பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் செட் தேர்வு முடிவுகள்..

கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதிதேர்வு (செட்)முடிவுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என பாரதியார் பல்கலைக்கழகவட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தேர்வு கடந்த 2012 அக்டோபர் 7ம் தேதி நடந்ததுஇதில் மாநிலம் முழுவதும் 51,678பேர்எழுதினர்மொத்தம் 27 பாடங்களுக்கு மூன்று தாள்களைக் கொண்டதாக தேர்வுநடந்ததுதேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புமாணவர்களிடையே எழுந்துள்ளது.
இது தொடர்பாகபல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ்பிச்சை கூறியது:
செட்தேர்வு வினாத்தாள் மதிப்பீடுகள் முடிந்துவிட்டனஅனைத்துப் பணிகளும்ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில்தேர்வு முடிவை வெளியிடத் தயாராக உள்ளோம்.பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்ஒப்புதல்வந்தவுடன் பிப்ரவரி முதல்வாரம் அல்லது 2வது வாரத்தில் தேர்வு முடிவை வெளியிடஉள்ளோம் என்றார்.
செட்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு அரசு கல்லூரி மற்றும் உதவிபெறும்கல்லூரிகளில் காலியாக உள்ள 3,000 பணியிடங்களை நிரப்ப ஆள்தேர்வு நடக்கும் எனதெரிகிறது.

nandri thinamani
நன்றி - tntjsw 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger