பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் தேதியை, தேர்வுத்துறை நேற்றுஅறிவித்தது. பிளஸ் 2 தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது .10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27ல் துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கிறது.பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதால், தேர்வுஅட்டவணை, எந்நேரமும் வெளியாகலாம் என, மாணவர்கள் எதிர்பார்ப்புடன்இருந்தனர். தேர்வு அட்டவணை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, தேர்வுத்துறைஅனுப்பியிருந்தது. இதற்கு, நேற்று ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, பொதுத்தேர்வுதுவங்கும் தேதி மற்றும் அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி,அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பிளஸ் 2 : அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, 27 வரைநடக்கின்றன. தொழிற்கல்வி சேர்க்கை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில்நடப்பதால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, போதுமான இடைவெளி அளித்து,அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய பாடதேர்வுகள், மார்ச், 11ல் துவங்குகிறது. அன்று, இயற்பியல் தேர்வு நடக்கிறது. 14ம்தேதி, கணிதம், விலங்கியல் தேர்வுகள் நடக்கின்றன. 18ம் தேதி, வேதியியல் தேர்வுநடக்கிறது. அடுத்து, இரு நாள் இடைவெளிக்குப் பின், 21ம் தேதி, உயிரியல், தாவரவியல்தேர்வுகள் நடக்கின்றன. இதனால், முக்கிய பாட தேர்வுகளுக்கு, கடைசி நேரத்தில்,மாணவர்கள் நன்றாக தயாராவதற்கு, வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு : இத்தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல், 12 வரை நடக்கின்றன.இதிலும், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் தேர்வுகளுக்கு, போதிய இடைவெளிதரப்பட்டுள்ளன. கணிதத் தேர்வு, ஏப்ரல், 5ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி, அறிவியல்தேர்வும், 12ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம்பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 10.5 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பதிவெண்கள் எப்போது ? : பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாவதுவாரத்தில், செய்முறைத் தேர்வு துவங்கிவிடும். அறிவியல் பிரிவு மாணவ,மாணவியருக்கு, பொங்கல் முடிந்ததும், பதிவெண்கள் வழங்கப்படும்.பிப்ரவரி, 20ம்தேதி வரை, செய்முறைத்தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:00 மணிக்கு துவங்கி, பிற்பகல் 1:15க்கு முடியும். 10:00 மணி முதல், 10:15 வரையான 15 நிமிடங்களில், முதல் 10 நிமிடங்கள், கேள்வித்தாளைபடித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள், விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்டவிவரங்களை பதியவும் ஒதுக்கப்படும். 3 மணி நேரம் வரை தேர்வு நடக்கும். பத்தாம் வகுப்பு தேர்வு, காலை 10:00 மணிக்கு துவங்கி, 12:45க்கு முடியும். விடைஎழுதுவதற்கான நேரம், 10:15க்கு துவங்கி, 12:45 வரை, 2:30 மணி நேரம் வரை நடக்கும். பத்தாம் வகுப்பில், அறிவியல் பாடத்திற்கு செய்முறைத் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு,பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ நடக்கலாம்.
நன்றி - tntjsw.net
|
பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
Labels:
கல்வி தகவல்கள்,
முக்கிய அறிவிப்புகள்
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னா அல் இஸ்லாமியா என்ற அமைப்பிற்கும் இடையில் 27.12.2012 அன்று விவாத ஒப்பந்தம் செய்வதாகவும், ஒப...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
கேள்வி : பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? ஷாகிரா பதில் : தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன...
-
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்த...
-
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்...
-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 10.12.2012 அன்று காளிச்சாமி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ...
-
அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் 29.012.12
Post a Comment