ள பரம ஏழையைப் பார்க்க வேண்டும். நாம் நடுத்தர பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள ஏழையை பார்க்க வேண்டும். நாம் பெரும் பணக்காரனாக இருந்தால் நமக்குக் கீழ் உள்ள நடுத்தர பணக்காரனைப் பார்க்க வேண்டும். இப்படி இருந்தால் நமக்குப் போதுமென்ற மனம் வந்துவிடும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5671 

ஒரு மனிதர் நம்மை விட செல்வந்தராகவும், அழகானவராகவும் இருந்தால், அவரைப் பார்த்து நமது மனதை அலைய விடாமல், செல்வத்திலும் அழகிலும் நம்மை விடக் குறைந்தவரைப் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்தால் நமது மனதைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ளலாம். நமது உள்ளத்தில் போராசையும் வராது. இந்த வழிமுறைகளை நாம் அனைவருமே கடைபிடிக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-) நூல்: புகாரி 6490 

உலகத்தில் அன்னியனைப் போல் வாழ வேண்டும் 

இவ்வுலகில் நாம் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும்; நம்மிடத்தில் தோட்டம், துறவு, வீடு, பங்களா, கார் இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். இப்படி ஆசைப்படும் போது இவ்வுலகில் தடுக்கப்பட்ட அனைத்து செயல்களையும் செய்வதற்குத் தயங்க மாட்டோம். இவ்வுலகில் தவறு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் இருக்கிற செல்வத்தை வைத்துப் போதுமாக்கிக் கொள்ள வேண்டும். அல்லது இவ்வுலகில் வழிப்போக்கனைப் போன்று வாழ வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி பெற்று விடலாம். 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு "உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு'' என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்கüல் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "நீ மாலை நேரத்தை அடைந்துவிட்டால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாüல் சிறி(து நேரத்)தைச் செலவிடு'' என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள். 

நூல்: புகாரி 6416 

செல்வத்திற்கு அடிமையானவன் துர்பாக்கியசாலி 

இந்த உலக ஆசாபாசங்களுக்காகவும் தனது குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் நாம் இந்த உலகத்தில் செல்வங்களைச் சேமிப்பதற்கு ஆசைப்படுகிறோம். ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் செல்வத்தின் மீது உள்ள மோகத்தால் நாம் நஷ்டவாளியாக ஆகிவிடுகிறோம். அல்லாஹ் நமக்குத் தாராளமாக செல்வத்தை வழங்கும் போது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறோம்; வணக்க வழிபாடுகளையும் சரியான முறையில் செய்கிறோம். 

ஆனால் அல்லாஹ் செல்வத்தைக் குறைவாகத் தந்து நம்மை சோதிக்கும் போது அல்லாஹ்வை நாம் திட்டுகிறோம். அல்லது வணக்க வழிபாடுகளில் குறை வைக்கிறோம். வணக்க வழிபாடுகளில் குறை வைக்கும் போது நாம் நஷ்டவாளியாக மாறி விடுகிறோம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி  ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான்.  அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.   

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6435 

செல்வத்திற்கு அடிமையானால் மார்க்கம் போய்விடும் 

செல்வத்தின் மீதுள்ள மோகத்தால் மார்க்கத்திற்குக் கட்டுப்படாமல், மார்க்கம் அனுமதிக்காத செயல்களில் ஈடுபடுகிறோம். ஒருவர் செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி பதவியின் மீது ஆசை கொள்கிறான். 

தற்காலத்திலுள்ள அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் அரசியலுக்கு வருவதில்லை. நாம் முன்னேற வேண்டும்; பணக்காரனாகவும் மதிப்புமிக்கவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறார்கள். 

இவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் தன்னால் முடிந்த அளவு கடைபிடிப்பார்கள். ஆனால் இந்தச் சாக்கடையில் விழுந்த பிறகு இஸ்லாம் கூறிய அனைத்துக் கடமைகளையும் மறந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் மார்க்கமும் இவர்களிடத்திலிருந்து அழிந்து விடும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ஆட்டு மந்தையினுள் அனுப்பி வைக்கப்பட்ட பசியோடு உள்ள இரண்டு ஓநாய்கள் அதனை நாசமாக்குவதானது, ஒரு மனிதனுக்கு செல்வத்தின் மீதுள்ள பேராசை அவனுடைய மார்க்கப் பற்றை நாசாமாக்குவதை விட மோசமானது கிடையாது. அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதி  2298 

நன்றி - onlinepj 
0 comments

அல்லாஹ்வை நினைப்போம் அர்ஷின் நிழ­ல் நிற்போம்

இன்று நாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் வீதியில் நடந்து சென்றாலும் டீக்கடையில் சென்று டீ குடித்தாலும் வாகனத்தில் ஏறினாலும் எங்கும் இசை மழை!  ஆபாசமான பாடல் வரிகள் நம்முடைய காதுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  அவை செவி வழியாகச் சென்று உள்ளத்தில் பதிவாகி நம்முடைய நாவுகள் அந்த வரிகளை முனுமுனுக்க ஆரம்பிக்கின்றன.

நாம் தனிமையில் இருக்கும் போது நம்மை அறியாமல் இந்தப் பாடல்கள் நம்முடைய நாவுகளில் சரளமாக நடமாடுகின்றன.  இது போன்ற கட்டங்களில் நாம் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போல் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.  (அல்குர்ஆன் 7:200, 201)

தனிமையில் இருக்கும் போது அல்லாஹ்வின் திக்ர் மழையில் நமது நாவுகள் நனைய வேண்டும்.  தனிமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழ­ல் நமக்கு அரவணைப்பு கிடைக்கின்றது.


''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தனது நிழ­ன் மூலம் நிழலளிப்பான்.  1. நீதி மிக்க ஆட்சியாளர்.  2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.  3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்திய மனிதன்.  4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் உள்ளம் உடையவர்.  5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர்.  6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், ''நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றேன்'' என்று கூறியவர்.  7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி),  நூல் : புகாரி 6806

பாதுகாப்புக் கேடயம்

''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்­ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது.  அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது.  அவன் எல்லாவற்றின் மீதும் வ­மையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.  மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.  அவரது கணக்கி­ருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும்.  மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.  மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது.  ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி).  நூல் : புகாரி 6403

அல்லாஹ்வை நினைத்தால் அவன் நம்மை நினைப்பான்

என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்! (அல்குர்ஆன் 2:152)

நாம் நடந்து சென்றால் அல்லாஹ் ஓடி வருவான்

''என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும் போது நான் அவனுடன் இருப்பேன்.  அவன் தனக்குள் என்னை நினைவு கூர்ந்தால் நானும் அவனை எனக்குள் நினைவு கூர்வேன்.  அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களை விடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூர்வேன்.  அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் இரு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன்.  அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்'' என்று உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி). நூல் : புகாரி 7405

சுவனத்தின் புதையல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது அல்லது அவர்கள் கைபரை நோக்கிச் சென்று திரும்பிய போது, மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் ஏறுகையில், ''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். லாயிலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை'' என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் காது கேட்காதவனையோ அல்லது இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை.  நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கின்றீர்கள். அவன் உங்களுடனே இருக்கின்றான்'' என்று கூறினார்கள்.  அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு. ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவத்தி­ருந்து விலகவோ நன்மை செய்ய ஆற்றல் பெறவோ முடியாது'' என்று கூறுவதைக் கேட்டார்கள்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். ''அப்துல்லாஹ் பின் கைஸ்!'' என்று அழைத்தார்கள்.  ''கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் பதிலளித்தேன். ''உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்'' என்று சொன்னார்கள்.  ''சரி! அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று நான் கூறினேன்.  ''லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ர­லி). நூல் : புகாரி 4202
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா பாதையில் சென்று கொண்டிருந்தார்கள்.  அவர்கள் ஜும்தான் என்ற மலையைக் கடந்து சென்ற போது. ''செல்லுங்கள்! இது தான் ஜும்தான் மலையாகும்.  முஃப்ரிதூன் முந்தி விட்டனர்'' என்று சொன்னார்கள்.  ''முஃப்ரிதூன் என்றால் யார்?'' என்று நபித்தோழர்கள் வினவிய போது. ''அல்லாஹ்வை அதிகமதிகம் நினைக்கும் ஆண்கள், பெண்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : முஸ்­லிம் 4834

சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும் திக்ர்

மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­லி), நூல் : புகாரி 1142

ஆயிரம் நன்மைகள்

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம்.  அப்போது. ''உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?'' என்று கேட்டார்கள்.  எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள். ''ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ர­லி), நூல் : முஸ்­லிம் 4866

பாவத்திற்குப் பரிகாரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையி­ருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன்.  உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)'' என்று சொல்பவர்களாக இருந்தனர்.  அப்போது ஒருவர், ''அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?'' என்று கேட்ட போது, ''அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூபர்ஸா அல் அஸ்லமி (ர­லி), நூல் : அபூதாவூத் 4217

வல்ல  இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ....

நன்றி - துபாய் tntj 
0 comments

படைத்தவனிடம் பாவமன்னிப்புத் தேடுவோம்


கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். ஸுரா ஆல இம்ரான் (3:135)

யாரேனும் தீமையைச்செய்து அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்து பின்னர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால்,    அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார். ஸுரா அன்னிஸா (4:110)

அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா?அல்லாஹ் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன்.          ஸுரா அல் மாயிதா (5:74)

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உலக காரியங்களுக்காகவே அதிக நேரத்தை செலவிடுகின்றோம். அதில் படைத்த இறைவனை நினைப்பது என்பது மிகக் குறுகிய நேரமே. ஐவேளை தொழுகையில் மட்டுமே இறைவனுடைய நினைப்பு வருகிறது. பள்ளியை விட்டு வெளியே வந்தால் உலக நினைப்புகளில் மூழ்கி விடுகின்றோம். இந்த அளவுக்கு ஷைத்தானின் சூழ்ச்சி நம்மை இறை நினைப்பை விட்டும் பாராமுகமாக்கி விடுகிறது. இதனால் வாழ்வில் பல தவறுகளை இழைக்கின்றோம். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கின்றான். எனவேதான் அவனிடமே பாவமன்னிப்பு தேடவேண்டும் என்றும் நாளை மறுமையில் அவனிடமே மீளுதல் உண்டு என்பதை உணர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். மேற்கண்ட வசனங்களும் இதையே உணர்த்துகிறது.

மேலும் செய்த தவறை மறுபடியும் செய்யாமல் அல்லாஹ்விற்கு பயந்து அதிலிருந்து முழுமையாக விடுபட்டு நன்மையான காரியங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்றும் இவ்வசனங்கள் உணர்த்துகிறது.

நபி(ஸல்) அவர்களின் இஸ்திஃக்ஃபார்

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்கு செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். ஸுரா அல் ஃபத்ஹ் (48:1,2,3)

இந்த வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் அல்லாஹ் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. அதே சமயம் தினமும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் 'அஸ்தஃபிருல்லாஹ் வ அதூபு இலைஹி ' (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6307

'எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) நூல் : முஸ்லிம் 4870

'மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி) நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான பாவங்களைச் செய்து விட்டு கல்லாக உட்கார்ந்திருக்கின்றோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது கிடையாது. ஒரு மாதிரியான மிதப்பில் இருக்கின்றோம். இது போன்ற பாவங்களை விட்டு விலகுவதுடன் அன்றாடம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி அதற்குரிய பலன்களை அடைய வேண்டும்.

வேதனையை விட்டும் பாதுகாவல்
 
(முஹம்மதே!) நீர் அவர்களுடன் இருக்கும் போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை. ஸுரா அல் அன்ஃபால் (8:33)

பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தண்டனை இறங்காது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் செல்வமும், மழை நீர் வளமும்
 
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். ஸுரா நூஹ் (71:10,11,12)
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினால் அவன் மழை, செல்வங்கள், மக்கள் ஆகியவற்றைக் கொண்டு நமக்கு உதவுவான் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சுவனத்தைப் பெற்றுத் தரும் இஸ்திஹ்ஃபார்

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

'அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க.     வ வஃதிக்க மஸ்ததஃத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஃத்து. அபூஉ லக்க பி நிஃமத்திக்க அலைய்ய வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஹ்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.

(பொருள்: அல்லாஹ்வே! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னை படைத்தாய். நான்  உனக்குச் செய்து கொடுத்த உறுதிமொழியையும், வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகின்றேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில் பாவத்தை மன்னிப்பவன்     உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.)

என்று ஒருவர் கூறுவதே தலை சிறந்த பாவமன்னிப்பு கோரல் (ஸய்யிதுல் இஸ்திஃக்ஃபார்) ஆகும். மேற்கண்ட பிரார்த்தனையை நம்பிக்கையோடும், தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டு, காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) நூல்: புகாரி 6306
 
ஸஹர் நேரத்தில்...

அவர்கள் இரவின் கடைசி நேரங்களில் பாவ மன்னிப்புத் தேடுவார்கள். ஸுரா அத்தாரியாத் (51:18)

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுவோராகவும், (இறைவனுக்கு) கட்டுப்பட்டோராகவும், (நல் வழியில்) செலவிடுவோராகவும், இரவின் கடைசி நேரத்தில் பாவ மன்னிப்புத் தேடுவோராகவும் (இருப்பார்கள்.) ஸுரா ஆல இம்ரான் (3:17)

இந்த வசனங்களில் இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளைப் பற்றி சொல்லும் போது, ஸஹர் நேரத்தில் அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த வசனங்களுக்கு விளக்கமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இரவின் பிற்பகுதியில் பாவமன்னிப்பு தேடுவதை வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1145

தொழுகையில் ஸலாம் கொடுத்ததும்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பும் போது மூன்று தடவை (அஸ்தஹ்ஃபிருல்லாஹ் என்று) பாவமன்னிப்பு தேடுவார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி) நூல்: முஸ்லிம் 931

எனவே படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்.அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக

துபாய் tntj 
0 comments

வெற்றியாளர்கள் யார்?

நல்லறங்கள் செய்பவர்கள் 

இஸ்லாம் மனிதர்களுக்கு நல்லறங்களை செய்யுமாறு கட்டளையிடுகின்றது. ஆனால் இதை பெரும்பாலும் யாரும் கடைபிடிப்பதில்லை. நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.
திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர்
ஆவர். அல்குர்ஆன் ; 28;67
நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அல்குர்ஆன் ; 22;77

எதுவெல்லாம் நல்லறங்கள் ?

ஒரு முஸ்லிம் மார்க்கக் கட்டளைகளை மீறாமல் அவன் செய்யும் அனைத்து காரியங்களையும் இஸ்லாம் நல்லறங்களாகவே பார்க்கிறது. தனக்குரிய கடமைகளை அவன் செய்வதிலிருந்து குடும்பத்தினரை அவன் கவனிப்பதும்,மற்றவர்களிடத்தில் அவன் உறவு பாராட்டுவதும், சிரிப்பதும், உறங்குவதும், சாப்பிடுவதும் அவனுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு அவன் பொறுமை காப்பதற்கும் ஆபத்தான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு அவன் உதவுவதும் நல்லறங்கள் ஆகும்.

மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட. நூல் : புகாரி ; 56பொருளாதாரத்தைப் பெருக்குவதில் மட்டுமே முழு நேரத்தையும் கழிக்கும் ஆண்கள் தன் மனைவிக்காகவும், குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். எத்தனை ஆண்கள் தன் மனைவியுடன் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுகிறார்கள்?. தன் மனைவி சாப்பிட்டாளா? சாப்பிடவில்லையா?என்று கூட கணவன்மார்களுக்கு தெரிவதில்லை. இவர்கள் இந்த நபிவழியை செயல்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்

மனைவியிடத்தில் சிறிது நேரத்தையாவது ஒதுக்கி பேசுவதுகூட நல்லறமே.
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியதை நாம் ஒதுக்கிறோம்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதுமையடைந்த பின்) உட்கார்ந்து (இரவுத் தொழுகை) தொழுதிருக்கிறார்கள்.அப்போது உட்கார்ந்தபடியே ஓதுவார்கள். ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது எழுந்து நின்று அதை நிலையிலேயே ஓதிவிட்டு ருகூஉச் செய்வார்கள். பின்னர் சஜ்தாச் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் இது போன்றே செய்வார்கள். தொழுது முடித்ததும் பார்ப்பார்கள். அப்போது நான் விழித்துக்கொண்டிருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். நான் உறங்கிக்கொண்டிருந்தால் அவர்களும் படுத்துக் கொள்வார்கள். நூல் : புகாரி ; 1119

வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பினோமா, சாப்பிட்டோமா, டிவியை பார்த்துவிட்டு தூங்கினோமா என்று வாழ்க்கை நடத்தும் ஆண்கள் ஏராளம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசிக்கொண்டிருந்தது ஆண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

சிறு உதவிகள் செய்யுங்கள்

அஸ்வத் பின் யஸீத் அவர்கள் கூறியதாவது: "தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?''என்றுநான் (அன்னை) ஆயிஷா (ர) அவர்கடம் கேட்டேன். அவர்கள், "தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி (ஸல்) அவர்கள் செய்து வந்தார்கள். தொழுகை (நேரம்) வந்து விட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்'' என்று பதிலத்தார்கள்.
நூல் : புகாரி 6039

நாட்டின் ஜனாதிபதியும் ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தன் வேலைகளை தானே செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மனைவியிடத்தில் நல்ல முறையில் நடப்பதற்கு நன்மை என்று கூறி அதை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள்.
நோயுறும் போது ஆறுதலாக உடல் நிலை சரியில்லாத மனைவியிடத்தில் நபிகளார் அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்வார்கள்.
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்கன் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது) அவர்கடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, "எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான். இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெயே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்ல் ஒரு சிறிதும், நான் நோயிருந்து குணமடைந்து வெயே செல்லும் வரை எனக்குத் தெரியாது.  நூல் : புகாரி; 4141

அனஸ் பின் மாக் (ர) அவர்கள் கூறியதாவது: நானும் அபூ தல்ஹா (ர) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களுடன்ஸஃபிய்யா (ர) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்கன் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அனஸ் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்: அபூதல்ஹா அவர்கள் தமது ஒட்டகத்திருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி'' என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள் மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே, அப் பெண்மணி (ஸஃபிய்யா (ர) அவர்கள்) எழுந்து கொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களுடைய வாகனத்தைச் சரி செய்து தந்தவுடன் இருவரும் ஏறிக் கொண்டனர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், "பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள். நூல் : புகாரி 3086

மார்க்கத்திற்கு உட்பட்டு நன்மையை எதிர்பார்த்து. நபிவழியை பின்பற்றி பெண்களிடம் நல்ல முறையில் நடந்து நன்மைகளை அடைவோம்.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5186

முதலாளியிடத்தில் நல்ல முறையில் நடப்பதும் நல்லறமே!

பெரும்பாலும் வேலைசெய்பவர்கள் தன் முதலாளி தனக்கு இடுகின்ற கட்டளையை வெளிப்படையாக புலம்பிக்கொண்டோ அல்லது மனதிற்குள் புழுங்கிக்கொண்டோ செய்வதை காண்கின்றோம். அந்த வேலையை மனமுவந்து செய்வதற்கும் இறைவனிடத்தில் கூலி இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் உண்டு.

1. வேதக்காரர்களில் ஒருவர் தமது (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதரையும் (இறுதித் தூதர்) முஹம்மதையும் நம்பிக்கைகொண்டார்.

2. ஓர் அடிமை அல்லாஹ்வின் கடமைகளையும் தம் எஜமானரின் கடமைகளையும் நிறைவேற்றினான்.

3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்து அவளுக்கு ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து,அவளுக்கு கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிருந்து விடுதலை செய்து அவளைத் தாமே மணந்தும் கொண்டவர். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.)
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),நூல் : புகாரி 97

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக,முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமான முறையில் செலவிடக்கூடிய, நம்பகமான கருவூலக்காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),நூல்: புகாரி 2319

தன் முதலாளி தன்னை நம்பி தன்னிடத்தில் ஒப்படைக்கின்ற பொருட்களில் மோசடி செய்பவர்களும் மக்களில் இருக்கின்றனர். இது நயவஞ்கனின் செயல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும் போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்கத்தால் அதற்கு மாறுசெய்வான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி :2749

வழியறியாதவர்களுக்கு பாதையை அறிவித்துக் கொடுப்பதும் நல்லறமே

ஒரு முதியவர் பஸ் நிலையத்தில் நின்று இந்த பஸ் எங்கு செல்கிறது? என்று கேட்டால் அதற்கு ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் இக்கேள்விக்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு சிலர் மட்டுமே பதில் கூறுவார்கள். என்றாலும் சிலருக்கு அது அவருக்குப்புரியாத போது அதை அவர் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பார். அப்போது கோபம் கொள்ளாமல் அவருக்கு புரியும் விதமாக கூறவேண்டும்.

இது பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் பொதுவாகவே மருத்துவமனை, மஸ்ஜித், ஆட்டோ நிலையம்,குறிப்பிட்ட ஒரு நபருடைய வீடு போன்ற பல இடங்களுக்கும் நாம் வழிகாட்டுவதை கூட இஸ்லாம் நல்லறம் என்றே கூறுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதனின் (உடலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும் தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் : புகாரி 2891

உயிருக்கு போராடுபவருக்கு உதவுவதும் நல்லறமே !

பேருந்து நிலையங்கள் போன்ற நெருக்கடியான இடங்களில் விபத்துகள் ஏற்படுவது எதார்த்தமே! இவ்வாறு விபத்துகள் ஏற்படும் போது உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவருக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவாமல் பிரச்சனைகளிருந்து
விலகினால் சரி என்று அனைவரும் ஒதுங்கிவிடுகின்றனர். இந்நேரத்தில் அந்த மனிதருக்கு உடலால் முடியுமென்றால் உதிரத்தையோ அல்லது இயன்ற அளவு பணத்தையோ கொடுத்து உதவினால் ஓர் உயிரை காப்பாற்றிய நன்மை கிடைக்கும்.

கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர் அல்குர்ஆன் : 5:32

ஒருவர் மற்றவரை காப்பாற்றும் போது அதை பார்க்கின்ற பொது மக்கள் என்றாவது ஒரு நாள் தங்கள் கண் முன்னால் நடக்கும் விபத்துகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு விபத்து ஏற்பட்டால் வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும் மக்கள் ஒன்றுகூடுகின்றனர்.

இந்நிலை தொடருமானால் மனித சமுதாயம் பெரிய பின் விளைவை சந்திக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ற நோயாளிக்கு எந்த ஒரு மருத்துவரும் முன் பணம் செலுத்தாவிட்டால் அறுவை சிகிச்சை செய்வதில்லை. இரவு 10 மணிக்கு மேல் உடல்நிலை சரியில்லாதவர்(ஏழை)களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்குள்ள செவியர்கள்(நர்ஸ்கள்) தங்களது தூக்கத்தை மக்கள் கெடுத்துவிட்டதாக கோபம் கொள்கின்றனர். அரசாங்கம் இந்த மக்களை கவனிப்பதற்காகத் தான் பகல் டியூடி இரவு, டியூடி என்றே நேரத்தை அவர்களுக்கு பிரித்து கொடுத்திருக்கின்றது இதற்கு அரசாங்கம் இவர்களுக்கு சம்பளத்தைகொடுத்திருந்தும் இவர்களுக்கு கை காசு கொடுப்பவர்களுக்கு மட்டுமே சிறந்த முறையில் கவனிக்கின்றன.

இதை தொழிலாக பார்க்காமல் மக்களின் உயிர்களை காக்கின்ற பொது தொண்டாக இஸ்லாம் மனிதர்களை கவனிக்கச் சொல்கின்றது.

தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமே !

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் கொடுக்காமல் இருந்தால் சரி என்ற பழமொழிக்கேற்ப எந்த உதவியும் செய்யாமல் இருப்பவர்கள் கூட சும்மா இருந்து கொண்டு குடும்பங்களை பிரிப்பது போன்ற பெரிய பெரிய பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருப்பதை காண்கின்றோம். பொருளாதாரத்தாலோ உடலாலோ யாருக்கும் எந்த நல்லதையும் செய்ய முடியாவிட்டாலும் கூட மற்றவர்களுக்கு தீமை செய்யாமல் இருப்பதும் நல்லறமாகும்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்'' என்று கூறினார்கள். அப்போது "(தர்மம் செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்'' என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடல்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்'' என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்''என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?'' என்று கேட்டதற்கு,நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்'' என்றார்கள். நூல் : முஸ்லிம் : 1834

நன்மைக்கு முந்துவோம்

"விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது.
அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில் (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. அல்குர்ஆன் : 57:20

இவ்வாறு தீமையான காரியங்களுக்கு முந்தாமல் நன்மையான காரியங்களை செய்வதற்கு போட்டியிடவேண்டும்

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்
அல்குர்ஆன் 2 : 148

அபூஹுரைரா (ர) அவர்கள் கூறியதாவது : ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்கடம் வந்து, "செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின் றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்;தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)'' என்று கூறினர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்கடையே வாழ்கிறீர்களோ அவர்கல் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துல்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்''என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்கல் சிலர் சுப்ஹானல்லாஹ் 33தடவை, அல்ஹம்துல்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்'' என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், "சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத் துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும்'' என்று பதிலத்தார்கள். நூல் : புகாரி 843

வளரும் ஈன்ஷா ஆல்லாஹ்
நன்றி - தீன் குழப்பென்மணி 

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger