திருக் குர்ஆன் இறை வேதம் என்பதற்கான மற்றுமோர் சான்று


மலேசியாவிலிருந்து யாசர் அரபாத் DISc
 
விரல் நுனியையும் சீராக்க ஆற்றலுடயவன் 
75 بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ (4)
 
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள். 

இந்த வசனம் குர்ஆன் இறைவேதம்தான் என்பதை அற்புதமாக நிரூபிக்கிறது.  
                                     அதை வரிசையாக காண்போம் 
1.இந்த வசனம் மறுமையில் அல்லாஹ் எப்படி மனிதர்களை ஒன்று திரட்டுவான் என்பதை பற்றி கூறுகிறது 
2.இந்த வசனத்தில் அல்லாஹ் உடலில் உள்ள மற்ற எத்தனையோ உறுப்புகளை பற்றி பேசாமல் குறிப்பாக விரல் நுனிகளை பற்றி பேசுவதற்கு அதிகமான காரணங்கள் உள்ளது 
3.இந்த வசனம் uniquness of finger tips என்று சொல்லப்படும் விரல் நுனிகளின் தனித்தன்மை பற்றி சொல்கிறது 
4.விரல் ரேகை உலகத்தில் வாழும்,வாழ்ந்த ,வாழப்போகிற யாருக்கும் ஒரே மாதிரி இருக்காது அதனால்தான் அல்லாஹ் விரல் நுனிகளையும் சீராக்க வல்லவன் என்று கூறுகிறான்.
5.DNA- மரபணு ஒத்திருக்கும் இரண்டு சிறுவர்களை  கூட ஆய்வு செய்யும் போது அவர்களின் விரல் ரேகை மட்டும் மாறுபடுகிறது.இது குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதை அழகாக நிரூபிக்கிறது.
6.விரல் நுனிகள் பற்றிய ஆய்வுகள் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதை அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்னே சொல்லிவிட்டான்.
7.அல்லாஹ்வின் ஆற்றல் பற்றி விஞ்ஞானிகள் சொல்லும்போது விரல் ரேகைகளில் உள்ள வித்தியாசத்தை no more then few square centimeters. சிறிய சதுர அடி வித்தியாசத்தில் அனைத்து மனிதர்களையும் வேறுபடுத்தி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
8.விரல் ரேகையை மற்றும் மாற்ற  முடியாது என்பதற்காக முக்கியமான ஆவணங்கள் அனைத்திலும் கைரேகைகளை வாங்குதை பார்க்கிறோம்.
9.அதேபோல் திருடர்களை கைரேகை கொண்டு சுலபமாக பிடிப்பதை பார்க்கிறோம் இதற்குக் காரணம் கைரேகை  மட்டும் மாறுபடும்  என்பதுதான்.
10.அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள் ஒரு மனிதன் தீக்காயம் பட்டு கைரேகைகள் அழிந்தாலும் பிறகு தோல் உண்டாகும்போது அதே கைரேகைதான் அல்லாஹ் தருகிறான்.
11.இப்பொழுது நடைமுறையில் bar code முறையில் மனிதர்களின் . கைரேகைகளை வகைப்படுதுகிறார்கள்  
12.இதை உம்மி (எழுதப் படிக்கத் தெரியாத ) நபி (ஸல்) அவர்களால் . ஒரு போதும் சொல்ல முடியாது 
13.எனவே இந்த வசனம் குர்ஆன் இறைவனின் வார்த்தைதான் என்பதை நிரூபிக்கிறது.




நன்றி - safwanlanka 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger