மாணவியரிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் ஆசிரியர்களின் கல்விச் சான்று பறிக்கப்படும் என்றும், அவர்களால் காலம் முழுவதும் ஆசிரியர் பணி செய்ய இயலாத நிலைமைக்குத் தள்ளப்படுவர் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளுக்கும் இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தவறான செயல்களில் ஈடுபடாத வகையில் ஆசிரியர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஆலோசகர், உதவியாளர், நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்த வேண்டும்
தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவ, மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாடங்களுடன் பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற ஆற்றல்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment