சிவில் சர்வீஸ் தேர்வில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி!


2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை முதலான பொதுப்பணித் துறைகளுக்கான தேர்வு முடிவில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2012 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளியன்று (03-05-2013) வெளியானது.
இதில், 998 மாணவர்கள் பொதுப்பணித்துறை பணிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தேர்வு முடிவில் ஹரிதா குமார் முதல் இடத்தையும் ஸ்ரீராம் இரண்டாம் இடத்தையும் ஸ்ருதி சரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


தேர்ச்சி பெற்ற 998 பேர்களில் 23 ஊனமுற்றோர் உட்பட 457 பேர் பொதுப்பிரிவிலிருந்தும் 9 ஊனமுற்றோர் உட்பட 295 பேர் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களிலிருந்தும் 2 ஊனமுற்றோர் உட்பட 169 பேர் சீர்மரபினரிலிருந்தும் 77 பேர் பழங்குடியினரிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 998 பேர் இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை, இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள், மற்றும் மத்திய அரசுப் பணிகளில் தற்போது காலியாக உள்ள 1091 இடங்களில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். மீதம் 93 இடங்கள் காலியாக உள்ளன.

இவ்வாண்டு தேர்ச்சி அடைந்தவர்களில் 31 பேர் முஸ்லிம்களாவர். இவர்களில் 4 பேர் அதிக மதிப்பெண் பெற்ற 100 பேர்களில் அடங்குவர். கடந்த ஆண்டு தேர்விலும் மொத்தம் தேர்ச்சி பெற்ற 920 பேர்களில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
இவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
வ.எண் - நிலை      - பதிவெண்         - பெயர்
  1.  23               035545             SYED SEHRISH ASGAR
  2.  41               066391             SHOWKAT AHMAD PARRAY
  3.  95              182909              KHURSHEED ALI QADRI
  4.  97               038816             JAFAR MALIK
  5. 119              283801             ZEESHAN QAMER
  6. 183              377310             WASEEM AKRAM
  7. 189              208999             ADNAN NAYEEM ASMI
  8. 194              207008            AMANAT MANN
  9. 199              146557             SHAMA PARVEEN
  10. 212              393751             TOUFEL TAHIR
  11. 319              090198             UMME FARDINA ADIL
  12. 386              094382             NAVEED TRUMBOO
  13. 394              114902             MAZID KHAN
  14. 438              018620             SADDIK AHMED
  15. 501              029247             ABID HUSSAIN SADIQ
  16. 507              308901             ANSARI SHAKEEL AHMED
  17. 525              150058             ANEES C
  18. 571               004438            AMANULLAH TAK
  19. 581               038236            AKIL BAKSHI
  20. 612               079922            YASSER ARAFAT F A
  21. 651               231299             DANISH ABDULLAH
  22. 709              200407             HASAN AHMED
  23. 722              108770              MD MUSTAQUE
  24. 730              133654              MD SALIK PARWAIZ
  25. 745               010166             MOHAMMAD SUHAIL FAZAL
  26. 760               017847             MOONA YASMIN
  27. 786               425714             NAIKWADI PARVEZ FATTULAL
  28. 801               398329            A THAMEEM ANSARIYA
  29. 820               060296            RUVEDA SALAM
  30. 825               223489            HAMMAD ZAFAR
  31. 902               008274            IFTAKHAR AHMED CHOWDHRY
2010 ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்திய அளவில் மொத்தமுள்ள 4790 இந்திய ஆட்சித்துறை(IAS) பணிகளில் 108 முஸ்லிம்கள் உள்ளனர். இது 2.25 சதவீதமாகும். மேலும் இந்தியக் காவல்துறை(IPS) பணிகளில் 109 முஸ்லிம்கள் உள்ளனர். இது 3.39 சதவீதமாகும்!

கடந்த 2011 ஆம் ஆண்டுத் தேர்வு முடிவில் முஸ்லிம்கள் 3.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் அது இந்த 2012 ஆம் தேர்வு முடிவில் 3.11 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது
நன்றி-sm 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger