பெண்கள் ஆடை அணியும் முறை

5. பெண்கள் ஆடை அணியும் முறை       தொடர் 5

பெண் என்பவள் அந்தரங்கமானவள்.
1093 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ مُوَرِّقٍ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ  رواه الترمدي
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : பெண் என்பவள் அந்தரங்கமானவள் ஆவாள்.அவள் (வீட்டிலிருந்துவெளியேறினால் ஷைத்தான் அவளை முன்னோக்குகிறான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)  நூல் : திர்மிதி (1093)

ஹதீஸின் விளக்கம் :
அதாவது பெண்ணாகிறவள் ஆண்களின் கண்களுக்கு அலங்காரமாகப்படைக்கப்பட்டிருக்கிறாள்இதை அல்லாஹ் பல்வேறு திருமறை வசனங்களில்கூறுகிறான்.

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الْمَآَبِ)  آل عمران/14(
பெண்கள்ஆண் மக்கள்திரட்டப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள்,அழகிய குதிரைகள்கால்நடைகள்மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம்ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப் பட்டுள்ளது.இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள்அல்லாஹ்விடம் அழகிய புகலிடம்உள்ளது. (அல்குர்ஆன் 3 : 14)

ஒரு ஆண்மகன் தேவையின்றி அந்நியப் பெண்களை பார்ப்பது கூடாது என்பதுமார்க்கத்தின் கட்டளையாகும்.. மார்க்கம் எவ்வளவுதான் கட்டளையிட்டாலும்ஷைத்தான் மனிதனை வழிகெடுத்து அந்நியப் பெண்களை நோக்கச் செய்கிறான்.  பெண்ணாகிறவள் ஆணிற்கு கவர்ச்சியாகப் படைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால்மனிதன் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அந்நியப் பெண்ணை அவள் வெளியில்நடமாடும் போது ஆசையுடன் நோக்குகிறான்இதற்கு எந்த ஒரு மனிதனும்விதிவிலக்கு கிடையாது.

ஆதம் (அலைமுதல் உலகத்தில் இறுதியாகத் தோன்றவிருக்கின்ற மனிதன் வரைஇந்தச் சலனம் ஏற்படத் தான் செய்யும்இதை யாராவது மறுத்தால் அவர் இறைவன்ஏற்படுத்திய அடிப்படை விதியை மறுக்கிறார் என்று தான் பொருள்.

நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:  விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன்எழுதியுள்ளான்அதை மனிதன் அடைந்தே தீருவான்கண் செய்யும் விபச்சாரம்(தவறானபார்வையாகும்நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்)பேச்சாகும்மனம் ஏங்குகிறதுஇச்சை கொள்கிறதுமர்ம உறுப்பு இவைஅனைத்தையும் உண்மையாக்குகிறதுஅல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)    நூல்புகாரி 6243

மேற்கண்ட ஹதீஸில் மனிதன் என்று மொழி பெயர்த்த வார்த்தைக்கு அரபி மூலத்தில்இப்னு ஆதம் (ஆதமுடைய மகன்என்ற வார்த்தை உள்ளதுஇது ஆதி முதல் அந்தம்வரை உள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்குரிய சொல்லாகும்.

இறைவன் ஏற்படுத்திய இந்த இயற்கை நியதியைத்தான் நபியவர்கள் மேற்கண்டவாசகத்தின் மூலம் குறிப்பிடுகின்றார்கள்.

முகம்முன் கைஅடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ (31) سورة النور
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும்நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராகஅவர்கள் தமது அலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்தமது முக்காடுகளை மார்பின்மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24 : 31) 

சிலங்கைக் கொலுசு (சப்தம் வருகின்றவை) அணியத் தடை 
وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ(31) سورة النور
அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால்அடித்து நடக்க வேண்டாம்.        அல்குர்ஆன் (24 : 31)

அலங்காரத்தைக் காட்டுவதற்கு தகுதியானவர்கள்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ(31) سورة النور
தமது கணவர்கள்தமது தந்தையர்தமது கணவர்களுடைய தந்தையர்தமது புதல்வர்கள்,தமது கணவர்களின் புதல்வர்கள்தமது சகோதரர்கள்தமது சகோதரர்களின் புதல்வர்கள்,தமது சகோதரிகளின் புதல்வர்கள்பெண்கள்தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீதுநாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமதுஅலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.
(அல் குர்ஆன் 24 : 31)
உடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم
இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர்அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்த தில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர்பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட)சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டுமக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்லிலிய உடையணிந்துதம் தோள்களைச் சாய்த்து(கர்வத்துடன்நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தைதன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள்ஆவர்அவர்களது தலை(முடி)கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்சாயக்கூடியதிமில்களைப் போன்றிருக்கும்.

அவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்; (ஏன்சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள்சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தேவீசிக்கொண்டிருக்கும் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹரைரா (ரலி),நூல் : முஸ்லிம் (4316)

أَنَّ عَائِشَةَ قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْفَجْرَ فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنْ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ رواه البخاري
நபி (ஸல்அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள்மூமினான பெண்கள்ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன்தொழுவார்கள்பின்னர் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்அவர்கள் யார் யார் என்பதையாரும் அறியமாட்டார்கள்
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி (372)

பெண்கள் தமது உடல் அழகில் கைகள்முகங்கள் தவிர மற்றவைகளை மறைக்கவேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்அவர்களின் ஹதீஸ்களிலி-ருந்து விளங்கிக்கொள்ளலாம்நபி (ஸல்அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திறந்து இருந்ததற்குபல சான்றுகள் உள்ளது.

பெண்களின் முகம் வெளியில் தெரிவதால் குற்றமில்லை
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ رواه مسلم
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன்அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள்;பாங்கோ இகாமத்தோ இல்லைபிறகு பிலால் (ரலிலிஅவர்கள்மீது சாய்ந்துகொண்டு,இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும்வலிலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள்பிறகுஅங்கிருந்து புறப்பட்டுபெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்கநெறிமுறைகளையும் மறுமை நாளையும்நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள்மேலும்,பெண்களை நோக்கி, "தர்மம் செய்யுங்கள்உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகுஆவீர்கள்'' என்று கூறினார்கள்.

அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து "அது ஏன்,அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்"நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின் றீர்கள்; (நன்றி மறந்துகணவனை நிராகரிக்கிறீர்கள்''என்று கூறினார்கள்அப்போது அப் பெண்கள் தம் காதணிகள்மோதிரங்கள் உள் ளிட்டஅணிகலன்களை (கழற்றிபிலால் (ரலிலி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல்முஸ்லிம் (1607)

أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْفَضْلَ بْنَ عَبَّاسٍ يَوْمَ النَّحْرِ خَلْفَهُ عَلَى عَجُزِ رَاحِلَتِهِ وَكَانَ الْفَضْلُ رَجُلًا وَضِيئًا فَوَقَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنَّاسِ يُفْتِيهِمْ وَأَقْبَلَتْ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ وَضِيئَةٌ تَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَفِقَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَأَعْجَبَهُ حُسْنُهَا فَالْتَفَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا فَأَخْلَفَ بِيَدِهِ فَأَخَذَ بِذَقَنِ الْفَضْلِ فَعَدَلَ وَجْهَهُ عَنْ النَّظَرِ إِلَيْهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ فِي الْحَجِّ عَلَى عِبَادِهِ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَسْتَطِيعُ أَنْ يَسْتَوِيَ عَلَى الرَّاحِلَةِ فَهَلْ يَقْضِي عَنْهُ أَنْ أَحُجَّ عَنْهُ قَالَ نَعَمْ رواه البخاري
("விடைபெறும்ஹஜ்ஜின்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள்  (என் சகோதரர்)ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள்ஃபள்ல்மிகவும் அழகான வராயிருந்தார்அப்போது நபி (ஸல்அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம்üப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) "கஸ்அம்குலத்தைச்சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கüடம் மார்க்கவிளக்கம் கேட்டு வந்தார்அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார்அந்தப்பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியதுநபி (ஸல்அவர்கள் திரும்பிப்பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள்உடனே ஃபள்-ன்முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத்திருப்பி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),நூல் : புகாரி (6228)

                கொடுக்கல்வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் மிகவும் அவசியம்.அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாதநிலை ஏற்படும்.

முக்காடில்லாமல் தொழுகை கூடாது
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ إِلَّا بِخِمَارٍ رواه الترمذي
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் '' பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுவது ஏற்றுக்கொள்ளப்படாது''
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : திர்மிதி (344)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger