இலங்கை சம்மாந்துறையில் ஓடி ஒழிந்த சூனியக்காரர்கள்.

இஷாவுக்கு பிறகு உரையாற்றத் தொடங்கிய இஸ்மாயில் ஸலபி  ”இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்” என்ற தலைப்புக்கு பணிக்கப்பட்டவர் அதனைத்தான் பேசியிருக்க வேண்டும்.  அதனை விட்டுவிட்டு SLTJ யின் பார்வையில் சூனியம் எனும் கருத்துப்படவும், அவரின் பார்வையில் SLTJ மற்றும் TNTJ எனும் கருத்துப்படவும் பேசிய இவர், திடீரென்று SLTJ ஒரு வழிகெட்ட அமைப்பினர்  என்றும், சஹாபாக்களுக்கும், இமாம்களுக்கும் ஏசுகிறார்கள், புகாரி இமாமுக்கு ஹதீஸை பற்றி என்ன தெரியும்? என்று கூறுகின்றார்கள்  என  மிக மோசமான அபாண்டங்களை சுமத்தி கொண்டிருந்த இந்த ஸலபியின்  சளப்பலை கேட்க இயலாத பலர் ஒவ்வொருவராக சென்று விட்டனர். இந்த மோசமான அபாண்டங்கள், பழிச் சொற்கள் எமது ஜமாதினரை எட்டியது.
Photo2298Photo2299Photo2302இவர்களது இந்த நிகழ்ச்சி முடிந்தும், இஷா தொழுகையை தொடர்ந்து இவர்களது பள்ளி வாசலுக்குள் மிக முறையாகவும், பண்பான முறையிலும், நாகரியமாகவும் அனுகிய எமது ஜமாத்தினர் நாங்கள் SLTJ அமைப்பிலிருந்து வந்திருக்கிறோம்.  எமது அமைப்பை பற்றி நீங்கள் மக்கள் மத்தியில் அவதூறு பரப்பியிருக்கிறீர்கள்.   இந்த அவதூறு பேசியவர்கள், நாங்கள் எந்த இமாமுக்கு எந்த சந்தர்ப்பதில் என்ன தலைப்பில் எவ்வாறு ஏசினோம் என்பதையும், எங்கள் மீது சொல்லப்பட்ட அவதூறுகள் பற்றி ஆதாரபூர்வமாக நிருபிக்க வேண்டும் என வினா எழுப்பிய போது, மக்கள் சிலர் விழிப்படைந்தனர். மக்களே நீங்கள் நியாயத்தை கூறவேண்டும் எனக் கூறினோம்.  மேலும் இந்த இஸ்மாயில் ஸலபியை சூனியம் தொடர்பாக விவாதிப்பதற்கு பல முறை SLTJ யினால் அழைப்பு விடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், இது தொடர்பாக அன்சார் மௌலவி, முர்ஸித் மௌலவி, அப்துல் ஹமீத் என எல்லோருடனும் தொடர்பு கொண்டும், இவர்கள் எல்லோரும் விவாதிப்பதற்கு பின்வாங்கினார்கள், இறுதியில் இஸ்மாயில் ஸலபியும் இந்த விவாத சந்திப்பு பொருத்தமற்றது  என கூறி பின் பிடரி தெறிக்க ஒடியவர் தற்போது வெட்கம்  இல்லாமல் சூனியம் பற்றிப்  பேசுகிறார்.

இவர்கள் எங்களுடன் விவாதிக்க முடியாது எனக்கூறி பின்வாங்கிய ஓடியோ ஆதாரத்தை மக்கள் மத்தியில் போட்டுக்காட்டுவதற்கு எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என கேட்ட போது அந்த பள்ளி நிர்வாகத்திலிருக்கும் றஸீட் ஆசிரியர் இன்னும் 5 நிமிடத்தில் அனுமதி பெற்று தருகிறேன் என வாக்களித்து விட்டு இந்த சூனிய காறர்களோடு மந்திரம் பேசி விட்டு வந்து எல்லோரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.  அப்படி என்றால் நீங்கள்  தந்த வாக்குறுதி என்ன?  சுத்த சூனியமோ? என்று கேட்டபோது விழி பிதுங்கி நின்றார்.

அதன் பின் எங்களை வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்த சில காடையர்கள் வெளியேறுங்கள் என்று கூக்குரலிட்டுக்கொன்டு வந்தனர்.  இந்த விலாங்கு மீன் வேடம் போட்ட றஸீட் ஆசிரியரோடு சேர்ந்து றஹீம் ஹொட்டலின் தம்பி சில்லறை கடை வைத்திருக்கும் ஸலாம் என்பவர், ஏசியா கோல்ட் ஹவுஸ் திங்கள் மகன், இன்னும் சில உயர்தரம் கற்கின்ற அவர்களது பாசையிலேயே கூறப் போனால் நேற்று முளைத்த காளான்கள், இந்த சூனியத்தின் அடி நுணி தெரியாத சில தகரடப்பாக்கள், தூண்களுக்கு மறைவிலிருந்து கூக்குரல் போட்டனர். மஹா சூனியக்காறர்களும், உரையாற்றிய சூனிய காறர்களும்  ஒதுங்கி நிற்க, அவர்களுக்கு இடம் கொடுத்த சூனியக்காற காடையர்கள் எங்களை வேளியேறுமாறு கூக்குரலிட்டனர்.

நாங்கள் இறுதியாக கூறினோம், எங்களிடம் றெகோடிங்ஸ், இன்னும் ஆதாரங்களிருக்கின்றது.  எங்களை வழிகெட்டவர்கள் என கூறியவர்கள் இவ்விடத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லது நாங்கள் SLTJ மீது கூறிய அனைத்தும் பொய் என இவ்விடத்தில் கூற வேண்டும் எனக் கேட்ட போது, இல்லை நீங்கள் வெளியேறுங்கள் என பேச திராணியற்று ஒருபக்கசார்பாக கூக்குரலிட்டனர்.  நாங்கள் ஆதாரத்துடன் பேச அழைத்தும் விவாதம் செய்ய தயார் என்று சொன்ன சித்திக் மௌலவியை காணவில்லை, K.L. ஆதம்பாவா மதனியை  காணவில்லை, அவர்கள் அழைத்து வந்த மஹா சூனியக்காறர் இஸ்மாயில் ஸலபியையும் காணவில்லை. எல்லோரும் பேச வக்கற்று பாள்ளிவாசல் மூலைக்குள் முடங்கினர். இதில் ஒரு பரிதமான நிலை SLTJ யை இந்த சூனியக்காறர்கள் அவதூறு சொன்னார்கள், விவாதத்திற்கும் அழைத்தார்கள், சவால் விட்டார்கள் SLTJ  வந்தபோது ஓடி ஒழிந்தார்கள்.  வந்த மக்களுக்கு சூனியமும் விளங்கவில்லை, ஒன்றும் விளங்கவில்லை, SLTJ யை விமர்சித்தது மட்டும் விளங்கியது. சூனியக்காறர்கள் ஒரமாயினர். நீதியற்ற  பள்ளிவாசல்களும், தகுதியற்ற மார்க்கம் தெரியாத நிருவாகிகளும்.  இதுபற்றி  அலி அஹம்மத் ரஷாதி பேசுவாரா? சம்மாந்துறை பெரிய பள்ளி நிர்வாகம் ஒரு பக்க சிந்தனையிலிருந்து மீளுமா?  எமது சம்மாந்துறை மக்கள் இவர்களின்  பித்தலாட்டத்தை புரிந்து கொள்வார்களா?

நன்றி- sltj
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger