வருகிற 18-ஆம் தேதி பாடபுத்தகம் வழங்கப்படும்: கல்வி அமைச்சர் அறிவிப்பு

பாடபுத்தகம்காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் முழுவதும், வருகிற 18-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் மின்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

காரைக்கால் காமாரஜர் அரசு வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில், மாவட்ட அளவில் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி கல்வி மற்றும் மின்துறை அமைச்சர் தியாகராஜன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

"மாநிலம் முழுவதும் பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு மாணவர்கள் நலனில் இந்த அரசின் அக்கறை ஒரு காரணம். பள்ளி துவங்கி ஒரு சில நாட்கள் ஆகிறது. இந்நிலையில், மாநில முழுவதும் வருகிற 18-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகம் வழங்கப்படும்.
சீருடையை பொறுத்தவரை தற்போதைய நீலம், வெள்ளை வண்ணத்தை காட்டிலும் வேறு வண்ணத்தில் வழங்கலாம் என்பது அரசின் திட்டமாக உள்ளது. இதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதால் பழைய சீருடையை 5-ஆம் வகுப்பு வரை அடுத்த 10 நாட்களில் வழங்கப்படும். மற்றவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு வழங்கப்படும்.

அதேபோல், காலை உணவுத்திடமாக ரொட்டி, பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாநிலம் முழுவதும் பால் பற்றாக்குறையாக உள்ளது. அதனால், சம்பந்தப்பட்டர்வர்களுடன் கலந்துபேசி மீண்டும் ரொட்டிப்பால் வழங்கப்படும். மதிய உணவு வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. கடந்த ஆண்டு பல்வேறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் ஆசிரியர்கள் பர்றாக்குறை நிலவுகிறது. ஓரிரு மாதத்தில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும்.

மேலும், புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் மத்திய பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தொடங்கும் எண்ணம் உள்ளது. இது குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வுக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்ப்படும்.

மாநிலம் முழுவதும் மின் கட்டணம் உயர்ட்தப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கான மின்சார இணை ஒழுங்கு ஆணையம் தான் புதுச்சேரியில் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கட்டணத்தை யார் உயர்த்தினார் என்பது மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றாக தெரியும். பல சமயங்ககளில் மின் தடை ஏற்பட பழமையான மின்சாதனங்களே காரணம் இது படிப்படியாக சீர் செய்யப்படும்.

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி இன்னும் 10 நாளில் வழங்கப்படும்" என்றார்.

பேட்டியின் போது பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger