சீனா அமைக்கும் கொழும்பு - யாழ். அதிவேக பாதை... - இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு !!

சீன உதவியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு - யாழ்ப்பாணம் அதிவேக விரைவுப் பாதை குறித்த கவலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான அதிவேக விரைவுப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இலங்கை அரசின் இந்தச் செயற்பாடானது வடக்குக்கு மிக அருகில் தலைமன்னாரில் இருந்து சுமார் 32 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இவ்வாறான நிலையில் வடக்கில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகளை இலங்கை அரசு சீனாவிடம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில வழங்கியுள்ளது.
சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்கள் நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி என்ற பேர்வையில் எந்த வெளிநாட்டு படைகளையும் வடக்கில் நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை. தன்னுடைய சொந்த திட்டமிடல்களின் மூலமாகவே வடக்கு மாகாணம் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களின் தற்போதைய உடனடித் தேவை அதிவேக விரைவுச் சாலை அல்ல. அவர்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து அவர்கள் இன்னமும் மீளாத நிலையில் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தே முதலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தில் தமது கணவனை இழந்த 87 ஆயிரம் இளம் விதவைகள் வடக்கில் உள்ளனர். இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாராத்தை மேம்படுத்துவதற்கு எந்த தி;ட்டங்களையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை. யுத்தத்தின் போது கணவனை இழந்த அவர்களின் குடும்பங்கள் நீடித்த சுமையை ஏற்க வேண்டியிருக்கிறது.
இத்தகையோரின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை இலங்கை அரசு செயற்படுத்தினால் அது பெரும் வரவேற்புக்குடையதாக அமையும். இதுவே வடக்கு, கிழக்கு பகுதி மக்களின் அவசியமானவும் அவசரமானதுமான தேவையாகும். மாறாக அதிவேக விரவுச் சாலை அல்ல எனறார் சுரேஷ் எம்.பி.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்க கடனுதவி வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு சிரமம் என் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
முன்னாள் போராளிகளுக்கும் இத்தகைய கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொறுப்பு கையெத்து கேட்கப்படுகிறது. அவர்கள் எங்கே போய் பொறுப்புக்கு கையெழுத்திட ஆட்களைத் தேடுவது?
ஆகவே அரசு இத்திட்டங்களை இலகுவாக்க முன்வரவேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு வர உதவமுடியும் எனவும் அவர் கூறினார்.
எனவே முதலில் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும். தற்போதுள்ள ஏ-9 வீதியே போக்குவரத்துக்கு போதுமானது. முதலில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிட்டு அதன்பின் வேண்டுமானால் சில வருடங்களின் பின்னர் அதிவேக விரைவுச் சாலை குறித்து கவனம் செலுத்தலாம்.
இது தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
10 முதல் 15 வருடங்களுக்கு தற்போதுள்ள ஏ-9 வீதியே போதுமானது. இதனைச் சொல்வதன் மூலம் நாங்கள் வட பகுதியின் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்று கருதிவிடக் கூடாது.
எங்களுடைய தற்போதைய கவலை வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது தான் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger