TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மதுரை - ராஜா!...


அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! அனைத்துப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே….!!!!

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 
மதுரை - ராஜா!...

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் கடந்த 07/02/2013 வியாழனன்று இரவு 11 மணியளவில் {TABUK – STC யில்} பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த சகோ, ராஜா அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்….!!

கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் : அவருக்கு இஸ்லாத்தின் கொள்கை விளக்கம், வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.

மேலும் அவர் தனது பெயரை அப்துல் ரஹீம் என்றும் மாற்றிக்கொண்டார்.

மேலும் அவருக்கு சகோ, PJ அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம்,மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், நபிவழித்தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும்.

மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நாத்திகர்களுடன் நடந்த விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்! ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினார்! அல்ஹம்துலில்லாஹ்….!! 

அன்புச் சகோதர, சகோதரிகளே! வல்ல இறைவனுக்கு 
நன்றி சொல்லுங்கள்!, இவருக்காக துஆச்செய்யுங்கள்!!
========================================
அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக 
நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக! 
பாவமன்னிப்பு தேடுவீராக”!! 
[உலகப் பொதுமறை திருக்குர்ஆன்– 110:2,3]

தகவல் - TNTJ THABUK KILAI 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger