எஸ்எஸ்எல்சி மாணவர்கள் இப்போது படித்தாலும் நிச்சயம் பாஸ்!

்எ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பிளஸ் ஒன் வகுப்பிலோ அல்லது பாலிடெக்னிக் போன்ற கல்விநிலையங்களில் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகளிலோ சேர முடியும்அந்த அளவுக்கு இந்தத் தேர்வு முக்கியமானது. எஸ்எ்எல்சி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் பலர் நன்கு படித்து தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள்.இதுவரை படிப்பில் அக்கறை செலுத்தாமல்தேர்வு நெருங்கும் நேரத்தில் எப்படிப் படிப்பது என்று திகைத்து நிற்கும்மாணவர்களும் இருக்கிறார்கள்இருக்கின்ற குறுகிய காலத்தில் குறிப்பிட்ட சில பாடங்களிலாவது மாணவர்கள் முழுகவனம் செலுத்திப் படித்தால்கூடஇந்தத் தேர்வில் தேர்ச்சி பெற முடியும்சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில்படிக்கும் சராசரி மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதற்காக அந்த மாணவர்களுக்குப் பயிற்சிஅளித்துவரும் பாலாஜிமாணவர்கள் ஏற்கெனவே படித்த பாடங்களுடன் குறுகிய காலத்தில் எளிதாகப் படிப்பதற்காகஎந்தெந்தப் பாடங்களை முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுகிறார்அதுகுறித்தவிவரங்கள் இதோ...

தமிழ் முதல் தாள்

தமிழ் முதல் தாளைப் பொருத்தவரையில் செய்யுளும்உரைநடையும் கேட்கப்படுகின்றனஅவைகள் தொடர்பான

1) உரிய விடையைத் தேர்ந்தெழுதுக,     2) கோடிட்ட இடத்தை நிரப்புக, 3) பொருத்துக    4) தொடருக்கு ஏற்றவினாத் தொடர்அமைக்க

போன்றவற்றில் அதிக கவனம்  செலுத்திப் படித்தால் எளிதில் 20 மதிப்பெண்கள்  பெற்றுவிடலாம்செய்யுள் மற்றும்உரைநடைப் பகுதிகளில் உள்ள 2-மதிப்பெண் வினாக்களை நன்கு படித்துக்கொண்டால் எளிதில் 20 மதிப்பெண்கள்எடுத்துவிடலாம்8-மதிப்பெண் வினாக்களைப் பொருத்தவரையில் செய்யுள் பகுதியில் சிலப்பதிகாரம் மற்றும்திருக்குறளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும்உரைநடைப்பகுதியைப் பொருத்தவரை  பல்துறை வேலைவாய்ப்புகள்மற்றும் உயர்;தனிச் செம்மொழி ஆகியவைகளை படித்துக்கொள்ளவேண்டும்.

தமிழ் - இரண்டாம்தாள்

தமிழ் இரண்டாம் தாளைப் பொருத்தவரையில் துணைப்பாடம்இலக்கணம்,  கடிதம்,  கட்டுரை,  மொழிப்பயிற்சிஆகியவைகள் கேட்கப்படுகின்றனஅவற்றில்

1) உரிய விடையைத் தேர்ந்தெழுதுக,     2) கோடிட்ட இடத்தை நிரப்புக

ஆகிய இரண்டு பிரிவுகளுக்கான பாடங்களை நன்கு படித்தால் எளிதில் 10 மதிப்பெண்கள் பெற்று விடலாம்.துணைப்பாடத்தைப் பொருத்தவரை 10 துணைப்பாடங்கள் உள்ளனஅவற்றில்

1) நூலகம்,     2) தற்காலத் தொல்லியல் ஆய்வுகள்,  3)அண்ணாவின் கடிதம் , 4)அன்றாட வாழ்வில் சட்டம்,  5)பாரதரத்னா எம்.ஜி.ஆர்.  போன்றவைகளை நன்கு படித்துக்கொள்ள வேண்டும்.

இலக்கணத்தைப் பொருத்தவரை

1)இலக்கணக் குறிப்புகள்,    2)பகுபத உறுப்பிலக்கணம், 3)அலகிட்டு வாய்பாடு ஆகியவைகளை நன்கு படித்துக்கொள்ளவேண்டும்மேலும் இலக்கணம்  தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் அனைத்தையும் நன்கு படித்துக்கொள்ளவேண்டும்.

அணி இலக்கணத்தைப் பொருத்தவரை

1.உவமை அணி, 2.எடுத்துக்காட்டு உவமை அணி,  3.தற்குறிப்பேற்ற அணி, 4.சொற்பொருள் பின்வருநிலை அணி 5.பிறிதுமொழிதல் அணி, 6.வஞ்சப்புகழ்ச்சி அணி, போன்ற அணிகளை நன்கு படித்துக் கொள்ள வேண்டும்.

கடிதம் எழுதுதல்

1)வேலை வேண்டி விண்ணப்பம், 2)நம் பகுதி சூழல் குறித்து விண்ணப்பம்விழாவிற்கு தலைமையேற்க அழைப்புவிடுத்து விண்ணப்பம் போன்றவைகளை நன்கு தசெய்து கொள்ள வேண்டும்.

கட்டுரைப் பயிற்சி

1)கணினி தோற்றம்-வளர்ச்சி, 2)சுற்றுப்புறச் சூழல் மாசடைதல்கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகியவைகளைபடித்துக்கொள்ளலாம்தற்போது பிரச்சனைக்குரிய கூடங்குளம் அணுமின்நிலையம் என்ற தலைப்பில் கூடகட்டுரைதயர்செய்து படிக்கலாம்.

மொழிப்பயிற்சியைப் பொருத்தவரை

1.ஆங்கிலப் பழமொழிகளை தமிழாக்கம் செய்தல்,     2.ஆங்கில உரைப்பத்தியை தமிழாக்கம் செய்தல் 3.ஆங்கிலச்சொற்களை தமிழாக்கம் செய்தல்,    4.அரபு எண்களைத் தமிழெண்களாக மாற்றுதல் 5.படிவத்தைப் பூர்த்தி செய்தல்(வங்கிதபால்நிலையம்)    6.சூழலுக்கேற்ப விடையளித்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி எளிதில்மதிப்பெண்களை எடுத்து விடலாம்.

ஆங்கிலம் - முதல் தாள்

1)Plural Form    2)British English-American English    3)Homophones 4)Compound word    5)Expanded form    6) Prefix-Suffix 7)Syllabication    8)Choose appropriate word    9)Make own sentence 10)Noun-verb changes

மேற்கண்ட தலைப்பில் உள்ள அனைத்தையும்  நன்கு படித்தால் 10 மதிப்பெண்கள் பெறலாம்.

1)Sentence Pattern    2)If-clause    3)Question Tag 4)Article    5)Preposition

மேற்கண்ட அனைத்தையும் நன்கு படித்து எளிதில் 5 மதிப்பெண்கள் பெறலாம்.

Model Millionaire (or) Bird Migration ஆகிய இரண்டையும் படித்தால் ஒரு paragraph எழுதி எளிதில் மதிப்பெண்கள் பெற்றுவிடலாம். Migrant Bird (or) Going for water ஆகிய இரண்டையும் படித்துக் கொண்டால் Quote from memory என்ற கேள்வியில்எளிதில் 5 மதிப்பெண்கள் பெற்றவிடலாம்

Poetry Paragraph -ஐ பொருத்தவரை Lampman picturise a millionaire,  Experience of the children who went to fetch water from the woodsமற்றும் efforts of the Shilpi in his attempt at shaping a raw stone  ஆகிய மூன்றையும் நன்கு படித்துக்கொண்டால் ஒரு  paragraph எழுதி எளிதில் 5 மதிப்பெண்கள் பெற்று விடலாம்.

1)Comprehension Question and Answers 2)Identify the errors   (article, preposition, singular-plural, Degress of comparison , verb ) 3)Question and Answer about the Picture.
மேற்கண்ட மூன்றையும் நன்கு தயார் செய்து படித்துக் கொண்டால் எளிதில் 15 மதிப்பெண்கள் பெறலாம்.

ஆங்கிலம் - இரண்டாம்தாள்

Non - Detailed பகுதியைப் பொருத்தவரை, 7 Supplementary reader- உள்ளவைகளை மட்டும் நன்குபடித்துக்கொண்டால்Character / Speaker, Matching, Choosing correct answers, Comprehension question-answers மற்றும் Paragraph ஆகியதலைப்புகளின் கீழ் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு எளிதில்  பதில் எழுதி 35 மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.
    மேலும்
1)Complete the content of the letter     2)Prepare an advertisement 3)Epand the following headlines    4) Bar diagram (or) Pie diagram (question-answer) 5)Summary writing    6)General paragraph 7) Products and slogans    8) Road map 9)Translation    10)Express your views about the picture
என்ற தலைப்புகளின்கீழ் ஒவ்வொன்றையும் தயார்செய்து நன்கு படித்துக் கொண்டால் எளிதில் 40 மதிப்பெண்கள்பெற்று விடலாம்.

கணிதம்

(1) செய்முறை வடிவ இயல்

 தொடுகோடுசிறப்பு வகை முக்கோணம் வரைதல் ஆகிய இரண்டையும் நன்கு  வரைந்து பார்த்தால் போதுமானது.எளிதில் 10 மதிப்பெண்கள் பெற்று விடலாம். (அனைத்து பக்கங்களும் தரப்பட்ட வட்ட நாற்கரம் எனில் நன்குதெரிந்திருந்தால் மட்டும் எடுத்துச் செய்யலாம்தொடுகோடு 4, முக்கோணம் - 6 என மொத்தம் 10 கேள்விகளேஉள்ளனஇவற்றை எளிதில் தயார் செய்து கொள்ள இயலும்.

(2) வரைபடம் - 10

 ‘xy’ வரைபடம் - செவ்வக அதிபரவளையம் – எளிதானது
பயிற்சி 10-2 ல்    6 கணக்குகளும்  எடுத்துக்காட்டில்  3 கணக்குகளும் உள்ளன.

மேற்கண்ட 9 கணக்குகளையும் பலமுறை நன்கு போட்டுப் பார்த்து பழகிக் கொண்டால் போதுமானதுஎளிதில் 10மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.

5- மதிப்பெண் கேள்விகள்

(1) சார்புகள்

    புத்தக பயிற்சி வினாக்கள் 13,14,15,16 = 4 கணக்குகளும்
    எடுத்துக்காட்டு வினாக்கள் 1.20, 1.22  = 2 கணக்குகளும்
    ஆக மொத்தம் 6 கணக்குகளைப் போட்டுப் பழகிக்கொண்டால் எளிதில் 5  மதிப்பெண்கள் பெற்று விடலாம்

(2) அணிகள்

    புத்தக பயிற்சி வினாக்கள் 5 முதல் 13 வரை = 9 கணக்குகளும்
    எடுத்துக்காட்டு வினாக்கள் 4.15 முதல் 4.19 வரை = 5 கணக்குகளும்
ஆக மொத்தம் 14 கணக்குகளைப் போட்டுப் பழகிக்கொண்டால் எளிதில் 5 மதிப்பெண்கள் பெற்று விடலாம்

(3) நிகழ்தகவு

  புத்தகப் பயிற்சி வினாக்கள் - 3 முதல் 14 வரை  = 12 கணக்குகளும்
  எடுத்துக்காட்டு வினாக்கள் - 12.14 முதல் 12.18 வரை = 5 கணக்குகளும்
ஆக மொத்தம் 17 கணக்குகளைப் போட்டுப் பழகிக்கொண்டால் எளிதில் 5 மதிப்பெண்கள் பெற்று விடலாம்

(4) கணங்கள்

1)AU(B∩C) = (AUB) ∩ (AUC)         2)A∩ (BUC) = (A∩B) U (A∩C) 3)A(BUC) = (AB) ∩ (AC)       4)A(B∩C) = (AB) ∩ (AC)  5)(AUB)’  = A’ ∩ B’   6)(A∩B)’  = A’ U B’

 கணங்கள் மூலமாகவோ அல்லது வெண்படம் மூலமாகவோ நிறுவப்பட வேண்டும்இப்பகுதியில் எளிதில்  5 மதிப்பெண்கள் பெற்று விடலாம்

(5) இயற்கணிதம்

              1)   வகுத்தல் முறையில் வர்க்கமூலம்  மற்றும்
              2)   காரணிப்படுத்துதல்

ஆகிய இரண்டை மட்டும் நன்கு பயிற்சி செய்து கொண்டால் போதுமானதுபுத்தகப் பயிற்சி வினாக்கள் - 3.5 எடுத்துக்காட்டு வினாக்கள்- 3.17, 3.18  மேற்கண்டவைகளை நன்கு படித்து எளிதில் 50 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

அறிவியல்

1-8    உயிரியல்   = 8 பாடங்களும்
9-13   வேதியியல் = 5 பாடங்களும்
14-17 இயற்பியல்  = 4 பாடங்களும்.  ஆக மொத்தம் 17 பாடங்கள் உள்ளன.

இவற்றில் 14-ம் பாடத்தில் இருந்து எந்தவித கேள்விகளும் கேட்பதில்லைஎனவே இயற்பியலைப் பொருத்தவரை 3பாடங்களே உள்ளனசெய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்கள் வழங்கப்படும் பட்சத்தில் நாம் 20 மதிப்பெண்கள்மட்டும் எடுத்தாலே எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம்ஆகவே இயற்பியலில் உள்ள 3 பாடங்களை மட்டும்முழுமையாக நன்கு படித்தாலே எளிதில் தேர்ச்சி அடைந்து விடலாம்.

          பாடம் 15  =  10
          பாடம் 16  =   8
          பாடம் 17  =  13     ஆகமொத்தம் 31 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.
பொதுவாக நமது அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள அட்டவணைக் கேள்விகளை நன்கு படித்துக் கொள்ளவேண்டும்.  மேலும் படங்களை வரைந்து பாகங்கள் குறித்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

சமூக அறிவியல்

வரலாற்றில்-14 பாடங்களும்புவியியலில் -8 பாடங்களும்குடிமையியலில்-4 பாடங்களும்பொருளியலில்-2பாடங்களும் உள்ளன.  இவற்றில் குடிமையியல்-4 பாடங்களையும்பொருளியல்-2 பாடங்களையும் மட்டும் நன்குபடித்தால் எளிதில் 20 மதிப்பெண்கள் எடுத்து விடலாம்.  மேலும் வரலாறு மற்றும் புவியியலில் உள்ளதேசப்படங்களை நன்கு குறித்துப் பழகிக் கொண்டால் (5+10) 15 மதிப்பெண்கள் எளிதில் எடுத்து விடலாம்

மேலும் காலக்கோடு என்பதை நாம் எளிதில் எழுதி விட இயலும்வருடங்களையும் நிகழ்ச்சிகளையும் நாம் எழுதிவைத்துப் படித்துக்கொள்ள வேண்டும்முக்கியமாக 1900-ம் வருடத்திலிருந்து 1960-ம் வருடம் வரை உள்ளநிகழ்ச்சிகளை மட்டும் படித்தால் போதுமானதுஎளிதில்-5 மதிப்பெண்கள் பெற்று விடலாம்.
 -
                                                                                                                                  தொகுப்பு ராஜா முகம்மது
நன்றி - tntjsw 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger