குவைத்: குவைத் பாராளுமன்றத்தை கலைத்து அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், செல்வம் கொழிக்கும் எண்ணை வளமிக்க நாடாகும். இங்கு, கடந்த பிப்ரவரி 2012-ஆம் ஆண்டு 50 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி ஜூன் மாதம் பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்திற்கு மறு தேர்தல் நடைப்பெற்றது. அது சமயம், வாக்காளர்கள் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்காலாம் என்ற சட்டத்தை நீக்கி ஒரு வாக்காளர் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்கலாம் என்று அந்நாட்டு மன்னர் ஷேக் சபாஹ் அல் அஹமத் அல் சபா உத்தரவிட்டதையடுத்து, இச்சட்ட திருத்தங்களை நீக்கக் கோரி எதிர் கட்சியினர் இத்தேர்தலை புறக்கணித்திருந்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், டிசம்பர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பாராளுமன்றத்தையும் கலைத்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இருந்த போதிலும், ஒரு வாக்காளர் ஒருவருக்கு மட்டுமே வாக்களிக்கலாம் என்ற அந்நாட்டு மன்னரின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மறு தேர்தலுக்கான தேதியை மன்னர் ஷேக் சபாஹ் அல் அஹமத் அல் சபா விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment