இஷ்ரத் ஜஹான் கொலை - வன்ஷராவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

2004 ஆம் ஆண்டு குஜராத் காவல்துறையினரால் போலி மோதலில் கொல்லப்பட்ட மாணவி இஷ்ரத் ஜகான் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி வன்ஷராவைக் கைது செய்ய மத்திய புலனாய்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

மும்பை நகர சி.பி.ஐ. நீதிமன்றம் அளித்த உத்தரவினை அடுத்து மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத் காவல்துறை முன்னாள் துணை இயக்குனர் வன்சாரா சபர்மதி மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வன்சாரா, 2005 ஆம் ஆண்டு போலி மோதலில் கொல்லப்பட்ட சொஹ்ராப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கௌஸர் பீவி வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் சட்டப்பிரிவு 57 ன்படி அவரைக் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ள கூடுதல் தலைமை நீதிபதி குட்வத், வன்சாராவுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், வீட்டிலிருந்து வரும் உணவை உட்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 15, 2004 அன்று நடைபெற்ற பொய் மோதலில், இஷ்ரத் ஜஹான், பிரனேஷ் பிள்ளை என்ற  ஜாவித் ஷேக், ஜீஸன் ஜொஹர் மற்றும் அம்ஜத் அலி ராணா ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் ஜீஸன் ஜொஹர் மற்றும் அம்ஜத் அலி ராணா பாகிஸ்தானைச் சார்ந்தவர்கள். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என குஜராத் காவல்துறை இவர்களைப் பற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

இஷ்ரத் ஜஹானின் தாயார் கொடுத்த புகாரினை விசாரித்த சிறப்பு புலனாய்வுப் பிரிவு இந்தக் குற்றச்சாட்டுப் பொய் எனத்தெரிவித்ததுடன், அனைவரும் குஜராத் காவல்துறையினரால் போலியான மோதல் மூலம் கொல்லப்பட்டதையும் தெரிவித்தது. இந்த வழக்கில் மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகள் மீது குறிப்பிட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், பிணையில் வெளி வந்து விட்டனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கூடுதல் டி.ஜி.பி.  பாண்டே என்பவர் தலைமறைவாகி உள்ளதாக சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாண்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger