கிழிந்து தொங்கும் ​ரேம்போ கோவணம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சென்ற குஜராத் முதல்வர்  ரேம்போ மோடி, இரவு ஒரு மணி வரை கண் விழித்துத் திட்டம் தீட்டி உத்தரகாண்டில்
தவித்த குஜராத்தைச் சேர்ந்த 15000 பக்தர்களை ஒரே நாளில் மீட்டு வந்தார் என்று ஆங்கில மற்றும் தமிழ் செய்தித் தளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

அதில் 80 இன்னோவா கார், 25 ஏ சி பஸ், 4 போயிங் விமானம் என எழுதியிருந்த கதை பற்றி  முன்னரே நமது தளத்தில் விமர்சனம் வெளியாகி இருந்தது. அது பற்றி பெரிதா அலசத் தேவை இல்லை.

இழவு வீடு என்றாலும் அங்கும் நான் தான் பிணமாக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். அதே நிலையில் தான் தற்போது குஜராத் முதல்வரும் இருக்கிறாரோ என்ற அச்சமே நமக்கு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ பிடி இறுகுவதால் சில நாட்களாக ஊடகங்களில் தம் பெயர் நாறி வருவதைத் தடுக்கும் நோக்கில் இவ்வாறு ஒரு மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் அவர் ஈடுபட்டுள்ளாரோ என்றே எண்ணத தோன்றுகிறது.

என்ன கதை விட்டாலும் அதை நம்பிப் போற்றவும் பலர் நம்மில் உள்ளனர் என்பது மோடிக்குத் தெரியாதா என்ன?

ஊடகங்களின் பொய்ப் புரட்டுகளை நம்பி எந்திரன் ரஜினி லெவலுக்கு நரேந்திர மோடியைப் கற்பனை செய்யும் எவரும் உண்மை நிலை என்ன என்பதை அறிய விரும்புவதில்லை. காரணம் நரேந்திர  மோடி  பற்றி ஒரு செய்தி வெளி வந்தால் அது உண்மையாகத் தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை போல.

15000 பேரை -- அதுவும் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்களை மட்டும் -- தேடிப்பிடித்து ஒரே நாளில் மீட்பது சாத்தியமா? என்று அறிவுப் பூர்வமாக கேள்வி எழுப்பினால், "இவர்களும் செய்ய மாட்டார்கள் செய்றவனையும் செய்ய விட மாட்டார்கள்" என்று விமர்சனம் வேறு.

என்னதான் ஊடகங்கள் கதை விட்டாலும் அரசு இது போன்ற விசயங்களில் கதை விட முடியாது. காரணம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் யாராவது கேள்வி எழுப்பினால் கோவணம் கிழிந்து தொங்கும்.

உத்தரகாண்டில் சனிக் கிழமை இயக்கப் பட்ட முதல் விமானம் மூலம் மீட்கப் பட்டு  குஜராத் வந்து சேர்ந்தவர்களின் பட்டியல் இதோ. மீட்கப் பட்டு டெஹ்ராடூன் மருத்துவமனியில் சிகிச்சை பெரும் குஜராத் பக்தர்களின் பட்டியல் இதோ. 

இது ஏதோ மோடிமீது வெறுப்பு கொண்டு, காங்கிரஸ் கட்சி தயாரித்து அளித்த பட்டியல் அல்ல. குஜராத் மாநில அரசின் இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ள விவரங்களே இவை. சனிக் கிழமையன்று வந்திறங்கிய முதல் விமானத்தில் வெறும் 124 பேர் மட்டுமே குஜராத் வந்து சேர்ந்ததாக குஜராத் அரசே தெரிவித்துள்ளது.

அப்படி என்றால் 15000 பேரை மீட்டுக் கொண்டு வர குறைந்த பட்சம் 115 முறையாவது அந்த விமானத்தை இயக்க வேண்டும். இது தான் உண்மை நிலை. ஒரே நாளில் 115 முறை இயக்கப்பட்ட விமான சர்வீஸா?! மோடி அரசின் வித்தை போலும்!

குஜராத் அரசும் அதன் இணைய தளத்தில் எந்த இடத்திலும் 15000 பேரை மீட்டுக் கொண்டு வந்ததாக உறுதிப் படுத்த வில்லை.

பிறகு ஏன் இந்த வெட்டி விளம்பரம்?

இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காக்கி கலரில் அரைக் கால் டவுசர் அணிந்து வெள்ளம் பாதிக்கப் பட்ட இடங்களில் மீட்புப் பணிகளைச் செய்து வரும் நிலையில் அதைத் தாங்கள் செய்வது போன்று ஆர்.எஸ்.எஸ் விளம்பரம் செய்து வரும் நிலையில் இதில் ஆச்சர்யப் படவும் ஒன்றுமில்லை.

உத்தரகாண்ட் அரசுக்கு நிவாரண நிதியாக தமிழ்நாடு, பீகார், ஜார்கண்ட் முதலான மாநில அரசுகள் தலா ரூ 5 கோடி வழங்கிய நிலையில் முன்னேறிய குஜராத் ரூ 2 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

இறுதியாக ஒரு ஒரு விஷயம். குஜராத் முதல்வர் அநாயாசமான திட்டங்கள் தீட்டி ஒரே நாளில் 15000 குஜராத் பக்தர்களை மீட்டு இருந்தாலும்கூட அதன் பெருமைக்குரியவர்கள் யார்? தம் உயிரையும் பணயம் வைத்து 15000 பேரை மீட்ட இந்திய திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தாமே? அவர்களின் உழைப்பைத் திருடி மலிவான அரசியல் செய்யும் இது போன்றவர்கள் நாளை பிரதமரானால் நினைத்துப் பார்க்கவே பயமாக உள்ளது.

நன்றி - இந்நேரம்

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger