Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். Show all posts
Showing posts with label அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். Show all posts

கணக்குப் போடத் தெரிந்த தாவரங்கள்

தாவர வகைகள் தமக்கு தேவையான உணவையும் அதன் சேமிப்பையும் கணக்கிட்டே செய்கின்றன என்று ஒரு ஆய்வு முடிவில் இப்போது தெரியவந்துள்ளது.
'இ லைஃப் ஜர்னல்' எனும் அறிவியல் சஞ்சிகையில் இது குறித்து எழுதியுள்ள பிரிட்டிஷ் தாவரவியல் விஞ்ஞானிகள், தாவரங்கள் தமது உணவுத் தேவை மற்றும் பயன்பாடு குறித்த கணக்குகளை மேற்கொள்ள தமக்குள்ளேயே ஒரு திறமையைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
ஒவ்வொரு தாவரமும் இரவு நேரங்களில், தமக்கு எந்த அளவுக்கு மாவுச் சத்து தேவை என்பதை, பகல் நேரத்தில் சூரிய ஒளி இருக்கும் வேளையில், அதிநவீன நுண்ணிய கணித நுட்பங்களை பயன்படுத்தி கணக்கிட்டு சேமித்து வைத்துக்கொள்கின்றன என்று அந்த சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

துல்லியமான கணக்கு


இலைகளில் உள்ள இராசயனங்களை வகுத்து கணக்கிடுவது உட்பட தாவரங்கள் தமது இரவுத் தேவைக்கான உணவின் அளவை நிர்ணயித்து பகிர்ந்து கொள்கின்றன என்று அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இரவு நேரத்தில் சூரிய ஒளிச் சக்தியை பயன்படுத்த முடியாத சூழலில் தாவரங்கள் கரியமில வாயுவை சர்க்கரை மற்றும் மாவுச் சத்தாக மாற்ற முடியாத நிலைமையில், அதிகாலை மீண்டும் சூரிய ஒளி வரும் வரையில் தமக்குள்ளே இருக்கும் மாவுச் சத்தை திட்டமிட்டு சீராக பயன்படுத்த வேண்டியத் தேவை தாவரங்களுக்கு உள்ளது.

அந்நிலையில் தாவரங்கள் மிகவும் துல்லியமான கணக்கின்படி தமது இரவுத் தேவையை கணக்கிட்டு உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பகல் நேரத்தில் உணவைச் சேமித்துக் கொள்கிறது என்பது இந்த ஆய்வின் முடிவு.

இராசயன வகுத்தல்

தாவரங்கள் தமது மாவுச் சத்து தேவையை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தம்மிடம் உள்ள மாவுச் சத்தை பங்கீடு செய்கின்றன என்றால், அவை துல்லியமாக வகுத்தல் கணக்குகளை செய்கிறது என்பதையே நாரிச்சிலுள்ள ஜான் இன்ன்ஸ் மையத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிகவும் அடிப்படையான கணக்குகளை இரசாயன வகையில் தாவரங்கள் செய்கின்றன என்பது மிகவும் ஆச்சர்யமாகவும் வியப்பை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளன என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியன் ஆலன் ஸ்மித் பிபிசியிடம் தெரிவித்தார்.

இது குறித்து சென்னை கிறுத்துவ கல்லூரியில் தாவர உயிரியல் மற்றும் தாவர உயிர்நுட்பவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் டி நரசிம்மன் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.


நன்றி- பிபிசி தமிழோசை
0 comments

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். – 02
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512
இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435
மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 
அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.
வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)
ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான். 
தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. 
விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.
சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி ஆண்கள் தாடி வைப்பதன் மூலம் பெண்கள் மத்தியில் கவர்ச்சியுள்ளவர்களாகவும், ஆண்மையுள்ளவர்களாகவும் இருப்பதுடன் பெண்கள், தாடி வைத்திருக்கும் ஆண்கள் மத்தியில் அவர்களது பெண் தன்மையை உணரக்கூடியவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 
1973ல் கலிபோனிய ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவவியலாளர் Robert J. Pelligrini என்பவர் தாடி வைத்த 22 – 25 வயதெல்லையுடைய எட்டு இளம் ஆண்களை தமது பரிசோதனைக்கு உட்படுத்தினார். அதாவது இந்த எட்டு ஆண்களையும் கீழுள்ள நான்கு நிலைகளில் புகைப்படம் எடுத்தார். 
1.முழு தாடியுடன்
2. முகத்தின் இரு பக்கங்களில் சிறு கோடு போன்ற சிறிய தாடியுடன்  
3. மீசையுடன்
4. தாடி முழுவதும் மழித்து (தாடி இல்லாமல்)
ஒவ்வொருவரிலிருந்து பெறப்பட்ட நான்கு புகைப்படங்களாக மொத்தம் 32 புகைப்படங்களை மனோதத்துவவியல் படிக்கும் 64 ஆண் மாணவர்களுக்கும், 64 பெண் மாணவர்களுக்குமாகக் கொடுத்து புகைப்படங்களில் உள்ளவர்களின் உருவங்களை மதிப்பிடுமாறு கூறினார். ஒவ்வொரு புகைப்படமும் இரு ஆண், இரு பெண் வீதம் மதிப்பிடப்பட்டது. Pelligrini இன் ஆய்வின் முடிவில் பெறப்பட்ட முடிவானது முகத்தில் அதிகளவில் முடியுள்ளவர்கள் தோற்றத்தில் ஆண்மையுள்ளவர்களாகவும்,அழகிய தோற்றமுடையவர்களாகவும், கம்பீரமுடையவர்களாகவும்,தக்க வளர்ச்சியுள்ளவர்களாகவும், துணிவுள்ளவர்களாகவும், பெருந்தன்மையுடையவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், கவர்ச்சியானவர்களாகவும் இருக்கின்றனர் என்பதாகும். 
தாடி வைப்பதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்.
மருத்துவ ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதானது ஒரு மனிதனை தொண்டை, பல்ஈறு சம்பந்தமான நோய்களிலிருந்து தடுக்கின்றது. மேலும், தாடியானது முகத்தின் சருமத்திற்கு கெடுதி விளைவிக்கக்கூடிய இரசாயன வகைகளிலிருந்தும், மாசுள்ள வளிமண்டலத்திலிருந்தும் கெடுதி ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் இதனால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைந்து வயதான தோற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகக் காணப்படும். தாடி சருமத்தை மூடி காணப்படுவதால் sebaceous சுரப்பிகளின் மூலம் பக்டீரியா தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதால் முகப்பருக்கள், புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும். தாடி முகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதுடன் நாடியையும் அபாயங்களிலிருந்து காப்பாற்றும். அத்துடன் தாடி வைப்பதனால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதும் தடுக்கப்படும். 
மாற்று மத அமெரிக்க மருத்துவர் Charles Holmes  என்பவரின் கருத்து.
இந்த மருத்துவர் கூறுகின்றார் “எனக்குப் புரியவில்லை ஏன் மக்கள் தாடி வைப்பதில் அதிருப்தி அடைகின்றனர். மக்கள் தலையில் முடி வளர்த்திருக்கும் போது முகத்தில் முடி வளர்ப்பதில் என்ன தவறு இருக்கின்றது? தலை முடி கொட்டும் போது வெட்கத்திற்குள்ளாகும் மனிதன் தாடியை முழுவதுமாக மழிப்பது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்குகின்றது. 
நீண்ட தாடியானது மனிதனின் கழுத்துப் பகுதியை குளிர்த் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றது. நாம் அறிந்த வகையில் தாடி வளர்ப்பதானது மத அனுஷ்டானம் மட்டும் இன்றி மனிதனுக்கு நிறைய நன்மை பயக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய காலத்து மருத்துவர்கள், தத்துவஞானிகள் கூட தாடி வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக சார்ள்ஸ் டார்வின், லுயிஸ் பெஸ்டர், ஆபிரகாம் லிங்கன் இன்னும் பலர். ஆனால் மக்கள் சமீப காலமாகத் தான் மக்கள் தாடி வைப்பதிலிருந்து விலகி நடக்கின்றனர்”. 
முஸ்லிம்கள் ஏன் தாடி வளர்ப்பதில் பின்வாங்குகின்றனர்?
அநேக முஸ்லிம் சகோதரர்கள் தாடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டினாலும் அவர்களின் மனைவிமார்களுக்காக வேண்டி தாடியை மழிக்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இன்று பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் தங்கள் கணவர்கள் தாடி வளர்ப்பதை இழிவாகக் கருதுகின்றனர். மீசையை ஒட்ட கத்தரித்து தாடியை வளர்ப்பது இறைத் தூதர் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சிறந்த காரியம் என்பதை இப் பெண்கள் மறந்து விட்டனர். தாடி வைக்காத கணவர்களுக்கும் தாடியின் சிறப்பையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக்கூறி கணவர்களுக்கு தாடி வைக்க ஊக்குவிக்கக்கூடியவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். 
மேலும், ஊடகங்களும் தாடி வைத்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டுவதால் இன்று மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டவர்கள் கூட தாடி வைப்பதில் பயந்த நிலையில் உள்ளனர். 
மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாடி வளர்ப்பதை வலியுறுத்தியது மட்டுமல்லாமல் அதை எவ்வாறு அழகாகவும், மற்றவர்கள் விரும்பும் வன்னம் வைக்க வேண்டும் எனவும் காட்டித் தந்துள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை. ஆகவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி 5899
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை நான் பூசி வந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த நறுமணப் பொருளின் மினுமினுப்பை அவர்களுடைய தலையிலும் அவர்களுடைய தாடியிலும் என்னால் காண முடிந்தது.  
ஆதாரம்: புஹாரி 5923
நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் ஏராளமான பெண்கள் ஆண்களுக்க ஒப்பாகவே தம் உடைகளையும், தலை முடிகளையும் வைத்துக் கொள்கின்றனர். அதேபோல் இன்று பல ஆண்கள் மத்தியில் பெண்களைப் போல் தலை முடி வளர்ப்பதும் பிரபல்யம் ஆகி வருகின்றது.  அநேக சந்தர்ப்பங்களில் அவர்களுக்கிடையில் ஆணா, பெண்ணா என்ற வித்தியாசமே தெரியாதுள்ளது. இத்தகைய நிலையில் ஆண்கள் தாடி வைப்பதானது அவர்களுக்கு சிறப்பான தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல் ஆண்களைப் போல் தம் நடை, உடை, பாவனையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்களுக்கும் தாடி சாவு மணியாக அமையும்.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே தாடி வைத்தல் என்ற நபி வழியை நடை முறைப்படுத்தி இவ்வுலகிலும், மறுமையிலும் வெற்றி பெருவோமாக! 
RASMINMISC
0 comments

வானத்தில் ஏறிச் செல்ல செல்ல இதயம் சுருங்குகின்றதா?அல்குர் ஆனின் அடிப்படையில் ஆய்வு


ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.
(அல்குர்ஆன் 6: 125)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் ஒரு மனிதன் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல அவனது இதயம் இறுக்கமாகி விடுவதாக அதாவது சுருங்கி விடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதயத்தின் தொழிற்பாடு
மனித இதயத்தின் தொழிற்பாடு நுரையீரலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட ஒக்ஸிஐன் நிறைந்த குருதியை மனித உடலின் ஒவ்வொரு கலத்திற்கும் பாய்ச்சுதல். இதன் பங்களிப்பை சீராக நிறைவேற்றுவதற்காக மனிதனுடைய வாழ்நாள் முழுவதிலும் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். இதயத்துடிப்பு நின்றுவிடின் மனிதன் இறப்புக்கு உள்ளாவான். எனவே, ஏனைய எலும்புத் தசைகளைப் போல் அல்லாமல் இதயத்தசை இதயம் துடிப்பதற்கு ஏற்றவாறு சுருங்கி விரியும் அமைப்பில் படைக்கப்பட்டிருக்கின்றது. இதயத்தின் தொழிற்பாடு சுழற்சி முறையில் நடைபெறுகின்றது.
விண்ணுலக பயணத்தில் இதயத்தில் ஏற்படும் மாற்றம்
இன்று மனிதனால் மேற்கொள்ளப்பட்ட வானத்தை நோக்கிய அதிக உயரத்தைக் கொண்ட பயணம் விண்ணுலகப் பயணமே ஆகும். எனவேääமேலே சுட்டிக்காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தின் அறிவியல் உண்மையை விண்ணுலக பயணத்தின் போது மனித இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பூமியிலுள்ள மனிதனைப் பொருத்த வரை மனித உடலின் இரத்த விநியோகம் எல்லா உறுப்புகளுக்கும் சமனான முறையில் விநியோகிக்கப்படத் தக்கவாறு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இருதயம் உடலின் மேற்பாகத்திலுள்ள உறுப்புகளுக்கு குருதியை பாய்ச்சுவதில் அதிக பங்களிப்பை வழங்முகின்றது. காரணம் புவியீர்ப்பு விசையின் காரணமாக குருதியானது மனித உடலின் கீழுள்ள பாகங்களை நோக்கியே ஓடுகின்றது.
விண்ணுலகைப் பொருத்தவரை மனித உடலிலுள்ள திரவங்களின் பாய்ச்சல் உடலின் மேற்பாகங்களை நோக்கியே ஓடுகின்றது. காரணம் வானத்தை நோக்கி மேலே செல்லச் செல்ல புவியீர்ப்பு விசை குறைவடைந்து கொண்டே செல்லும். இவ் வகையான நிலையில் மூளைக்கு அதிகளவான குருதி ஓட்டம் செலுத்தப்படுவதால் விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தவுடன் மயக்க நிலையை உணர்கின்றனர் அல்லது மயக்கமாகின்றனர்.
இதனையொட்டி NASA வின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மனித உடல் இயக்கவியல் பேராசிரியர் சுiஉhயசன ர்ரபாளழn என்ற பிரதான ஆய்வாளரின் கீழ் ‘விண்வெளியிலிருந்து திரும்பும் போது ஏற்படும் இருதய மற்றும் பெரு முளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர் கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள வோட்டலூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். இந்த ஆய்வுக்கு கனடிய விண்வெளி முகாமைச் சேர்ந்த விண்வெளி வீரர் Anderson என்பவர் முதன்முதலில் விண்வெளிப் பணத்தின்போது (Expedition 15) பங்கெடுத்தார். ஆராய்ச்சியாளர்களால் Anderson இன் இரத்த அழுத்தம்  இதயத் துடிப்பு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றது மற்றும் இதயத்துடிப்பு எவ்வாறு கூடிக் குறைகின்றது என்பவை தினமும் கணிக்கப்பட்டன. இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்கள் Huntsville, யுடய எனும் இடத்திலுள்ள NASA வின் மார்ஷல் விண்வெளிப்பயண மையத்தில் வைத்து  Hughson மற்றும் அவரது குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது Anderson இன் இருதய அமைப்பின் எல்லா விதமான மாற்றங்களும் அவதானிக்கப்பட்டன. இதன் விளைவாக இதயம் புவியீர்ப்புக்கு எதிராக இயங்க சோம்பல் படுவதை அவதானித்தனர்.
இருதய அமைப்பு இரு முக்கிய தொழிற்பாடுகளைக் கொண்டது.
1)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை மூளைக்கும் இதயத்திற்கும் விநியோகித்தல்.
2)     ஓக்ஸிஐன் உள்ள குருதியை இயங்கிக் கொண்டிருக்கும் தசைகளுக்கு விநியோகித்தல்.
மூளைக்கும் இருதயத்திற்கும் போதுமான அளவு குருதி கிடைக்கையில் இரு விதமான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. கால்கள் வயிற்றுப் பகுதியிலிருந்து குருதி இருதயத்தை வந்தடைய வேண்டும். இருதயம் ஒரு முறை குருதியை வெளியே பாய்ச்சும்போது இரத்த நாடிகள் மூளைக்கு குருதியைப் பாய்ச்சுவதற்கு போதுமான அளவு அழுத்தத்தை உருவாக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆய்வின் முதல் நோக்கம் எவ்வாறு குருதி இருதயத்தை வந்தடைகின்றது என்பதும் மற்றும் அதிக குறைந்த புவியீர்ப்பு விசையில் அதிக நேரத்திற்கு எவ்வாறு இருதயம் மற்றும் இரத்தக் குழாய்கள் தமது தொழிற்பாட்டைக் காட்டுகின்றது என்பதை ஆராய்வதே. இன்னுமொரு பரிசோதனையில் சாதாரண விமானங்களில் செல்லும்போது உடலின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் இரத்த ஓட்டம்  இரத்த அழுத்தம் ஆகியனவும் கணிக்கப்பட்டன.
இவ்வகையான ‘இருதய மற்றும் பெரு மூளை இரத்தக் குழாய்களின் கட்டுப்பாடு’ஆய்வு பூமியில் இருக்கும் மனிதனிடத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இவ் ஆய்வுகளின் முடிவாக  Hughson ஆல் வெளியிடப்பட்ட தகவல் நீண்ட விண்வெளிப் பயணத்திலிருந்து புவிபீர்ப்பை நோக்கி திரும்பும்போது மூளையில் சேமிக்கப்பட்டுள்ள அதிகளவான குருதி இருதய அமைப்பு மற்றும் இரத்தக் குழாய்களின் மந்தமான செயற்பாடுகள் காரணமாகவுமே மயக்க நிலை ஏற்படுகின்றது என்பதாகும். முக்கியமாக இந்த ஆய்வு முடிவில் விண்ணுலகில் இருதயம் சோம்பித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த ஆய்வுப் பயணத்தின் கால அளவு ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2010 வரையான காலப்பகுதியாகும்.
மேலும் சாதாரணமாக விமானத்தில் பயணம் செய்யும் நாம் மேலிருந்து விமானம் தரை இறங்கும்போது நமக்கு தலை கொஞ்சம் சுற்றுவது போன்ற நிலையை உணர்கின்றோம்.
இந்த ஆய்விற்கும் அல்குர்ஆன் வசனத்திற்கும் உள்ள தொடர்பு
இந்த ஆய்வில் விண்வெளிப் பயணத்தின்போது புவியீர்ப்பு விசை மிகவும் குறைவாக இருப்பதால் இருதயத்திலுள்ள குருதி மூளையை நோக்கி இயல்பாகவே பயணிப்பதால் இருதயத்திற்கு குருதியைப் பாய்ச்சும் வேலை மிச்சமாவதால் இருதயம் செயற்பாட்டுத் திறன் குறைந்ததாக காணப்படுகின்றது என அறியப்பட்டுள்ளது. மேலே சுட்டிக் காட்டப்பட்ட அல்குர்ஆன் வசனத்தில் ‘அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்’என்ற சொற் பதத்தின் மூலம் அல்லாஹ் இருதயத்தின் செயற்பாட்டின் தரத்தை விவரித்துள்ளான்.
தற்போது அண்மையில் அறியப்பட்ட இந்த அறிவியல் உண்மையை 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் விமானம் கூட இருந்ததில்லை.
எனவே இறைவேதமே தவிர வேறில்லை.
நன்றி - sltj 
0 comments

பூமியின் கூரை!


சூரியன் என்பது நாம் வசிக்கும் பூமியைவிட பல மடங்கு அளவில் மிகப்பெரிய நெருப்புப் பந்து. அதனுள்ளே மிகப்பெரிய அணு உலையே இருக்கின்றது. அதில் வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் எரிந்து ஹீலியம் வாயுக்களாக மாறுகிறது. அதனால் படுபயங்கரமான கதிர்கள் சூரியனிலிருந்து ஆகாய வெளியெங்கிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. 

இந்த பிரமாண்டமான அணு உலையிலிருந்து பாய்ந்து வரும் கதிர்களுள் ‘புற ஊதாக் கதிர்களும்’ ஒன்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடுSunவிளைவிக்கும் நாசக்கதிர்களாகும். இக்கதிர்கள் நம்மீது படுமானால் நாம் பல்வேறு கேடுகளுக்கு ஆளாகி அழிவைச் சந்திக்க நேரிடும். சரி அப்படியானால் சூரியனிலிருந்து ஆகாயமெங்கிலும் பாய்ந்தோடிச் செல்லும் இந்த அழிவுக் கதிர்கள் ஏன் நமது பூமியைத் தாக்குவதில்லை? என்ற கேள்வி எழலாம்.
நிச்சயமாக கண்ணிமைக்கும் நேரம் கூட தவறாமல் பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் படைத்த உயிரினங்களின் மீது அளவற்ற கருணையுடைய இறைவன் அந்த அழிவுக் கதிர்கள் நம்மீது படாதவாறு தடுத்து வானத்தில் ஓர் கூரையை ஏற்படுத்தி இருக்கிறான். இந்தக்கூரை என்னவென்று பார்ப்போம்.
பூமியின் வளிமண்டலம்: -
நமது புமியைச் சுற்றி மேற்பரப்பில் 500 கி.மீ. உயரம் வரை பரவியிருக்கும் இந்த காற்று மண்டலம் (Atmosphere) பல்வேறு அடுக்குகளாக (Layers) அமைந்துள்ளது. இந்த காற்று மண்டலத்தில் நைட்ரஜன் என்ற வாயு பெருமளவும் 78.03%, ஆக்ஸிஜன் 20.99%, ஆர்கான் 0.94%, கார்பன்-டை-ஆக்ஸைடு 0.03%, ஹைட்ரஜன் 0.01% போன்ற வாயுக்களும், இதைத்தவிர நீராவி மற்றும் தூசிகள் போன்ற பொருட்களும் கலந்துள்ளன. இந்த காற்றுவெளி மண்டலத்தின் முக்கிய பணிகள் என்னவெனில்:
- இதில் உள்ள ஆக்ஸிஜன் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சுவாசக்காற்றாக இருக்கிறது.
- இதில் உள்ள நைட்ரஜன் பூமியில் உள்ள அனைத்து தாவரங்களும் உயிர்வாழ, வளர உதவுகிறது.
- கார்பன்-டை-ஆக்ஸைடு தாவர வர்க்கங்கள் உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறது.
- இதில் உள்ள ஓஸோன் என்பது சூரியனிலிருந்து பாய்ந்து வரும் புற ஊதாக்கதிர்களை பூமியைத் தாக்காவண்ணம் காக்கின்றது.
ஓசோன் வாயு மண்டலம்: -
ஓஸோன் வாயு மண்டலம் என்பது, பூமியிலிருந்து இரண்டாவதாக உள்ள Straposphere என்ற அடுக்கில் பரவியுள்ள மெல்லிய அடுக்காகும். இதற்கு Ozonosphere என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஓஸோன் என்பது பிராண வாயுவின் மூன்று அணுக்களால் ஆன மூலக்கூறு (Molecule) அடங்கிய வாயுவாகும். பூமியில் காணப்படும் ஓசோன் வாயுக்களில் 90 சதவீதம் இந்த ஓசோன் வாயுமண்டலத்தில் தான் காணப்படுகின்றது.
ஓசோன் வாயுமண்டலத்தை முதன் முதலில் 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபேப்ரி மற்றும் ஹென்ரி பியூசன் (Charles Fabry and Henri Buisson) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் ஆவார்கள்.  இந்த ஓசோன் வாயு மண்டலம் சூரியனிலிருந்து கணநேரம் கூட தவறாமல் பூமியை நோக்கி பாய்ந்து வரும் நாசக்கதிர்களான புற ஊதாக்கதிர்களை 97 முதல் 99 சதவீதம் வரை உட்கிரகித்துக் கொண்டு, பூமிக்கு ஒரு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அறிஞர்கள் சூரியனின் புற ஊதாக்கதிர்களை மூன்று வகையினதாகப் பிரிக்கின்றனர்.
1) புற ஊதாக்கதிர் வகை- UV- A
2) புற ஊதாக்கதிர் வகை- UV- B
3) புற ஊதாக்கதிர் வகை- UV – C
முதலாவது வகையான என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தாததும் சிறிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.  இதில் பெரும்பாலானவைகள் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது.
இரண்டாவது வகையான UV- B என்பது நமது தோல்களைப் பாதித்து Sun Burn மற்றும் தோல் புற்றுநோயை (Skin Cancer) ஏற்படுத்தக் கூடியதாகும். இது பெரும்பாலும் ஓசோன் வாயு மண்டலத்தினால் தடுக்கப்பட்டுவிடுகிறது. இருப்பினும் சிறிய அளவிலான இவ்வகை புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றது.
மூன்றாவது வகையான UV- C என்பது மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய நாசக் கதிர்களாகும். இது பூமியின் மேலே 35 கீ.மீ. தூரத்தில் உள்ள ஓசோன் வாயுக்களினால் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.
மனிதர்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் இந்த வகை புற ஊதாக்கதிர்களை அல்லாஹ் படைத்திருக்கின்ற ஓசோன் வாயு மண்டலம் தடுத்து பூமிக்கு ஒரு கூரையாக செயல்படுவதை அறிய முடிகிறது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)
இந்த வசனத்தில் பாதுகாக்கப்பட்ட கூரை எனக் கூறப்படுகிறதே, அப்படியானால் இந்தக் கூரைக்கு ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா என்று கேட்டால் ஓஸோன் என்ற கூரைக்கும் ஆபத்துகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அவைகளைப் பற்றிப் பார்போம்.
ஒசோன் வாயு உற்பத்தி செய்யப்படும் விதம்: -
சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் துண்டப்பட்ட ஆக்ஸிஜனின் மூலக்கூறுகள் O2 ஒற்றையாக உள்ள ஆக்ஸிஜன் O மூலக் கூறுடன் இணைந்து,  ஓசோன் வாயுவாக O3 மாறுகிறது. இவ்வாறு ஒசோன் வாயுவாக O3  மாறிய இந்த வாயு தொடர்ந்தார் போல் வீசிக் கொண்டிருக்கும் புற ஊதாக்காதிர்களின் தாக்கத்தினால் தாக்குப்பிடிக்கப்பட முடியாமல் சிதைந்து மீண்டும் ஆக்ஸிஜன் வாயுO2  மூலக்கூறுகளாகவும் தனிமையான ஆக்ஸிஜன் மூலக்கூறு O ஆகவும் மாறுகிறது. பின்னர் இவை புற ஊதாக்கதிர்களினால் மீண்டும் ஓசோன் மூலக்கூறாக O3 மாறுகிறது. இவ்வாறாக இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் பல காரணங்களினால் ஓஸோன் வாயுவின் மூலக்கூறு O3 என்பது தாமாகவே சிதைந்து O2 (ஆக்ஸிஜன்) என்னும் மூலக்கூறு ஆக மாறுகிறது. பூமியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும் ஓசோன் வாயுவின் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இந்த ஓஸோன் வாயு மண்டலத்தில் ஏற்படும் O3 வாயுவின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இறைவன் அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து அதனைப் பாதுகாக்கின்றான். எப்படியென்றால் பூமியில் எந்த நேரத்திலும் ஏற்படும் இடி, மின்னல்கள் இந்த ஓஸோன் வாயுவை உற்பத்திச் செய்து புதுப்பித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இடி-மின்னல்கள் நைட்ரிக் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருட்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் சூரிய ஒளியிலுள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து வேதிவினை மாற்றத்தின் மூலம் ஓசோன் வாயுவைத் தோற்றுவிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூயவன்) இடி, மின்னலுக்கு இப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் தந்திருக்கிறான்.
பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere): -
அடுத்ததாக ஓஸோன் மண்டலத்திற்கு மட்டுமல்லாது, நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சிதறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).Earth is being protected by the Magnetosphere
20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராய்ந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது.
அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-
“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)
சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..
காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது.
மேலும் சூரியனிலிருந்து பூமியை நோக்கி தொடர்ந்து  பாய்ந்துக் கொண்டிருக்கும் அழிவுக் கதிர்களையும், அவ்வப்போது சூரியனிலிருந்து வீசும் சூரியப் புயலின் வேகத்தையும் பூமியின் காந்த மண்டலம் தடுத்துக் கொண்டு ஒரு கூரையாக செயல்படுகிறது. (பார்க்கவும் வீடியோ) 
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சிந்தித்துப் பாருங்கள்:-
“இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்”
என்று கூறி நம்மை பாதுகாக்கும் இறைவன் மிகவும் கருனையாளன் அன்றோ?
விண்கற்களினால் பூமிக்கு ஆபத்து!: -
அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம்.
இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து தோன்றியது என வானவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.
மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.meteor_shower.jpgMeteor Shower
இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.
எப்படி என்கிறீர்களா?
தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான். மேலும் இறைவன் கூறுகிறான்.
“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)
அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.
0 comments

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்

காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது.
அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான்.
பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன். 
(அல்குர்ஆன் 13:41)
அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். ”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (அல்குர்ஆன் 21:44)
பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அறிவியல் உண்மையை நவீன விஞ்ஞானம் எவ்வாறு ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
இது பற்றிய நவீன விஞ்ஞான ஆராய்ச்சி.
பூமி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.
1. மேற்பரப்பு (Crust)
2. Mantle
3. வெளி மையம் (Outer Core)
4. உள் மையம் (Inner Core)
பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைவடைதலுடன் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்பவையே சம்பந்தப்படுகின்றன. முதலில் டெக்டோனிக் அடுக்குகள் (Tectonic plates) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (Tectonic plates)
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்பது நிலவியல் கோட்பாடுகளில் ஒன்று. இக் கோட்பாடு கண்டப் பெயர்ச்சித் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு எழுந்த கோட்பாடேயாகும். பூமியிலுள்ள கண்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்புடன் நகர்வது கண்டப்பெயர்ச்சி ஆகும்.
இக்கருதுகோள் முதன்முதலில் 1596ம் ஆண்டில் Abraham Ortelius என்ற புவியியலாளரால் முன்மொழியப்பட்டு பின் 1912ம் ஆண்டில் பூகோள,வானியலுடன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானியான Alfred Wegener என்பவரால் கோட்பாடாக விளக்கப்பட்டது. பின்னர் 1960ம் ஆண்டில் தக்க நிலவியல் சான்றுகளுடன் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு என்ற கோட்பாட்டுடன் நகர்தலுக்கான காரணமும் கண்டறியப்பட்டது. தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக் கோட்பாட்டின் படி பூமியின் உட்பகுதி வெளிக் கற்கோளம் (lithosphere), மற்றும் உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) ஆகிய இரண்டு படைகளால் ஆனது.
கற்கோளம் மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டு இருப்பதுடன் பத்து தட்டுகளாகப் பிரிந்தும் உள்ளது. இவை ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,யுரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசுபிக், கோகோஸ், நாஸ்கா மற்றும் இந்தியத் தட்டுக்கள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. மேற்கூறிய தட்டுகளும், மேலும் பல சிறிய தட்டுகளும் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று என தட்டு எல்லைகளில் நகர்கின்றன. தட்டுக்கள் ஒன்றுக்குச் சார்பாக இன்னொன்று நகர்கின்ற விதத்தை அடிப்படையாகக் கொண்டு தட்டு எல்லைகள் மூன்று வகைகளாக அறியப்படுகின்றன.
அவை:
1.ஒருங்கும் தட்டு எல்லை (எல்லைகளில் தட்டுக்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு இருத்தல்)
இங்கு புவி மேற்பரப்பு சீர்குழைக்கப்பட்டு ஒரு தட்டு மறு தட்டுக்குக் கீழாக மறு சீரமைக்கப்படுகின்றது. இவை உள்ளிழுத்தல் மண்டலங்கள் (subduction zones) என்று அழைக்கப்படுகின்றன. தட்டுக்கள் ஒருங்குதலாகும் போது பெரும்பாலும் மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. மூன்று வகையான ஒருங்கும் தட்டு எல்லைகள் காணப்படுகின்றன.
1. சமுத்திர – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2. சமுத்திர – சமுத்திர ஒருங்குதல் தட்டு எல்லை.

3.கண்ட – கண்ட ஒருங்குதல் தட்டு எல்லை.
2. விலகும் தட்டு எல்லை (தட்டுக்கள் ஒன்றிலிருந்து விலகிச் செல்லுதல்)
விலகும் தட்டு எல்லைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் ஒன்றையொன்று இழுப்பதுபோல் புதிய புவி மேற்பரப்பு உருவாக்கப்படும். சமுத்திரங்கள் விசாலமாவதற்கான காரணம் தட்டுக்கள் விலகுதலேயாகும். கீழுள்ள படத்தில் உள்ளவாறு விலகும் தட்டு எல்லையின் போது பிளவு ஏற்பட்டு அல்லது பெரிய நிலப்பரப்பு பிளவாகி வேறுபட்டு அதனை சுற்றியுள்ள இடைவெளி நீரால் நிரப்பப்படும். இதற்கு உதாரணம் ஐஸ்லாந்து.
3.உருமாறும் தட்டு எல்லை (இரண்டு தட்டுக்கள் ஒன்றின் மீது ஒன்று வழுக்கிச் செல்லுதல்) என்பனவாகும்.
இரண்டு தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று கிடைத்தளமாக சரிந்து செல்லுதலே உருமாறும் தட்டு எல்லையாகும். பெரும்பாலான உருமாறும் தட்டு எல்லைகள் கடற் தளங்களிலேயே காணப்படுகின்றன. பொதுவாக முகடுகளில் பரவி தட்டுகளில் zig zag வடிவ ஓரங்களை உருவாக்கி சிறிய பூகம்பங்களை ஏற்படுத்தக்கூடியன.
நிலநடுக்கம், எரிமலை நிகழ்வுகள், மலைகள் உருவாக்கம், கடற் பள்ளங்கள் என்பன தட்டுக்களின் எல்லைகளை அண்டியே எற்படுகின்றன.
புவியின் உட்பகுதி அதன் பொறிமுறை வேறுபாடுகளுக்கு அமையவே கற்கோளம் (lithosphere), மென்பாறைக்கோளம் (asthenosphere) எனப் பிரிக்கப்படுகின்றது. ஒப்பீட்டளவில் கற்கோளம் குளிர்ந்தும், உறுதியானதுமாகும். ஆனால் மென்பாறைக்கோளம் சூடானதாகவும், பொறிமுறைப் பலம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
தட்டுப் புவிப்பொறைக் கோட்பாட்டின் மிக முக்கியமான கொள்கை கற்கோளம் வெவ்வேறான புவிப்பொறைத் தட்டுகளாக திரவம் போன்ற மென்பாறைக்கோளத்தின் மீது மிதந்து கொண்டிருக்கிறது என்பதாகும். இடத்துக்கிடம் வேறுபட்ட திரவத் தன்மையுடன் இருக்கும் இந்த மென்பாறைக்கோளம் அதன் மீது மிதந்து கொண்டிருக்கும் புவிப்பொறைத் தட்டுக்களை வெவ்வேறு திசைகளில் நகரச் செய்கிறது.
இரு தட்டுகள் ஒன்றையொன்று அவற்றின் பொதுத் தட்டு எல்லையில் சந்திக்கின்றன. இத் தட்டு எல்லைகள் பொதுவாக பூமியதிர்ச்சி மற்றும் மலைகள் உருவாக்கம் போன்ற நில உருவவியலுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள பெரும்பாலான உயிர்ப்புள்ள எரிமலைகள் தட்டு எல்லைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றுள் பசுபிக் தட்டின் ‘தீ வளையம்’மிக உயிர்ப்புள்ளதும், பிரபல்யமானதுமாகும்.
புவிப்பொறைத் தட்டுக்கள் இரண்டு விதமான கற்கோளங்கனைக் கொண்டவை. அவை கண்டம் சார்ந்த (continental crust) மற்றும் கடல் சார்ந்த (oceanic crust) கற்கோளங்களாகும். உதாரணமாக, ஆபிரிக்கத் தட்டு ஆபிரிக்கா கண்டத்தையும், அத்திலாந்திக் மற்றும் இந்து சமுத்திர கடற் பகுதிகளின் தரைகளையும் உள்ளடக்குகின்றது. இந்த வேறுபாடு இப் பகுதிகளை உருவாக்கியுள்ள பதார்த்தங்களின் அடர்த்திகளை அடிப்படையாகக் கொண்டது. கடல் சார்ந்த கற்கோளம், கண்டம் சார்ந்த கற்கோளத்திலும் அடர்த்தி கூடியதாகும். இதன் விளைவாகவே கடல் சார்ந்த கற்கோளங்கள் எப்பொழுதும் கடல் மட்டத்திற்கு கீழேயே காணப்பட கண்டம் சார்ந்த கற்கோளங்கள் கடல் மட்டத்திற்கு மேலே காணப்படுகின்றது.
கீழுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு பூலோக மாதிரிப் படங்களில் மேலுள்ள இடது பூலோகத்தில் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு உலகம் ஒரு தனி நிலப்பரப்பாக இருந்தமையைக் காட்டுகின்றது. கீழுள்ள இடது பூகோள படமானது 125 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் நிலப்பரப்பு சற்று பிளவுபட்டு காணப்படுகின்றது. மேலும் மேலே வலது புறத்திலுள்ள 50 மில்லியன் வருடங்களுக்கு முன்புள்ள பூகோளத்தில் மேலதிகமாக பூமியின் நிலப்பரப்பு பிளவுபட்டு ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றது. கடைசியாக கீழ் வலது புறத்திலுள்ள பூகோள படமானது பூமியின் இன்றைய நிலையைக் காட்டுகின்றது. அதாவது பூமி இன்று தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டின் மூலம் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் (பூகம்பம், எரிமலை, நிலப்பரப்பு பிளவுபட்டு அவ்விடம் கடல் நீரால் நிரப்பப்படுதல்) பூமியின் அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து கொண்டு வருகின்றது.
இம் மாபெரும் அறிவியல் உண்மையை படிப்பறிவே இல்லாத, அறிவியல் சிந்தனைக்கு எந்த வழியும் இல்லாத காலப்பகுதியல் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க வாய்ப்பே இல்லை. இவ் வகையான அறிவியல் உண்மைகளை ஆராய்ச்சியின் மூலம் அல்லாது எந்த ஒரு மனிதனாலும் எக்கால கட்டத்திலும் சாதாரணமாக கூறிட விட முடியாது. மேலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பூமி அதன் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றது என்று மேற் குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடாமல் பூமி அதன் ஓரப் பகுதிகளில் குறைந்து வருகின்றது என மிகவும் நுணுக்கமாக இந்த அறிவியல் உண்மையைக் குறிப்பிடுகின்றான்.
எனவே, 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையாக மேலுள்ள அல்குர்ஆன் வசனங்கள் இருக்க முடியாது. அவை இவ் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ் ஒருவனின் வார்த்தைகளே தவிர வேறில்லை.
0 comments

மேகங்களும் மழை உருவாகும் விதமும்


தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.
(அல்குர்ஆன் 7:57)
சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15:22)
சூரியன் பூமியை சூடாக்குகின்றது. பூமி உள்வாங்கிய வெப்பத்தை வெளியிடுவதன் மூலம் அருகிலுள்ள காற்றை சூடாக்குகின்றது. சூட்டினால் காற்றினுடைய அடர்த்தி குறைவடைவதனால் புவியீர்ப்பு திசைக்கு எதிர் திசையில் சூடான காற்று மேலெழும்பும். இதை வெப்ப நீரோட்டம் அல்லது வெப்ப சலனம் என்று கூறுவர். பூமியின் மேற்பரப்பானது புல் தரை, கட்டாந்தரை, மணல்வெளி, நீர்நிலை என மாறுபடுவதால் ஒரே சூட்டில் இருப்பதில்லை. இதனால் காற்றும் வௌ;வேறு உஷ்ணத்தில் சூடேற்றப்பட்டு பல இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மெதுவாகவும் மேலெழும்புகின்றது. இவ்வாறு குறைந்த அழுத்த மண்டலத்தினுள் செல்லும் காற்று விரிந்து குளிர்கின்றது. இதனால் காற்றினுள் இருக்கும் நீராவியும் குளிர்ந்து வளிமண்டலத்திலுள்ள தூசு துணிக்கைகள், உப்பு ஆகியவற்றின் மீது மையம் கொண்டு திரண்டு, பரவி திரவமாகவும், ஆவியாகவும் மிதக்கின்றது. இவ்வாறே நிறைய சிறு நீர்த்துளிகள் சேர்ந்து மேகம் உருவாகின்றது.
இவ்வாறு உருவாக்கப்படும் மேகங்கள் காற்றின் உதவியுடன் ஒன்று திரட்டப்பட்டு சில படிமுறைகளுக்குப் பின் மேகங்களிலுள்ள நீர் ஒடுங்கி மழையாக பூமிக்கு வந்து விழுகின்றது. இப்பொறியியல் (Mechanism) மீள் சுழற்சியாக (re cycle) நடைபெற்று வருகின்றத.
இதையே அல்லாஹ் சுருக்கமாக, சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம் என அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.                                                                          (அல்குர்ஆன் 24:43).
 
மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கேற்ப மழை மேகங்கள் திட்டமான படிமுறைகளுக்கு அமையவே ஒவ்வொரு வடிவங்களாக உருவாக்கப்படுகின்றன.

மேலுள்ள படத்திற்கமைய,
முதல் படித்தறம்:
காற்றின் மூலம் மேகங்கள் ஒன்று திரட்டப்படுகின்றன.
இரண்டாம் படித்தறம்:
காற்றானது சிறிய மேகங்களை ஒன்று சேர்த்து பெரிய மேக மூட்டத்தை உருவாக்கும்.
இவ்விரு படிமுறைகளையும் அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? என அல்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
மூன்றாம் படித்தறம்:
சிறிய மேகங்கள் எல்லாம் ஒன்றாகக் குவிவதன் மூலம் பெரிய மேக மூட்டம் தோன்றி இதன் நடுவில் நீர் ஆவியாகும் விகிதம் இதன் ஓரங்களை விட அதிகளவில் காணப்படும். இதனால் மேகமானது செங்குத்தான நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படும். இதனால் வளிமண்டலத்திலுள்ள குளிரான பிரதேசத்திற்கு இவ் வளர்ச்சியடைந்த பகுதி ஒடுங்கி பெரியளவில் ஆலங்கட்டியாக உருவெடுக்கும். நீர் ஆவியாகி இவ்வாறு ஆலங்கட்டியாக உருவாகி மேகத்தினூடாக மழையாக நிலத்தில் விழும். இதையே அல்லாஹ், அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான் எனக் குறிப்பிடுகின்றான்.

வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிக அண்மையில்தான் மேகங்களின் உருவாக்கம், அமைப்பு, மழை உருவாகும் தொழினுட்பம் ஆகிய தகவல்களை நவீன தொழினுட்ப முறைகளின் மூலம் அறிந்துகொண்டனர்.
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியாகிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு இவ் அறிவியல் உண்மையை தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அல்குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைவேதம் என்பது இந்த இடத்திலும் எந்த சந்தேகமும் இன்றி நிரூபனமாகின்றது.
மின்னல்
அச்சத்தையும்இ எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.
இடியும் அவனைப் புகழ்ந்து போற்றுகிறது. அவனைப் பற்றிய அச்சத்தினால் வானவர்களும் (புகழ்ந்து போற்றுகின்றனர்). இடி முழக்கங்களையும் அவனே அனுப்புகிறான். தான் நாடியோரை அவற்றின் மூலம் தண்டிக்கிறான். அவர்களோ அல்லாஹ்வைப் பற்றி தர்க்கம் செய்கின்றனர். அவன் வலிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் 13: 12,13)
மழை மேகங்களிலுள்ள அணுக்கள் உராய்ந்தோ அல்லது பிற வழிகளிலோ மின்னோட்டம் பெற்று விடுகின்றன. (மின்னோட்டம் பெறும் வழிகள் இன்னும் முற்றிலுமாக விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை). இவ்வாறு மேகக் கூட்டங்கள் மின்னோட்டம் பெற்றிருக்கையில் எதிர் மின்னோட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும்போது மின்னோட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியாக மின் ஆற்றல் பாய்ந்து மின்னோட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னோட்டம் பாயும்போது இடியுடன் மின்னல் தீப்பொறி போல ஒளிக் கீற்றாய் தென்படுகின்றது. சில வேளைகளில் மின்னலானது மரத்தையோ, நிலத்தையோ தாக்கக்கூடியதாக இருக்கும்.

மேலுள்ள குர்ஆன் வசனத்தில் மின்னலைப் பற்றி அல்லாஹ் கூறுகையில், அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான் எனக் கூறுகின்றான்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் மேலோங்கியுள்ள இக்கால கட்டத்திலேயே மேகங்களின் மூலம் மின்னோட்டம் ஏற்படும் முறை முற்றிலும் அறியப்படாது இருக்கும் நிலையில் எவ்வாறு 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பளுவாக மேகங்களினூடாக மின்னல் தோன்றுகின்றது என்ற அறிவியல் உண்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள்?
நிச்சயமாக, அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நன்றி - sltj 
0 comments

இஸ்லாத்தில் முளையவியல். அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். – 01


இஸ்லாத்தில் முளையவியல்.

அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள். – 01 
அல்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகிய அல் அலக் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஓதுவீராக! ஏன்று கூறிவிட்டு மனிதன் படைக்கப்பட்ட விதத்தைப் பற்றிக் கூறுகின்றான்.
(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன் 96: 1,2)
மனிதனைப் படைத்த இறைவன் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சட்ட திட்டத்தை தன் தூதராகிய முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும்போது மனிதனை தான் எவ்வாறு படைத்தான் என்ற உண்மையை முதன் முதலில் தெரியப்படுத்துகின்றான். அலக் என்ற அரபுப் பதத்தின் அர்த்தம் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொண்டது. அதாவது கருவுற்ற சினை முட்டை என்பது ஆணிணது விந்தும், பெண்ணினது சினை முட்டையும் கருக்கட்டப்பட்டு ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட நிலையாகும். 
மனிதனது உருவாக்கத்திற்கு ஆணின் விந்தும், பெண்ணின் சினை முட்டையும் தான் காரணம் என்பதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அவனது அல்குர்ஆனில் மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் விவரிக்கின்றான்.
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன் 23: 12)
அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான். (அல்குர்ஆன்32: 7)
இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், சில விஞ்ஞானிகளும் கூட மனிதன் குரங்கிலிருந்து தான் பரிணாமமடைந்துள்ளான் என்ற சார்ள்ஸ் டார்வினின் கொள்கையின் அடிப்படையில் குருட்டு நம்பிக்கையில் உள்ளனர்.சார்ள்ஸ் டார்வினின் கொள்கையானது அவரது ஊகமே தவிர நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல. விஞ்ஞானத்தைப் பொருத்தமட்டில் ஒரு விஷயம் கண்காணிக்கப்படுவதன் (Observation) மூலமே நிரூபனமாகும். டார்வினின் கொள்கை உண்மையாக இருந்தால் ஏன் தற்போதும் குரங்குகள் பரிணாமம் அடைவதில்லை? இந்த சிறு உண்மையைக் கூட இக் கொள்கையில் குருட்டு நம்பிக்கையுடையவர்கள் ஏன் சிந்திக்கத் தலைப்படுவதில்லை?
தற்போது மனித உடலிலுள்ள மூலக்கூறுகளைப் பரிசோதனைப்படுத்தியபோது மண்ணிலுள்ள மூலக்கூறுகளும் மனித உடலிலுள்ள மூலக்கூறுகளும் ஒன்றுக்கொன்று ஒத்தவையாக இருப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மனித உடல் இழையங்களில் 95% மண்ணிலுள்ளது போல், காபன், ஹைட்ரிஜன், ஆக்ஸிஜன், நைட்ரிஜன்,பாஸ்பரஸ், சல்பர்  உட்பட மேலும் மொத்தம் வித்தியாசமான 26மூலக்கூறுகளும் அடங்கியுள்ளன.
1809 – 1882 காலப்பகுதியல் வாழ்ந்த விஞ்ஞானியான சார்ள்ஸ் டார்வினுக்குத் தெரியாத உண்மை எப்படி 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்று தெரிந்திருக்க முடியும்? நிச்சயமாக இது அல்லாஹ்வின் கூற்றே தவிர வேறில்லை.
பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 23: 13)
23:12,13 குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் மனிதனை மண்ணால் படைத்ததாகக் கூறியது மட்டுமல்லாது அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம் என்றும் கூறுகின்றான். அதாவது மனிதனின் அடிப்படை உருவாக்கம் விந்திலிருந்தே ஆரம்பம் என அல்லாஹ் தெளிவாகக் கூறுகின்றான்.
மனித உடலிலுள்ள அத்தனை உயிர் கலங்களிலும் DNA,  புரதங்களினால் ஆன 23 சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. இவை ஆண்களில் XYநிறமூர்த்தங்களாகவும், பெண்களில் XX நிறமூர்த்தங்களாகவும் காணப்படுகின்றன. Edmund Beecher Wilson, Nettie Stevens ஆகிய விஞ்ஞானிகளே1905ம் ஆண்டில் இவ்வுண்மையை விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்   கருக்கட்டலின் போது சினை முட்டையை சந்திக்கின்ற  விந்திலுள்ள 23 சோடி XY நிறமூர்த்தங்களிலுள்ள X நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை பெண்ணாகவும், Y நிறமூர்த்தம் ஆதிக்கம் செலுத்தினால் கிடைக்கக்கூடிய குழந்தை ஆணாகவும் அமையும். எனவே ஆணிண் விந்திலுள்ள நிறமூர்த்தங்களே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நிர்ணயிக்கின்றது. இவ்வுண்மை 1990ம் ஆண்டில்testis-determining factor (TDF)  என்ற ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன் 86: 5,6,7)                                            
மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.(அல்குர்ஆன் 76: 2)                                                                                                                                                         
விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.(அல்குர்ஆன் 80:19)
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். (அல்குர்ஆன் 49:13)
                                                                                                                                                         இவ்வுண்மையை திருக் குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே‘களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.‘ என்ற வசனத்தின் மூலம் விந்துத் துளியே மனிதனின் துவக்க நிலையாக உள்ளது என்ற அறிவியல் உண்மையை அல்லாஹ் தெளிவாக்குகின்றான். மேலே குறிப்பிடப்பட்ட குர்ஆன் வசனங்களான  (86: 5,6,7),  (76: 2), (80:19) ஆகிய வசனங்களும் இதையே உணர்த்துகின்றன. எனவே, அல்குர்ஆன் இறைவேதம் என்பது இதன் மூலமும் ஆணித்தரமாக முடிவாகின்றது.
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினை முட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும், முழுமைப்படுத்தப் படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். (அல்குர்ஆன் 22:5)
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23: 14)
மேலுள்ள இரு குர்ஆன் வசனங்களினதும் ஒவ்வொரு வாக்கியங்களுக்குமான விஞ்ஞான விளக்கங்கள் பின்வருமாறு:
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.
மில்லியன் விந்துக்களில் ஒரு விந்தே சினை முட்டையுடன் கருக்கட்டலில் ஈடுபடும்.
பலோபியன் குழாயில் கருவுற்ற சினை முட்டையானது பலோபியன் குழாய் வழியாக கருவறையில் நுகமாக பதிக்கப்படும்.
பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்.
பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம்.
எந்த ஒரு கருவிலும் வளரும் உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்த கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்களின் பின் ஒவ்வொரு உறுப்புக்களும் அமைய வேண்டிய இடத்தில் அமைந்து வடிவம் பெறும்.
மேலே காட்டப்பட்ட படம் மூன்று மாதங்களுக்கு முன் கருவறையிலுள்ள மனித உயிரின் நிலை.
11 வாரங்களையுடைய யானையினது முளையத்தின் படத்தைப் பார்ப்போம்.
இனி 30 நாட்களைக் கொண்ட நாயின் முளையத்தைப் பார்ப்போம்.
இதிலிருந்து “பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம்”  என்று அல்குர்ஆன் மாபெரும் அறிவியல் உண்மையை விளக்குகின்றது.
மூன்று இருள்கள்.
உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. (அல்குர்ஆன் 39:6) 
உலக பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Mooreஇவ்வசனம் பற்றி விளக்கும் போது மூன்று இருள்களாவன பின்வருவன என விளக்கினார்.
தாயின் வயிற்றறைச் சுவர்.
தாயின் கருவறையின் சுவர்.
சிசுவைச் சூழ இருக்கும் மென்சவ்வுப் படலத்தின் amnion  பாய்மம்.
இவர் முளையவியல் (Embryology), சரீர அமைப்பு (Anatomy) போன்ற துறைகளில் அதி பாண்டித்தியம் பெற்றவர். எட்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட The Developing Human என்ற புத்தகத்தையும் எழுதி உலகிலேயே மிகவும் பிரபல்யம் வாய்ந்த விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். 1981ல் சவுதி அரேபியாவில் தமாம் என்ற இடத்தில் நடந்த 7வது வைத்திய மகாநாட்டில் இவர் பேசுகையில் “முளையவியல் பற்றிய குர்ஆனிலுள்ள வசனங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தின. மேலும் எனக்கு இவை இறைவனின் மூலம் தான் முஹம்மதிற்கு வந்திருக்க வேண்டும் எனவும் தெளிவாகின. காரணம் முஹம்மதிற்குப் பின் பல நூற்றாண்டுகள் வரை இவ்விடயம் அறியப்படாமலேயே இருந்தது” என பகிரங்கமாக தெரிவித்தார்.
தொடர்ச்சியாக பேராசிரியர் Moore அவர்களிடம் அப்படியானால் குர்ஆன் இறைவேதம் என்று ஒப்புக் கொள்கின்றீர்களா என்று கேட்கப்பட்டபோது அவர் ஆம் குர்ஆன் இறைவேதம் என ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை எனக் கூறினார். 
விஞ்ஞானி பேராசிரியர் Emeritus Keith L. Moore அவர்கள் இது தொடர்பாக விளக்கம் தரும் காட்சிகள்.
1677ம் ஆண்டிலேயே முதன் முதலில் Hamm and Leeuwenhoek  என்ற விஞ்ஞானி மனிதனுடைய விந்துக் கலங்களை மிகவும் தொழினுட்ப முன்னேற்றம் வாய்ந்த நுணுக்குக் காட்டியின் மூலம் ஆராய்ந்தார். இது இவ்வாறிருக்க 1400 வருடங்களுக்கு முன்னர் எந்தவித தொழினுட்ப அறிவோ, நுணுக்குக்காட்டிகளோ இல்லாத காலத்தில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு இம் முளையியல் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறியிருக்க முடியும்? என்று சிந்தித்தால் இவை படைத்த இறைவனின் வார்த்தைகள் அல்லாமல் வேறில்லை. என்பது மீண்டும் உறுதிப்படுத்தப் படுகின்றது.
ஆக்கம் : பாத்திமா ஷஹானா.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger