மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற குவைத் பொது கூட்ட நிகழ்ச்சி

மாபெரும்


ஏக இறைவனின் திருப்பெயரால்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக குவைத்தில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு எதிராக உலகளாவிய சதி என்ற தலைப்பில் கெய்தான் பகுதியில் உள்ள கார்மெல் ஸ்கூலில் 01.03.2013 அன்று வெள்ளிகிழமை மாலை 6.00 மனிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அதில் மாநில தலைவர் பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது நாம் ஏற்பாடு செய்த ஸ்கூலின் கொள்ளளவு சுமார் 600 முதல் 700 பேர் வரை அமரலாம் நெருக்கி அமர்ந்தால் 1000 பேர் அமரலாம் என கனக்குபோட்டு நாம் ஸ்கூல் நிர்வாகத்திடம் 700 பேர் கலந்து கொள்வார்கள் என அனுமதி வாங்கியிருந்தோம்

பொதுக்குழு 4 மனிமுதல் நடந்ததால் கதவை சாத்திவிட்டு அனைவரும் அதில் பங்கெடுத்து இருந்தோம் பொது நிகழ்ச்சி 6.30 மனிக்கு என அறிவித்து இருந்தும் 4 மனிக்கே மக்கள் திரள ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் அதிகம் வந்துவிட கூடாது என்பதற்க்காகவே சகோ பீஜெ பேசுவதை அறிவிக்காமலே இருந்தோம் கடைசியாக வெள்ளிகிழமை காலையில்தான் மெசேஜ் மூலம் அறிவித்தோம் அப்படி இருந்தும் பொதுக்குழு முடிந்து கதவை திறந்தால் சுமார் 1500க்கு மேற்பட்டோர் பள்ளிக்கு வெளியே குவிந்துவிட்டனர்

மார்க்க பிரச்சாரத்திர்க்கு இடையூறு செய்வதற்க்காகவே அமைப்பு வைத்துள்ளவர்கள் ஏதாவது செய்யனுமே பாவத்தை கழுவனுமே ஒருத்தரும் ஒன்னும் செய்ய கானோமே என நாம் யோசிக்கும் போதுதான் நமக்கு அந்த தகவல் கிடைத்தது நாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஸ்கூல் நிர்வாகத்திடம் [அந்த ஸ்கூல் கிருஸ்த்துவ ஸ்கூல்] பிஜெ ஜெர்ரிதாமசுடன் ஆங்கிலத்தில் விவாதம் செய்த டிவிடியை கொடுத்து இவர் உங்களுக்கு எதிரானவர்கள் நீங்கள் அனுமதியை ரத்து செய்யாவிட்டால் பல கிருஸ்த்துவர்களை முஸ்லிமாக்கிவிடுவார்கள் அதோடு இவர்கள் பேசும் தலைப்பே கிருஸ்துவ உலகத்தை பற்றிதான் என ஒரு மார்க்கவிரோத பனியை செய்துள்ளார்கள் இதை கேட்டு திகைத்து போன அந்த பள்ளியின் முக்கிய நிர்வாகியான பென் கிருஸ்த்துவ பெண்மனி காசு வாங்கிவிட்டோமே என்ன செய்வது எதை சொல்லி தடுப்பது என யோசித்து கொண்டு இருந்த வேளையில்தான் கூட்டம் அதிகம் குவிந்துள்ளது என்ற செய்திகிடைத்ததும் கன்னியாஸ்திரி உடையோடே நேரில் வந்த அந்த பெண் நிர்வாகி நீங்கள் எங்களிடம் சொன்னதை விட பலமடங்கு மக்கள் வந்துள்ளார்கள் இது எங்க பள்ளியின் சட்டப்படி அனுமதிக்க இயலாது உடனே காலி செய்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தார்கள்

நாமும் கூட்டத்தை பார்த்துவிட்டு இவர்கள் அனுமதித்தாலும் இந்த ஸ்கூலில் அனைவரையும் அடைத்து வைத்து நிகழ்ச்சி நடத்த இயலாது என முடிவுசெய்து உடனே மாற்று ஏற்பாடு செய்ய களத்தில் இறங்கி குவைத்தின் மைய பகுதில் உள்ள ஒரு பிரமாண்டமான ஹாலை புக்செய்தோம் மக்களிடம் ஒரே ஒரு அறிவிப்புதான் அனைவறும் அந்த ஹாலுக்கு வந்துவிடுங்கள் என சொல்லிவிட்டு அரைமனி நேரத்தில் அந்தஹாலை தயார் செய்தோம் நாம் தயார் செய்து முடிப்பதற்க்குள் அந்தஹாலும் நிரம்பிவழிந்தது

நாம் நினைக்காவிட்டாலும் அல்லாஹ்வின் நாட்டத்தால் இடம் மாறியதில் பல நன்மைகள் நமக்கு கிடைத்தது இதை லைவ் செய்ய நெட் ஸ்பீட் போதவில்லையே என கவலைபட்டு கொண்டு இருந்தோம் இந்த ஹாலில் ஹைஸ்பீடில் நெட் இயங்கியது நிறைய மக்கள் சுமார் 2500 பேர்கள் கலந்து கொள்ள இயன்றது எல்லாத்தையும் விட குவைத்தின் மைய பகுதியில் இருந்ததால் மக்களுக்கு வசதியாக இருந்தது இருக்கைகளை எடுத்துவிட்டு தரையில் அமர்ந்தும் மண்டபத்திற்கு வெளியேயும் மக்கள் திரண்டு விட்டதால் மக்களை சமாளிக்க இயலாமல் தொண்டர்கள் திணறினார்கள் இது ஒரு பக்கம் இருக்க நம்மை பத்தி நேற்றுவரை அவதூறு பரப்பிகொண்டு இருந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆவலோடு இதில் கலந்து கொண்டதோடல்லாமல் மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்து அதை புகைபடமாகவும் வீடியோவாகவும் அவர்களுடைய மாநில தலைமைக்கு அனுப்பிகொண்டிருந்தார்கள் அடிக்கடி போனிலும் அவர்கள் தொடர்புகொண்டுபேசினார்கள் நாம் இதை கூர்ந்து பார்த்தபோது இவ்வளவு நன்றாக இஸ்லாத்தை சொல்பவர்களையா திட்ட சொல்லி எங்களை தூண்டிவிட்டீர்கள் மக்களிடம் இவ்வளவு செல்வாக்கு பெற்றவர்களைபற்றியா அவதூறு பரப்ப சொன்னீர்கள் என அவர்கள் தலைமையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டது போல தோன்றியது இது மட்டுமல்லாமல் நம் நிர்வாகிகள் புகைபடம் மற்றும் வீடியோ எடுக்கும்போது வழிய வழிய வந்து போஸ் கொடுத்தது எப்படியாவது நம்புகைபடம் உனர்வில் வராதா என ஏங்குவது போல தெறிந்தது பாவமாகவும் இருந்தது அல்லாஹ் இவர்களுக்கும் இவர்கள் மூலமாவது இவர்களின் தலைமைக்கு நேர்வழிகாட்டட்டும் அரபு நாட்டில் இவ்வளவு நாள் பிஜெவை வைத்து நிகழ்ச்சி நடத்தாமல் இருந்ததற்க்கு எதிரிகள் பரப்பியதுபோல தடையோ எதுவுமோ கிடையாது கூட்டத்தை சமாளிக்க இயலாதே என பயந்துதான் நடத்தவில்லை என்பது நிறுபனமானது அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி - tntjkuwait 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger