மதுவை ஒழிக்க வழி என்ன? - இஸ்லாம் கூறும் தீர்வு!

மதுவை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுங்கள்அதனால்தான் நாட்டில் பல துன்பங்களும்துயரங்களும்நிகழ்கின்றன என்று ஆட்சியாளர்களிடத்தில் கோரிக்கை வைத்தால்அவர்கள் கூறும் பதில், “டாஸ்மாக் கடைகளை இழுத்துப்பூட்டினால்கள்ளச்சாராயக்கடைகளை திறந்துவிடுவார்கள்.அதனால்தான் நாங்களே சாராயக்கடைகளை திறந்து வியாபாரம் பார்க்கின்றோம்” என்பதாகஉள்ளது.

உண்மையிலேயே இந்த மதுவை ஒழிக்க வழியில்லையாஎன்ற ஏக்கம் பலரது உள்ளத்திலும்நீண்ட நெடுங்கனவாக உள்ளதுஅதற்கு இஸ்லாம் அழகான தீர்வை வழங்குகின்றது.
  மது அருந்துவது ஒரு கேவலமான செயல் என்று பார்க்கும் நிலைமாறிஅது ஒருபாராட்டத்தக்கபோற்றத்தக்க ஒரு சாதனை என்பது போல நிலைமையை மாற்றி வைத்துள்ளனர்ஆட்சியாளர்கள்.
ஆம்தொலைக்காட்சி சேனல்களில் குடிமகன்கள் பேட்டி கொடுக்கின்றனர்.
 ·         மூன்று நாட்கள் தொடர்ந்து கடைகளைப் பூட்டினால் நாங்கள் எங்குபோய் மதுக்குடிப்பது?என்று கேள்வியெழுப்புகின்றனர்.
 ·         நாங்களெல்லாம் அன்றாடங்காட்சிகள்மூன்று நாட்கள் கடைகளுக்கு விடுமுறைவிட்டால்மொத்தமாக மூன்று நாட்களுக்கு தேவையான சரக்குகளை நாங்கள் முன்கூட்டியே எப்படிஸ்டாக் வாங்கி வைக்க முடியும் என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர்.
 ·         நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அரசாங்கம் பூட்டிவிட்டால் நாங்கள்குடிப்பதை நிறுத்திவிடுவோமாஎங்களுக்கு தெருக்களில் உள்ள கடைகளில் வாங்கிக்குடிக்கத்தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
  இந்தக் காட்சிகள் தொலைக்காட்சி செய்திச் சேனல்களில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட கேவலமானநிலைதான் நம் நாட்டில் நிலவி வருகின்றது.
இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடிய மிருக ஜென்மங்களை கவனிக்க வேண்டிய விதத்தில்கவனிக்காததுதான் இவர்கள் இப்படி பேசுவதற்கும்கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கும் காரணமாகும்.
தவறு செய்பவர்களுக்கு அந்த தவறுக்காக வழங்கப்படும் தண்டனைகள் கடுமையானதாகஇருக்குமேயானால் அதைக் கண்டு அஞ்சி நடுங்கி அந்தத் தவறை செய்யாமல் அந்தக்குற்றவாளிகள் திருந்துவதற்கு அது வழிவகுக்கும்.
மது அருந்தியவனுக்கு இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனைகளை கேட்பவருக்குமது அருந்தும்எண்ணம் அறவே ஓடிவிடும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இஸ்லாம் தண்டனைகளைவழங்கச் சொல்லி உள்ளது.
 இஸ்லாம் சொல்லும் தீர்வு :
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு(அவரைஅடிக்குமாறுகட்டளையிட்டார்கள்மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மரமட்டையாலும்செருப்புகளாலும் அடித்தார்கள்அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)
 நூல்அஹ்மத் 18610
மது அருந்தியவர்களை அடிக்க வேண்டும் என்ற சட்டம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது என்பதற்கு கீழ்க்காணும் செய்தி தக்க சான்றாகும்.
 மது அருந்தும் கணவரை அடிக்கும் மனைவிக்கு அதிர்ஷ்டம்!
 ஒரு அடிக்கு ரூ. 1000 வீதம் பரிசு!!
"மது குடிக்கும் பழக்கம் உள்ள கணவரை பொதுக் கூட்டங்களுக்கு அழைத்து வந்து அவரைஅடிக்கும் பெண்களுக்கு ஒரு அடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம், 10 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும்என ஆந்திர நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டிஜிவெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆந்திரா கர்னூல் நகரில் நடந்த  விவசாயப் பெண்கள் கருத்தரங்கில்கலந்துகொண்டு பேசியஅவர் கூறியதாவது:- பெண்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தைமது குடிக்கும் பழக்கமுள்ள,அவர்களின் கணவன்மார் வீணாகச் செலவிடுகின்றனர்கணவர்கள் மது அருந்துவதால் பெண்களின்வருமானம் எல்லாம் சாராயத்திற்குச் சென்று விடுகிறது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்களை அவர்களது மனைவியர்இதுபோன்ற பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வந்து மக்கள் மத்தியில் நிற்க வைத்துஅடிக்க வேண்டும்.
கணவரை அவமானப்படுத்தும் விதத்தில் இப்படி அடிக்கும் பெண் களுக்கு ஒரு அடிக்கு 1000ரூபாய்க்கு குறையாமல், 10 அடி அடித்தால் 10 ஆயிரம் ரூபாயை ரொக்கப் பரிசாக அந்த இடத்தில்வழங்கப்படும்கணவரை 10 அடி அடிக்கும் பெண்கள் 10 ஆயிரம் ரூபாயை பரிசாக பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் அறிவித்தது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மதுஅருந்துபவர்களுக்கு அடி கொடுக்க வேண்டும் என்ற சட்டமும் இன்றைய ஆட்சியாளர்கள்வாயிலிருந்து  தானாகவே வந்துவிட்டதுஅது பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பையும்பெற்றுள்ளது.
இஸ்லாம் சொல்லக்கூடிய தண்டனையை மது அருந்திய குடிகாரன் ஒருவனுக்கு வழங்கிஅந்தவீடியோப் பதிவைத் தொலைக்காட்சி சேனல்களில் ஒரே ஒருநாள் ஒளிபரப்பிக்காட்டட்டும்.
இஸ்லாம் சொல்லக்கூடிய இந்த தண்டனை முறைகளை அமுல்படுத்திவிட்டால்அதன் பிறகுகுடிகாரர்களது  வாயில்  கொண்டு போய் மதுவை ஊற்றினால்கூட அதை அவர்கள் துப்பிவிட்டுஓடும் நிலை ஏற்படும்.
டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு இஸ்லாம் சொல்லக்கூடிய இத்தகையசட்டதிட்டங்களை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவார்களேயானால் நாட்டில் யாராவது மதுஅருந்துவார்களா?
இத்தகைய சட்டதிட்டங்களின் மூலம் மது அருந்துவதைக் குறித்து நினைத்துப்பார்க்கவேஅச்சப்படும் நிலை உருவாகுமாஇல்லையா?
அதைவிட்டுவிட்டு இவர்களே மதுவை ஊற்றிக்கொடுத்துமக்களை மாக்களாக ஆக்குகின்றார்கள்என்றால்இவர்களை என்னவென்பது?
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்மது பானத்தையும்அதைப்பருகுபவரையும்பிறருக்கு பருகக் கொடுப்பவரையும்அதை விற்பவரையும்அதைவாங்குபவரையும்அதை (பிறருக்குதயார் செய்து கொடுப்பவரையும், (தானேதயார் செய்துகொள்பவரையும்அதைச் சுமந்து செல்பவரையும்யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோஅவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்இப்னு உமர் (ரலி)  நூல்இப்னு மாஜா 3371
thanks - onlinepj
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger