ரகசிய முகாம்களை கண்டு பிடிக்க காடுகளில் தேடுதல் வேட்டை!

இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் இருந்து செயல்பட்டுள்ளன என்கிற உண்மை தேசிய புலனாய்வு துறை கண்டுபிடித்தது.
1). மலேகன் குண்டு வெடிப்பு:மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் முஸ்லிம்கள்  தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் பயங்கர குண்டு வெடிப்பில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். மலேகன் நகரமே ரத்தமயமானது பிய்ந்துப்போன சதைகளுடன் மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

2). சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்பு:  இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் பிப்ரவரி 19 அன்று வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் பெண்கள் குழந்தைகள் உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர். எங்கு திரும்பினாலும் இரத்த வெள்ளம், கை, கால் துண்டிக்கப்பட்டவர்கள் பல நூறு பேர்கள் என்று அந்த இடமே கோரமாகி போனது.

3).  மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு: மக்கா மஸ்ஜித், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரில் முகலாயர்களின் கட்டிட கலையில் 1694 கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியில் 2007 மே 18ம் தேதி வெள்ளி கிழமை முஸ்லிம்கள் தொழுகை முடித்து வெளிவரும் பொழுது குண்டு வெடித்தது இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் காயம் அடைந்தனர்.

4). அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உள்ள அஜ்மீர் தர்காவில் 2007 அக்டோபர் 11 தேதி முஸ்லிம்களின் ரமலான் நோன்பு மாலை 6.12 pm க்கு குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த குண்டுகள் வெடித்தது முஸ்லிம்களின் மசூதிகளில், முஸ்லிம்கள் அதிகமாக பயணித்த ரயிலில் இதில் செத்தது அனைவரும் முஸ்லிம்களே. இப்படி இருந்தும் காவல்துறை இந்த வழக்கில் முதலில் கைது செய்தது முஸ்லிம்களைத்தான் பின்னர் இந்த வழக்கு  2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னரே இந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாத சக்திகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சுவாமி அசிமானந்தா, பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர், இந்திய ராணுவ லப்டினட் கர்னல் புரோகித், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் ஜோசி, மற்றும் ராஜேஷ் சவுத்திரி, சமந்தர் சிங், கேரளாவை சேர்ந்த சுரேஷ் நாயர், ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக பிடிபட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய பல ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு துறை தேடிவருகிறது.

இந்தியாவில் நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் துணை அமைப்புகளான, பஜ்ராங்க்தல், அகில பாரதிய வித்தியாதி பரிசத் ( ABVB) இந்து ஜாக்ரன் மன்ஞ்ச் ஆகிய இயக்கங்களின் தொடர்புகள் வெளிவந்தன. இந்த வழக்கில் பிடிபட்டு சிறையில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் மேற்கூறிய இயக்கங்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்பட்ட ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க மத்தியபிரதேச மாநிலத்தின் தேவாஸில் உள்ள காட்டுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு ஏஜன்சி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளை  நடத்துவதற்கு முன்பு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் காடுகளில் உள்ள தங்களது ரகசிய முகாம்களில் சோதனை நடத்தியிருந்தனர். 
 
எனவே இதுத்தொடர்பான ஆதாரங்களை மற்றும் ரகசிய முகாம்களை கண்டுபிடிக்க தேசிய புலனாய்வு துறை காடுகளில் கடும் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்த  வெடிக்குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக திகழ்ந்தவரும் ( குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயர் வெளிவராமல் இருக்க) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர் மற்றும்  இதற்க்கு பண உதவி செய்தவருமான சுனில் ஜோசியை கொன்ற  பல்பீர் சிங்கையும் தேசிய புலனாய்வு துறை இந்த தேடுதல் வேட்டைக்கு அழைத்து வந்திருந்தது.
 
இந்தூரில் மண்டல்வாடா கிராமத்தில் இருந்து கடந்த திங்கள் கிழமை பல்பீர் சிங் கைது செய்யப்பட்டான். ஜோஷியின் நெருங்கிய நண்பனும், கொலையில் குற்றவாளிகளில் ஒருவனுமான ஜிதேஷ் பட்டேலின் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடத்தியது. பல்பீர் சிங்கின் வீட்டில் இருந்து 9 MM பிஸ்டலின் தோட்டக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் மீதமுள்ள தோட்டக்களை உபயோகித்து ஜோஷி கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
 
குராதியாராவு காட்டுப் பகுதியில் இந்த சோதனை நடந்தது. மேலும் தேவாஸின் தலைநகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள "மோ" காட்டுப் பகுதியில் இன்னொரு சோதனை நடந்தது.. ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் ரகசிய புகலிடமாக திகழும் தீபால்பூரில் இருந்து முன்னர் கைதுச் செய்யப்பட்ட கமால் சவுகான் என்ற  தீவிரவாதியை அழைத்து வந்து இங்கு சோதனை நடத்தப்பட்டது.
நன்றி - சிந்திக்கவும் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger