பள்ளி வாகனத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் பலி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இஸ்லாமாபாத் அருகே பள்ளி வாகனத்தில் உள்ள கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 17 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.


பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத் நகரில் நேற்று காலை பள்ளி வாகனம் ஒன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த 'கியாஸ்' சிலிண்டரில் திடீர் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியதில் வாகனம் முழுவதும் தீ பிடித்தது.

இந்த விபத்தில் 17 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger