உரிய வயதை அடையாத பெண்ணிடம் பாலுறவு (செக்ஸ்) வைத்துக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு ஏழாண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது.
இரவு விடுதியில் நடனமாடும் 17 வயதான பெண்ணொருவருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு சில்வியோ பெர்லுஸ்கோனி (76) பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், மேலும் ஒருமுறை காவல்துறை விசாரணையில் தலையிட்டு அப்பெண்ணை மீட்டதாகவும் பெர்லுஸ்கோனி மீது வழக்குப் பதிவாகியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்னாள் பிரதமர் பெர்லுஸ் கோனிக்கு ஏழு வருடங்கள் சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளனர். குற்றவாளி விரும்பினால், இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடும் செய்யலாம்.
முன்னாள் பிரதமர் என்பதற்காக அல்லாமல், 70 வயதைக் கடந்த முதியவர் என்ற முறையில் பெர்லுஸ்கோனிக்கான தண்டனையை அந்நாட்டுச் சட்டப்படி குறைப்பதற்கும் வழியிருக்கிறதாம்.
Post a Comment