கடந்த 2004 ஆம் ஆண்டில் இஷ்ரத் ஜஹான் என்னும் கல்லூரி மாணவி குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நிகழ்த்தப்பட்ட போலியான துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.
அம்மாணவியுடன் அவரது நண்பர்கள் மூவரும் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அம்மாணவியுடன் அவரது நண்பர்கள் மூவரும் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற மாநில அரசின் வாதம் பொய்யானது என்று சொல்லப்பட்டது. இது பற்றிய வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் ஜெயந்த் பட்டேல், அபிலாஷாகுமாரி ஆகியோர் மாநில அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
"குறிப்பிட்ட நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற காவல் அதிகாரிகளை மாநில அரசு ஏன் பாதுகாக்க நினைக்கிறது என்று வினா எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கை, மத்திய புலனாய்வுத் துறை விசாரிப்பதற்கு மாநில அரசு தொடர்ந்து ஏன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும் புரியவில்லை. இந்த வழக்கில், குறித்த காலத்துக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், மத்திய புலனாய்வுத் துறை தாமதப்படுத்துவது ஏன்? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், மென்மையாக நடக்க வேண்டும் என்பது போல மத்திய புலனாய்வுத் துறை விரும்புகிறதா?" என்று கேள்வி எழுப்பி மாநில அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
Post a Comment