பீஜிங்: சுற்றுச்சூழலை கெடுப்போருக்கு மரண தண்டனை அளிக்கும் அதிகாரத்தை சீன அரசுஇ அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ளது.
சீனாவில் ஜன பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு காட்டிய அக்கறை சுற்றுசூழலை பாதுகாப்பதில் காட்டவில்லை என்ற கோபம் மக்களிடையே உள்ளது.
தொழிற்சாலைகள் பெருகி விட்டதால் சுற்று சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் சில ஊழல் அதிகாரிகளால் இந்த பிரச்னை தொடர்கிறது.
சீனாவின் முக்கிய நகரங்களில் தொழிற்சாலை மற்றும் வாகன புகைகளால் சுத்தமான காற்றை சுவாசிக்க இயலாத நிலை உள்ளது. கேன்களில் அடைக்கப்பட்டுள்ள சுத்தமான காற்றை வாங்கி சுவாசிக்கும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இந்த விஷயத்தில் இனியும் மிதவாத நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிலைமை மோசமாகும் என நினைத்த சீன அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுசூழல் விஷயத்தில் அக்கறை காட்டாத பலமுறை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் தயங்க வேண்டாம்’ என சீன அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளது.

Post a Comment