இயேசுவை கண்ணியப்படுத்தும் மார்க்கம் இஸ்லாமா? கிறிஸ்தவமா?


மனிதஇனத்தை இப்புவியில் படைத்த அல்லாஹ் காலத்துக்குக் காலம் மனிதர்களிலிருந்தே தூதர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு வேதங்களையும் வழங்கி, மனிதனது நல்வாழ்க்கைக்கு வழிசெய்தான். தனது இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்

(பின்னர்) நாம் கூறினோம்:-“நீங்கள் அனைவரும் இதில் இருந்து இறங்கிவிடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு (என்னுடைய தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சியமாக வரும். (உங்களில்) எவர்கள் என்னுடைய அந்நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர;களுக்கு யாதொரு பயமும் இல்லை;அவர;கள் துக்கப் படவும் மாட்டார்கள்” .

(அல்குரஆன் 2:38)
இவ்வாறு அனுப்பப் பட்ட தூதர்கள் வரிசையில் முதல் இடத்தைப் பிடித்துக் கொண்ட ஆதம் (அலை) அவர்களுக்கும், அவரது மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும், அவர்கள் இருவரது சந்ததியினரான நமக்கும் இது ஓர் இறைகட்டளையாகும்.

இறைத்தூதர்கள் வரிசையில் இறுதி இடத்துக்கு முந்தைய இடத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தூதர், இவருக்கு மனிதவரலாற்றிலேயே ஒரு தனிஇடம் உண்டு.இவர் தான் மர்யமின் குமாரன் ஈஸா(அலை) (இயேசு) ஆவார். இவரின் பிறப்பு அதிசயமானது: தந்தை இன்றிப் பிறந்தார், குழந்தைப் பருவத்திலேயே பேசியவர், சிறுவயது முதலே வேதமும், நபிப்பட்டமும் வழங்கப் பட்டவர், தனது தாயின் பெயருடன் இணைத்து மர்யமின் குமாரன் ஈஸா என அழைக்கப்படுபவர், இறையனுமதி கொண்டு பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியவர். என இவரின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்

இறைவனால், தாம் செய்த கொடிய பாவங்களுக்காக பல சோதனைகளுக்குட்படுத்தப்பட்ட, பல பாதகச் செயல்களைத் தம் வழக்கமாகக் கொண்ட, இறைத்தூதர்களையும், நல்லதை ஏவித் தீயதைத் தடுக்கும் மக்களையும் சர்வசாதாரனமாகக் கொலை செய்யும் வழக்கத்தையுடைய, அடுத்தவன் உடமைகளை வட்டி மூலம் திரட்டும் எலிகளாக,

”மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்” போன்ற வார்த்தைகள் மூலம் நபிமாரகளையும், இறைவனையும் கேவலப்படுத்தும் வழக்கமுடைய..என மொத்தத்தில் பல பாதகக்குணங்களையுடைய யூத சமுதாயத்துக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள். அவர்களில் சிலர் அவரை ஏற்றார்கள், பலரோ மறுத்தார்கள். மறுத்தவர்கள் ஏனைய நபிமாரர்களைச் சதி செய்து கொன்றது போல ஈஸா(அலை) அவர்களையும் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். 


(ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்யச்) சதி செய்தார்கள். (எனினும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்து விட்டான். அல்லாஹ் சதி செய்பவர்களில் மிக மேலானவன். (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள் : “ஈஸாவே நிச்சியமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைப்படுத்துவேன், உங்களை நம்மளவில் உயர;த்திக் கொள்வேன். நிராகரிப்ப
வர்களி லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவரர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்………” (அல்குர;ஆன் - 3:54-55).

மேலும் அல்குர்ஆனின் கூற்றுப்படி யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஈஸா(அலை) அவர;களின் வரலாற்றிலும், அவருக்கு அருளப்பட்ட வேதமான இன்ஜீலிலும் பல பொய்களையும், வரலாற்றுத் திரிவுகளையும் ஏற்படுத்தியது மட்டுமன்றி இவர் ஒரு இழிகுடும்பத்தில் பிறந்தவர் போலவும் சித்தரிக்கப் படுகின்றார். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், “முஸ்லிம்களையும் - இஸ்லாத்தையும் விடவும் நாங்கள் இயேசுவை கண்ணியப் படுத்துகிறோம் என தைரியமாக ஒலி எழுப்புகிறது கிறிஸ்தவ உலகம்.

ஆனால் உண்மை அக்கூற்றுக்கு நேரெதிராக உள்ளது என்பதை முஸ்லிம் சமுதாயத்துக்கும், ஏனைய சமுதாயங்களுக்கும் தெளிவு படுத்தவே இச்சிறுமுயற்சி. ஏனென்றால், ஒரு சில முஸ்லிம் பெயர்தாங்கிய யூத, கிறிஸ்தவக் கைக்கூலிகள் அவர்கள் வழங்கும் சிறுதொகைப் பணத்துக்காக இறைவசனங்களையே மாற்றியமைக்கிறார்கள். 


ஆக்கம் : முராத் ஸஃபி
நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger