பிச்சைகாரரிடம் பிச்சை கேட்பானா கார்பரேட் முதலாளி!

அமெரிக்காவின், கன்சாஸ் நகரத்தைச் சேர்ந்தவர், சாரா டார்லிங். ஒரு பிச்சைக்காரருக்கு பணத்தையும், சில பொருட்களையும் தானமாக கொடுத்தார்.

 மறுநாள் தன் விரலில் அணிந்திருந்த  விலை உயர்ந்த வைர மோதிரத்தை  காணவில்லை என்பதை உணர்ந்தார். "பிச்சையிட்ட போது மோதிரம் விழுந்திருக்கலாம் என எண்ணி பிச்சைக்காரரிடம் சென்று விசாரித்தார்.

பிச்சைகாரரும்  "அந்த மோதிரம் என்னிடம் தான் உள்ளது. நீங்கள் அதை தேடி வருவீர்கள் என்று காத்திருந்தேன்' என, மோதிரத்தை திருப்பி கொடுத்தார்.நெகிழ்ந்து போன சாரா,நேர்மையான பிச்சைக்காரருக்கு நிதியுதவி அளிக்குமாறு, இணையதளம் ஒன்றில், வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து நிதி உதவிகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 

ஏழைகளுக்கு மனசாட்சி இருக்கிறது, தான் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தினாலும் அதிலும் ஒரு நேர்மையை கடைபிடித்திருக்கிறார். இவர் நினைத்திருந்தால் அந்த வைர மோதிரத்தை விற்று தனது வாழ்க்கையை வளப்படுத்தி கொள்ள முடியும் ஆனால் அதை அவர் செய்யவில்லை. அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைபட வேண்டாம்,இருப்பதே நமக்கு போதும் என்று திருப்திபட்டிருக்கிறார்.

இந்த பிச்சைகாரரிடம் இருந்து இந்திய அரசியல்வாதிகளும், டாடா, பிர்லா, ரிலைன்ஸ் போன்ற கார்பரேட் முதலாளிகளும் பாடம் படிப்பார்களா? எவ்வளவு பணம் இருந்தாலும் திருப்பதி அடையாமல், வெறிபிடித்து நாட்டை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். மனசாட்சியே இல்லாமல் நாட்டின் வளங்களையும், ஏழை மக்களின் உழைப்பையும், பொருளாதாரத்தையும் உருஞ்சும் இந்த பணக்கார காட்டேறிகளோடு ஒப்பிடும்பொழுது இந்த பிச்சைகாரர் வானளவுக்கு உயர்ந்து நிற்கிறார். 

இந்த பிச்சைகாரரிடம் இருக்கும் நல்ல குணத்தை இந்த கார்பரேட் முதலாளிகள் பிச்சை கேட்டு பெறுவார்களா? 

நன்றி - சிந்திக்கவும் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger