லுஹர் மற்றும் அஸர் தொழுகையில் இமாம் சப்தமிடாமல் ஓதுவது ஏன்?


கேள்வி : பஜ்ர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் இமாம் சப்தமிட்டு ஓதுகிறார். ஆனால் லுஹர், அஸர் தொழுகையில் அவ்வாறு ஓதுவதில்லையே ஏன்?
 
பதில் : வணக்க வழிபாடுகளில் சில காரியங்களுக்குக் காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பல காரியங்களுக்குக் கூறப்படவில்லை. எதில் காரணம் கூறப்படவில்லையோ அதற்குக் காரணம் தேடிச் செல்ல வேண்டியதில்லை! அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே சரியானதாகும்! அந்த வகையைச் சார்ந்ததே இந்த கேள்வியும்.

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் சப்தமில்லாமலும் இரவு நேரத்தில் சப்தமிட்டும் ஓதி வந்தார்கள் என்று சிலர் இதற்குக் காரணம் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் இக்காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை!

இஷா, பஜ்ர் நேரங்களில் தான் சப்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும். சிறிய அளவில் சப்தம் வந்தால் கூட அனைவருக்கும் தெரிந்து விடும்! மேலும் மஃரிப் நேரம் அனைவரும் விழித்திருக்கும் நேரம் தான். எனவே அவர்கள் என்ன காரணத்திற்காக என்று குறிப்பிட்டார்களோ அதுவே இதற்குப் பொருந்தாததாக உள்ளது.

உங்கள் கேள்விக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழகாக தெளிவாகப் பதிலளித்துள்ளார்கள்.

எல்லாத் தொழுகைகலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தைவிட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறி விடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும். நூல்: புகாரி 772 

நன்றி - TNTJ துபாய் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger