தீ மிதிக்க இன்சூரன்ஸ் : தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள்

தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்கவேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.

ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லைஒரு பக்கச்சார்பாகவும்அறிவுக்கும்தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றனஅதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு :
தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவு!
பூக்குழி இறங்குகின்றோம்குண்டத்தில் இறங்குகின்றோம் என்ற பெயரில் தீ வளர்த்து அதில்அனைவரும் ஓடக்கூடிய ஒரு நடைமுறை தமிழகத்திலுள்ள கோவில்களில் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
இது குறித்து தமிழக அரசு ஒரு உத்தரவை சென்ற வாரம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில்அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில்குண்டம் (தீ மிதி விழா)இறங்கும் பக்தர்களுக்குமூன்றாம் நபர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கஅறநிலையத்துறைஅதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து 421 கோவில்கள்உள்ளனஇதில், 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில்ஆண்டுக்கு ஒருமுறைபிரம்மோற்சவமும்இதர உற்சவங்களில்குண்டம் திருவிழாவும் நடக்கிறதுகுண்டம் திருவிழாவின்போது,பக்தர்களிடையே ஏற்படும் தள்ளுமுள்ளுபக்தர்கள் பரவசம் ஆகியவற்றால் குண்டத்தில்விழுந்தும் காயமடைகின்றனர்குண்டம் திருவிழாவில்பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்புஅடிப்படை வசதிகளை ஏற்படுத்தஅரசு உத்தரவிட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துஅறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:
·         குண்டம் திருவிழாவின்போதுபக்தர்கள் பாதுகாப்பை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுஉள்ளது.
·         குண்டம் துவங்க இரு மாதம் உள்ளபோதேஅந்தந்த மாவட்ட கலெக்டர்எஸ்.பி., நகராட்சி,மாநகராட்சி நிர்வாகம்சுகாதாரத் துறைஇதர துறை அதிகாரிகள்அறநிலையத்துறை சார்பில்முன்னேற்பாடு கூட்டம் நடத்த வேண்டும்.
·         குண்டம் விழா நடத்தப்படும் கோவில்களில் கீற்று கொட்டகைகள்பந்தல்கள் போன்று,தீப்பிடிக்கும் பொருட்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
·         கோவில் வளாகம்கோவில் சார் கட்டடங்களில் மின் இணைப்புகளைப் பரிசோதிக்கவேண்டும்.
·         தேவைப்படும் இடங்களில்பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை நிலையங்கள்செயல்படுத்த வேண்டும்.
·         தீயணைப்பு வாகனங்கள்ஆம்புலன்ஸ்கள்ஸ்ட்ரெச்சர்நாற்காலி வண்டி ஆகியவைஎந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
·         தேவையான இடங்களில்தேவையான அளவு தீயணைப்பான்கள் நிறுவவும்,தீயணைப்பானை இயக்கும் முறை குறித்தும்பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு,முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும்
·         குண்டம் இறங்கும் முன்உடைகளில் தீப்பிடிக்காதவாறும்தவறி விழாதவாறும்,உடைகளை சரி செய்து கொள்ளும் படியும்பக்தர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
·         கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில்அதிகப்படியான கோவில்அலுவலர்கள்பணியாளர்கள்என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., மாணவர்கள்சேவைதொண்டர்களையும்போலீசாரையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
·         சிறுவர்சிறுமியர்முதியோர்கர்ப்பிணிகள்மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் குண்டம்இறங்க அனுமதிக்க கூடாது.
·         தீ மிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்குமூன்றாம் நபர்காப்பீடு செய்யநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்றபாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டதுஇவ்வாறுஅவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட உத்தரவு குறித்த பல கேள்விகள் நம்முடைய உள்ளத்தில் எழுகின்றன.
தனிநபர் ஒருவர் தன்னுடைய உடலில் தீயை ஊற்றி கொளுத்திக் கொள்ள முயன்றால் அவரைக்கைது செய்து சிறையில் தள்ளுகின்றது காவல்துறைஅதே நேரத்தில் தீயில்இறங்கப்போகின்றோம் என்று அறிவிப்புச் செய்துவிட்டு தீக்குளிக்கப்போகும் நபர்கள் பக்தர்கள்என்று தங்களைச் சொல்லிக்கொண்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துகலெக்டர்தலைமையில் கூட்டம் நடத்தி தீயணைப்பு வண்டிகளோடுஆம்புலன்ஸ் சகிதம் சகலவசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கின்றதென்றால் இவர்களுக்கு சிந்திக்கும் திறன்என்று ஒன்று உள்ளதா என நம்முடைய உள்ளத்தில் கேள்வி எழுகின்றது.
அதே நேரத்தில் மற்றுமொரு விஷயத்தையும் இங்கு நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.அதாவது இதற்கு முன்பாக மதுரை அருகே பேரையூர் கிராமத்தில்கோவில் திருவிழாவில்.தி.மு.அமைச்சர் துரைராஜ் முன்னிலையில்குழந்தைகளை உயிருடன் புதைத்து பக்தர்கள்நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்ததுஇதன் காரணமாகவே அந்த துரைராஜ் என்றஅமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
குழந்தைகளை உயிருடன் புதைத்து நேத்திக்கடன் செலுத்தும் அந்தத் திருவிழாவிற்கு தமிழகஅரசு தடை விதித்துள்ளதுமனிதர்கள் தங்களது உடலை தாங்களே வருத்திக் கொண்டுதற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம் என்ற காரணத்தால்தான் இந்தத் தடைபோடப்பட்டுள்ளது.
அப்படியிருக்கையில்மண்ணில் புதைத்து உயிரோடு எடுக்கப்படுவதைக் காட்டிலும்தீமிதிப்பதில்தான் அதிக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனஅதிகமதிகம் தடைசெய்யப்படுவதற்கு தகுதியானது இந்த தீ மிதி நேத்திக்கடன்தான்அப்படியிருக்கையில் அதைஅனுமதித்து அதற்கு அரசாங்கமே பாதுகாப்பு அளிப்பது எவ்விதத்தில் நியாயம் என்று நாம் கேட்கவிரும்புகின்றோம்.
மேலும்தீக்குழி இறங்குபவர்கள் ஒவ்வொருவரும் சாமியின் அருளால் தங்களுக்கு எதுவும்காயங்கள் ஏற்படாது என்று சொல்லி அந்த நம்பிக்கையில்தான் தீக்குழி இறங்குகின்றனர்.அப்படியிருக்கையில்தீக்குழி இறங்குபவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாகஅவர்களை தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ்களும்ஸ்ட்ரெச்சர்நாற்காலி வண்டி ஆகியவைகளைதாயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது அவர்களது மத நம்பிக்கையைபுண்படுத்துவதாக ஆகாதா?
அவற்றிற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் செய்யலாம் என்றுதமிழக அரசு உத்தரவிட்டிருப்பது அவர்களது மத நம்பிக்கையை புண்படுத்துவதன்உச்சகட்டமாகத் தெரியவில்லையா?
சேது சமுத்திரத்திட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் கடலுக்கு அடியில் உள்ள ஒருமணல் திட்டை சரி செய்ய மத்திய அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபடுவது எங்களது மதஉணர்வுகளைப் புண்படுத்துகின்றதுஅந்த மணல் திட்டுக்களை இராமர் பாலம் என்று நாங்கள்நம்பிக்கொண்டிருக்கின்றோம்இதை இடிப்பது எங்களது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும்என்று சொல்லி கூச்சல் போடும் சங்பரிவாரங்கள் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனியாகஇருக்கக் காரணம் என்னவோ?   சாமி அருளால் எங்களுக்கு எதுவும் அசம்பாவிதங்கள் நேராதுஎன்று நாங்கள் நம்பும்போது எங்களுக்கு பாதுகாப்பும்இன்சூரன்ஸ் போடுவது எங்களது தெய்வநம்பிக்கைகளை கேலி செய்வதாக உள்ளது என்று எந்த சங்பரிவாரத் தலைவரும் சொல்லக்காணோம்.
இதிலிருந்தே இவர்களது இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது.
அதுபோக இன்சூரன்ஸ் கம்பெனிகள் இதற்கு எப்படி ஒப்புக் கொள்வார்கள் என்பதை நாம்சிந்திக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லிஇந்த இடத்தில்இன்ன நேரத்தில் நான் என் வீட்டையோ,அல்லது எனது வாகனத்தையோ தீவைத்துக் கொளுத்தப் போகின்றேன் என்று அறிவிப்புச்செய்துவிட்டு ஒருவர் தீவைத்துக் கொளுத்தினால் அவருக்கு இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடுவழங்குவார்களா?
அப்படியிருக்கையில் இந்த இடத்தில்இன்ன நேரத்தில்நான் தீ மிதிக்கப் போகின்றேன் என்றுசொல்லி தீ மிதித்து அதில் காயம் ஏற்பட்டால் அது எப்படி இழப்பீடு பெறுவதற்கு தகுதியானஇழப்பீடாக இருக்க முடியும்?
ஆக இப்படிப் பல வகைகளில் இவர்கள் தங்களது மூளையை அடகு வைத்து விட்டுசட்டங்களைப் போடுகின்றார்கள்.
இதே நேரத்தில் இதுபோன்று தீமிதித்தல்மொட்டைத்தலையில் தேங்காய் உடைத்தல்மண்சோறு சாப்பிடுதல்காவடி தூக்குதல்கால்நடை பிரயாணம் செய்து தங்கள் உடலை வருத்திக்கொள்ளுதல்உடல் முழுவதும் அலகு குத்துதல் இப்படி பல வகைகளில் தங்களுக்குத் தாங்களேதங்களது உடலை வருத்திக் கொள்வதால் கடவுளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லைஎன்பதையும்இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகள்தான் என்பதையும் பிறமதசகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு 1400 ஆண்டுகளுக்கு  முன்பே முற்றுப்புள்ளிவைத்துவிட்டது.
வெயிலில் நின்று கொண்டே இருப்பேன்யாரிடமும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்த ஒருநபித்தோழரை நபிகளார் கண்டித்தார்கள் என்ற செய்தியை நாம் பார்க்கின்றோம்.
அதுபோல நடந்தே ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தவரை நீ வாகனத்தில் சென்று ஹஜ் செய்என்று நபிகளார் கட்டளையிட்ட செய்தியையும் நாம் காண்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் காட்டித்தந்த வணக்க வழிபாடுகள் கூட மிக இலகுவானமுறையில் அமைந்துள்ளதை நாம் காண்கின்றோம்.
தொழுகையைக்கூட நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து கொண்டு தொழட்டும் என்றும்,உட்கார்ந்து கொண்டும் தொழ இயலாதவர் படுத்துக் கொண்டு தொழட்டும் என்று வணக்கவழிபாடுகளை இஸ்லாம் இலகுவாக ஆக்கியுள்ளது.
இஸ்லாம் காட்டும் வணக்க வழிபாடுகளை ஒருவர் செய்து இறைவனை வணங்கக்கூடியஒருவர் அந்த வணக்க வழிபாடுகளை செய்வதற்காக இன்சூரன்ஸ் செய்யத் தேவையில்லை;அதற்காக ஆம்புலன்ஸ் கொண்டு வரத்தேவையில்லைஅதற்கு தீயணைப்பு வண்டிகளும்பாதுகாப்பிற்குத் தேவையில்லை.
இந்த வகையில் மேற்கூறிய செய்திகளை ஆய்வு செய்தால் இஸ்லாம் கூறும்வழிகாட்டுதல்கள்தான் சரியானவை மனித குலத்திற்கு நன்மை பயக்கக்கூடியவை என்பதை நாம்உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம்(ஸல்அவர்கள் பார்த்தனர். "இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று விசாரித்தனர். "நடந்தேசெல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்அப்போதுநபிகள் நாயகம் (ஸல்அவர்கள் "அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வதுஅல்லாஹ்வுக்குத் தேவையற்றது'' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக்கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்அனஸ் (ரலி)
நூல்புகாரி 1865, 6701
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லைமாறாக நீங்கள் நன்றிசெலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்தனது அருளை உங்களுக்குமுழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்-ஆன் 5 : 6
நன்றி - onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger