குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாடாளுமன்ற பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப் பட்டதை அடுத்துபாஜக மூத்த தலைவர் அத்வானி தாம் கட்சியில் வகித்து வந்த பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்தார்.
அத்வானியின் ராஜினாமாவால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேசி அத்வானியின் ராஜினாமா முடிவை கைவிடச் செய்தனர்.
இந்நிலையில் பாஜகவுக்கு மற்றொரு அதிர்ச்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் நரேந்திர மோடியின் பதவி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நரேந்திர மோடிக்கு வழங்கப் பட்ட பொறுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய ஜனதா தள அமைச்சர் நரேந்திர சிங் '' கறை படிந்த ஒருவரின் கையில் பொறுப்பை அளித்துள்ளது அந்த கட்சியின் அடிப்படைவாத அரசியலையே காட்டுகிறது. இதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் கொல்கட்டா சென்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் கே.சி தியாகி கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது.

Post a Comment