Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

பொது பல சேனாவை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும்

bodu
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
அமைதியான நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்கி, நாட்டு மக்களின் ஐக்கியத்தை துண்டாட நினைக்கும் பொது பல சேனா என்ற பிரிவினைவாத இயக்கத்தை அரசு தடை செய்வதுடன் அந்த இயக்கத்தின் அமைப்பாளர்கள் தொடர்பில் விரிவான விசாரனையும் நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றது.
யுத்தத்திற்கு பின்னரான இலங்கையில் அமைதியும், சுபீட்சமும் நிலை பெற்றுள்ள இவ்வேலையில் கடந்த சில மாதங்களாக இனவாதத்தை மக்கள் மத்தியில் பரப்பி சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுள்ள பொது பல சேனாவை அரசாங்கம் விசாரனைக்கு உட்படுத்த வேண்டும். என ஜமாத்தின் தலைவர் ஆர்.எம் ரியாழ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இயங்கும் அல்-ஜிஹாத், அல்-கைதா, தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது பல சேனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டை அமைதியாக வழி நடத்தி வரும் அரசை கொச்சைப் படுத்தும் விதமாக அல்-ஜிஹாத், மற்றும் அல்-கைதா போன்ற ஆயுதம் தாங்கும் போராட்டக் குழுக்கள் இலங்கையில் இருப்பதாக பொது பல சேனா கருத்து வெளியிட்டுள்ளது. இது அரசின் நம்பகத் தன்மையை கெடுக்கும் செயல்பாடாகும்.
உண்மையில் அல்-ஜிஹாத் மற்றும் அல்-கைதா போன்ற இயக்கங்கள் இலங்கையில் இயங்குமாக இருந்தால் அவற்றுக்கு எதிராக அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆனால் தாங்கள் இலங்கை நாட்டின் உத்தியோகப் பூர்வமற்ற பொலிசார் என்று கூறிக் கொண்டு சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை தனது கையில் எடுத்து செயல்படும் பொது பல சேனா எனும் அமைப்பே இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஒரு வருடகாலமாக பகிரங்கமான செய்ல்பட்டு வருவதனால் அவ்வமைப்பையும் அதன் அங்கத்தவர்களையும் அரசாங்கம் தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று அராங்கத்திற்கு கோரிக்கை வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களை விசாரனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பொது பல சேனா கோரிக்கை வைக்கின்றது. உண்மையில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் யார்? தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்களா? அல்லது பொது பல சேனாவா? என்பது அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமாகும்.
இலங்கையில் செயல்படும் தவ்ஹீத் அமைப்புக்களில் எவரும் நாட்டின் இறையான்மைக்கு எதிராக எச்சந்தர்ப்பத்திலும் செயல்படவில்லை. இதே நேரம் அரசின் சுமையை குறைக்கும் விதமாக பலவிதமான சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
கடந்த ஒரு மாதங்களாக பொது பல சேனாவின் செயலாளர் கலபடவத்தே ஞானசார தேரர் அமெரிக்காவில் இருந்தார். இவரும் இவருடைய குழுவினரும் அமெரிக்காவுக்கு சென்றது ஏன்? என்பது பற்றி அரசு விரிவான விசாரனை ஒன்றை நடத்த வேண்டும். அதே நேரம் இவர்களுக்கு பின்புலமாகவிருந்த பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் விஷயத்திலும் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசைக் கேட்டுக் கொள்கின்றோம்.
0 comments

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்திய ஊடகவியளாளர் ஒன்று கூடல்


தமிழ் நாட்டில் பிக்குமார்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும்﹐ இத்தாக்குதலை மையமாக வைத்து பொது பல சேனா ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மீது சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டை வண்மையாக கண்டித்தும் இன்று (20-03-2013) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கொழும்பு 02 இல் அமைந்துள்ள ‘நிபோன் ஹொட்டலில்’ ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இனிதே நடைபெற்றது﹐ அல்ஹம்துலில்லாஹ். இதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஆர்.எம்.ரியால்﹐ செயலாளர் அப்துர் ராஸிக்﹐ துணைத்தலைவர் எம்.டீ.எம்.பர்ஸான் மற்றும் துணைச் செயலாளர் எப்.எம்.ரஸ்மின் ஆகியோர் தெளிவுகளை வழங்கினர்.1
2
3
4
5
பல ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்வுூடகவியலாளர் ஒன்று கூடலில் பின்வரும் முக்கியமான விடயங்கள் குறித்து அறிக்கைகள் விடப்பட்டன.
1.தஞ்சை﹐ திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிக்குமார்களுக்கு எதிரான மிலேச்சத்தனமான தாக்குதலை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக கண்டிக்கிறது.
2.இத்தாக்குதல்களுக்கு பின்னணியில் தூண்டுகோளாய் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தும்﹐ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் உள்ளன என்று பொது பலசேனா அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கை பொய்களால் சோடிக்கப்பட்ட அடிப்படையற்ற அபாண்டம் என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆணித்தரமாய் அறிவித்துக் கொள்கிறது.
3.ஹலால் விடயத்தில் ஜம்இய்யதுல் உலமா எடுத்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது என்பதோடு﹐ ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை ஜம்இய்யதுல் உலமா அல்லது முஸ்லிம் கலாசார திணைக்களத்தினூடாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்படல் வேண்டும்.
4.பொது பலசேனா என்ற அமைப்பு இந்நாட்டின் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை சீர்குலைக்கும் பச்சை இனவாதத்தை கக்கும் அமைப்பாகும். இந்நாட்டின் அமைதிக்கு வேட்டுவைக்கும் இப்பொது பலசேனா அமைப்பினை இலங்கை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும்.
5.இஸ்லாம் குறித்து பொது பலசேனா முன்வைக்கும் எந்தவொரு கருத்தினையும் விவாதக் களத்தில் சந்திப்பதற்கு நாம் தயார்.
மேற்படி ஊடகவியலாளர் ஒன்று கூடலின் இறுதியில் வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அறிவார்ந்த பதில்கள் வழங்கப்பட்டன. இது குறித்த மேலதிக தகவல்கள் கீழே அறிக்கையாக தரப்பட்டுள்ளது.
q 003q 004q 005q 006


thanks to - sltj
0 comments

விவாதச் சவடால் விட்ட தாருஸ்ஸூன்னா பதில் தராது புறமுதுகிட்டு ஓட்டம்! பூச்சாண்டி காட்ட நினைத்தேரரின் போலிமுகம் புஷ்வானமானது!


அக்கறைப்பற்று அன்ஸார் (தப்லீகி) மற்றும் அமீருல் அன்ஸார் (மக்கி) ஆகியேரரின் சிந்தனைக்குள் சிறைப்பட்டு﹐ ‘ஷெய்க்’ எதைச் சொன்னாலும் மார்க்கம் தான் என்ற குருட்டு நம்பிக்கையில் கட்டுண்டு கண்மூடிப் பின்பற்றும் ‘தக்லீத்’ அமைப்பாகிய சம்மாந்துறையில் இயங்கும் ‘தாருஸ் ஸூன்னா அல் இஸ்லாமிய்யா’ கடந்த வருட இறுதிப் பகுதியில் எமக்கு விவாத அழைப்பு விடுத்தனர். அவர்களின் விவாத அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒப்பந்தம் செய்வதற்காய் தாருஸ் ஸூன்னாவின் வளாகம் நோக்கி சென்றது. 
‘அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்திருந்தாலும் அதன் கருத்து அல்குர்ஆனுக்கு முரண்படும் எனில் அந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!’﹐ ‘சுூனியத்தினால் பிரிதொரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான ஷிர்க்காகும். இவ்வாறு நம்புபவர்கள் அப்பட்டமான முஷ்ரிக்குகளே!’ என்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழுத்தமான வாதமாகும்.
நாம் மேற்குறித்த இரு கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்ன போது﹐ அன்ஸார் (தப்லீகி) உள்ளிட்ட பல வேக்காடுகள் சிறுத்தையாய் சீறியெழுந்தனர். தணல் பட்ட உடம்பாய் குதித்து நின்றனர். ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சுத்த வழிகேடர்கள்! நவீன முஃதஸிலாக்கள்! பீ.ஜே யை தக்லீத் செய்யும் முகல்லிதுகள்! ஹதீஸ் கலை அறியா அரைகுறைகள்!’ என்றெல்லாம் புழுதியை எம்மீது வாரி இரைத்தார்கள். முஸ்லிம்களை முஷ்ரிக்குளாக்கும் கூட்டம் என பெரரிந்து தள்ளினார்கள்.
மக்கள் மன்றத்தில் எமக்கெதிராய் எந்த விமர்சனக் கணைகளை வீராப்பாய் எடுத்து வைத்தீர்களோ அவ்விரண்டு தலைப்புகளையும் எமது விவாதத் தலைப்பாக ஆக்கிக் கொள்வோம். அதில் ‘ஆதார புூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்பதை முதல் தலைப்பாகவும்﹐ ‘சுூனியம்’ குறித்த தலைப்பை அடுத்த நாளும் விவாதத்துக்குரிய தலைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பதை காரண காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவு படுத்தினோம்.
‘முடியாது! சுூனியம் குறித்த தலைப்பில் மாத்திரம் விவாதிப்பதாய் இருந்தால் ஒப்பந்தத்தை தொடர்வோம். இல்லையென்றால் இத்தோடு விவாத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்!’ என்று ‘ஆளைவிட்டால் போதும்’ என்று விலாங்கு மீனாய் நழுவி ஓடினார்கள் அமீருல் அன்ஸாரியும் அவரின் முகல்லிதுக் கூட்டம் தாருஸ் ஸூன்னாவும். விவாத ஒப்பந்த னுஏனு யை எமது இணையதலத்தில் பார்வையிட்ட பொது மக்கள்﹐ சிறுத்தையாய் சீறி எழுந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். சொல்லம்புகளால் கீறிக்கிழித்தார்கள். வேதனை தாங்க முடியாது பரிதவித்த தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ மண்ணில் விழுந்தும் மீசையில் மண் படியவில்லை என்ற கதையாய் தங்களை காட்டிக் கொள்வதற்காய் மீண்டும் ஒரு விவாத அழைப்பினை கடந்த 18-01-2013 அன்று எமக்கு விடுத்தனர்.
‘ஆதாரபுூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் நாம் உங்களோடு விவாதம் புரிய தயார். ஏனெனில் உங்கள் கொள்கை படு பயங்கர வழிகேடாகும்.’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
ஏலவே﹐ இத்தலைப்பில் விவாதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் வைத்து விரண்டோடிய தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ தாங்கள் இதற்கு முன் எம்மோடு விவாத ஒப்பந்தம் செய்ததையோ﹐ அதில் அவர்கள் பின்வாங்கியதையோ குறிப்பிடாது இருட்டடிப்பு செய்திருந்ததை அவர்களுக்கு உணர்த்தும் விதமாயும்﹐ உங்கள் கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டு ஒரு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தோம். உரிய முறையில் பதில் வந்தால் நாம் எந்நேரமும் விவாதிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தோம். பின்வரும் விடயங்களை இணைத்து கடிதம் தருமாறு வேண்டினோம்.
1.நாம் தான் ளுடுவுது யை முதலில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம்.
2.நீங்களும் எமது வளாகத்திற்கு ஒப்பந்தத்திற்காய் வந்தீர்கள்.
3.குர்ஆனுக்கு ஆதார புூர்வமான ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் விவாதிக்க முடியாது என்பதால் நாமே ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினோம். இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
4.மீண்டும் இத்தலைப்பில் விவாதிக்க நாம் விரும்புகின்றோம்.
5.முதலில் நீங்கள் எமது இடம் வந்ததால்﹐ இவ்வொப்பந்தத்திற்கு நாம் உங்கள் இடத்திற்கு வருகிறோம்.
6.ஓப்பந்தத்தில் வைத்து விவாத தலைப்புகளை முடிவு செய்வோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக எமக்கு கடிதம் அனுப்பும் பட்சத்தில் நாம் விவாதிக்கத் தயார் என்று 23-01-2013 அன்று அறிவித்திருந்தோம். இக்கடிதம் அனுப்பப்பட்டு இன்றோடு ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால்﹐ விவாத சவடால் விட்டவர்களிடமிருந்து இது வரைக்கும் எவ்வித பதிலையும் காணவில்லை.
மக்கள் மன்றத்தில் எம்மை வழிகேடர்களாய் சித்தரித்த தாருஸ் ஸூன்னா அமைப்பினர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாய் இருந்தால் அதே மக்கள் மன்றத்தில் எம்மோடு விவாதிக்க வந்திருக்க வேண்டும்? சவால் விட்டுவிட்டு ஓடி ஒழியும் இவர்களின் தொடை நடுங்கித்தனம் இவர்கள் ‘அசத்தியவாதிகள்’ என்பதை அழுத்தமாய் அடையாளப்படுத்திவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
‘சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்! (17:81)
00123.01.2013-1
23.01.2013-2.jpeg
நன்றி - sltjweb 
0 comments

காவல்நிலைய முற்றுகைப் போராட்ட காட்சிகள்



காவல்நிலைய முற்றுகைப் போராட்ட காட்சிகள்
போராட்டம் குறித்த விபரம் விரைவில் இன்ஷா அல்லாஹ்..

நன்றி -TNTJ.NET 
0 comments

21 ல் உலகம் அழியாது” நோட்டிஸ் விநியோகம் செய்தற்காக நள்ளிரல் TNTJ நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து சென்னையில் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம்!


21 ஆம் தேதி உலகம் அழியும் என்ற மூட நம்பிக்கையை அகற்றும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ”21 ஆம் தேதி அன்று உலகம் அழியாது” என்ற விழிப்புணர்வு நோட்டிசை வெளியிட்டது. இதை தமிழகம் முழுவதும் உள்ள TNTJ கிளைகள் விநியோகம் செய்தது.

சென்னையில் இந்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து முன்னனியினர், ”முஸ்லிம்கள் மத கலவரத்தை தூண்டுகின்றனர்” TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டிஸ் வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து முஸ்லிம்களை தீவிரவாதிகளை போல் சித்தரித்து, நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை கேவலமாக பேசி, அராஜகம் செய்து,நோட்டிஸ் விநியோகம் செய்த TNTJ நிர்வாகிகளை D1 காவல் நிலைய AC செந்தில் குமரன் கைது செய்துள்ளார்.
இதை கண்டித்து AC செந்தில் குமரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி D1 காவல் நிலையம் முற்றுகை ஆர்பாட்டம் கடந்த 22-12-12 அன்று நடைபெற்றது.

நன்றி - TNTJ.NET 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger