மத சகிப்புத் தன்மை பேணாதவன் உண்மையான பௌத்தனாக மாட்டான்.



களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன.
மத சகிப்புத் தன்மை தொடர்பாக களனி பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன எழுதிய ஆக்கத்தை இங்க பதிவிடுகின்றேன். இதில் மத சகிப்புத் தன்மை குறித்து உலக மட்டத்திலான கருத்துக்களை பேராசிரியர் ஆராய்வதுடன், பௌத்த மதத்திலிருந்தும் ஆதாரங்களை முன்வைத்திருக்கின்றார். இலங்கை நாட்டில் இனவாதத்தை விதைத்து பிரிவினை வாதத்தைத் தூண்ட நினைப்பவர்களின் சிந்தனையில் பௌத்த பொதுமக்கள் சிக்கிக் கொள்ளாமல் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சில சிந்தனைகளை பேராசிரியர் இதில் தொகுத்திருக்கின்றார்.
மத சகிப்புத் தன்மை தொடர்பான பண்பு குறித்து எல்லோராலும் பேசப்படுகின்றன. பிற மதத்தவர்களுடன் இரண்டறக் கலந்து வாழும்போது, மேற்படி சகிப்புத் தன்மை பேணுவது மிகவும் உயர்வானதொன்றாக அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பெரும்பாலான பௌத்தர்கள் பிற மதங்களை மதித்து, மதங்களுக்கிடையிலான உறவினைப் பேணி நடக்கின்ற போதிலும் ஒரு சில அரசியல் இலாபம் கருதிய சக்திகள் பிறமதச் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கச் செய்யும் பண்பினை தம் அடிவருடிகளுக்கு ஊட்டி, அதன் மூலம் மத நம்பிக்கையாளர்களுக்கும் மதத்தைப் பின்பற்றுவோருக்கும் எதிராக தமது மதத்தைச் சேர்ந்தவர்களை ஈடுபடத் தூண்டும் நிலையைக் கண்டு வருவதானாலேயே மேற்படி மத சகிப்புத் தன்மை குறித்து பெயரளவில் விரும்புகின்றனர்.
பௌத்தர்கள் என்போர், சகல மதங்களிலுமுள்ள தர்க்க ரீதியான போதனைகளை மதித்து நடக்கும் வகுப்பினர் என்றே நான் நினைக்கிறேன். அல்லது, அந்நிய மத செயற்பாடுகளை மதிக்க முடியாவிடினும் அதனை விமர்சிக்காமல் மௌனம் காக்கும் ஒரு பிரிவினர் என்பதே எனது மற்றொரு கருத்தாகும். ஆனால், யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைக்கு நிலைமை மாறியிருக்கிறது.
“பொறுமை’ என்பதற்கு மத நிம்மதி, நிம்மதி போன்ற அர்த்தங்கள் கொள்ளப்படுகின்றன. எவ்வாறான போதும் மத சகிப்புத் தன்மை தொடர்பாக பௌத்த மதத்தின் கருத்தை கேட்பதற்கு முன் அந்த நிலைப்பாடு தொடர்பாக அறிந்து கொள்வது பிரயோசனமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
“மத சகிப்புத் தன்மை’ எனும் சூழ்நிலையில் ஒரு பஷன் என்ற நிலைக்கு வீழ்ந்தது ஐரோப்பிய காலத்திலாகும். விசேடமாக 2001 செப்டெம்பர் 11ஆம் திகதி தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவில் இந்தப் பதம் ஒரு மந்திரம் போன்றிருந்தது. ஐரோப்பாவில் ஏனையோர் நல்ல நிலைக்கு கருதப்படுவதாக இன்னும் காணக்கூடியதாக இல்லை. அதற்குக் காரணம் ஐரோப்பிய சங்கத்துக்கு உட்பட்ட சில பிரதேசங்களில் “சகிப்புத் தன்மை’ சிதைந்திருப்பதேயாகும். ஏனைய மதங்கள் பொறுமை காப்பதற்கு எத்தகைய கரிசனையும் அதற்காக எடுக்க வேண்டும் என்பது தெரிகிறது.
விசேட கருத்துக் கொண்டுள்ள “சகிப்புத் தன்மை’ என்ற சொல்லைப் பிரேரித்தவர் என்ற அடிப்படையில் கணிக்கப்படுபவரான ஜேர்மன் நாட்டு நோக்காளரான ஜர்கன் ஹபர்மாஸ் (Turgan Habermas) என்பவராவார். 2004 இல் ஜெகஸ் டெரீடா (Jacgues Derrida) மரணமானதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னணி நோக்காளராகத் திகழ்ந்தவர் இவரே.
ஹபர்மாஸ், பல்கலைக்கழகத்தை (Cosmopolitanism) கட்டியெழுப்பி, நோக்காளராகத் தன்னைக் காட்டிக் கொண்டு, சகிப்புத் தன்மை எனும் அடிப்படைக் கொள்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பது, அதில் காணப்படும் முழுமையான நியாயத் தன்மையினாலாகும் என்று கூறலாம். நவீன உலகில் காணப்படும் மதங்கள் ஒருமுகப்பட வேண்டும் என்றும் அவ்வாறே பன்மைத்துவவாதத்துக்கு திறந்துவிட வேண்டும் என்றும், அவர் அங்கு நம்பினார். அவ்வாறே நிகழ்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கும் உலகை வெவ்வேறு கோணங்களில் நோக்குவதற்கு மதங்கள் வெற்றி கொள்ள வேண்டும் என்று அவர் நம்பினார்.
ஹபர்மாஸ் இங்கு சகிப்புத்தன்மை எனும் பதத்தைப் பிரயோகிப்பது லிபரல் அரசியல் சித்தாந்தத்தில் அவர் கண்டுகொள்ள விரும்புவது, நாட்டுப் பிரஜைகள் அனைவரும் பரஸ்பரம் என்ற அடிப்படையில் சம உரிமைகள் பெற்று வாழும் ஒரு சூழலையே அத்தகைய சூழலில் எந்தவொரு சமய அதிகார சபைக்கோ அல்லது அரசியல் அதிகார சபைக்கோ பொறுமை காக்க ஒருதலைப் பட்சமாக வரையறை விதிப்பது கடினமான ஒரு விடயமாகும். அதனால் சமூகத்தில் வாழும் அனைவரும் தமதும், ஏனைய மதத்தவர்களதும் நம்பிக்கையாளர்களுக்கும் பின்பற்றுவோருக்கும் விசேடமான எந்தவொரு சலுகைகளும் வழங்காது, ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
ஹபர்மாஸ் நோக்கும் விதத்தில், சமய அடிப்படைவாதங்களை சகித்துக் கொண்டு இருப்பதில் மனிதப் போராட்டம் லிபரல் அரசை நிர்மாணிப்பதற்கு உதவிய சக்தியாக இருந்தது மாத்திரமல்ல, இன்றும் அது அவ்வாறே செல்லுபடியாகியிருக்கிறது. அனைவரும் பரஸ்பரம் அன்னியொன்யமாக வாழும் அரசியல் கலாசாரத்தில் இயங்கும் ஓர் அமைப்பு முறை இருப்பதால் (Normative Reasons) ஏனைய நம்பிக்கையாளர்களைப் புறக்கணிக்க முயற்சிப்போரை தோற்கடிக்கச் செய்யலாம் என்பதையும் அவர் காட்டித் தந்தார். இந்த அடிப்படையில் மத சகிப்புத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் அல்லது செயற்படுத்தும் மக்கள் இரண்டு வகையான சுமைகளை சுமக்கிறார்கள் என்று ஹபர்மாஸ் கூறுகிறார்.
அதாவது, முதலில், தமது சமயத்துக்கு பொருத்தமான விதத்தில் வாழ்வதாகும். இரண்டாவதாக அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளித்தலாகும்.
ஐரோப்பிய சூழ்நிலையில் மத சகிப்புத்தன்மை முன்னுக்கு வந்தது தற்செயலான நிகழ்வொன்றல்ல. மிகவும் பலம் வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடு மூலமேயாகும். 14ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகள் காலமாக ஐரோப்பாவால் மிகவும் விருப்பத்துடன் மேற்கொள்ளப்பட்ட அந்நியர்களை வெளியேற்றுவது அழிப்பது மற்றும் பலாத்காரமாக சம்ஹாரம் செய்வதுமான (Forcible Assimilation) செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இனங்களது ஒருமைப்பாடு மற்றும் பல் கலாச்சாரத்தை பிரபல்யப்படுத்துவது வரலாற்றின் முக்கிய நடவடிக்கைகளினூடாகவாகும்.
ஹபர்மாஸ் மூலம் இங்கு மேற்கொள்ளப்பட்டது சகிப்புத் தன்மை என்ற பதத்தை புனரமைப்புச் செய்து அதற்கு சம்பிரதாய பூர்வமாக முக்கியத்துவம் வழங்குவதாகும். அதே போன்றே இந்தியாவைச் சேர்ந்த மதமற்ற நோக்காளரான மீராநந்த (Meera Nanda) என்பவர், மத சகிப்புத்தன்மை என்பது, உள்ளத்திலிருந்து மாத்திரம் ஊற்றெடுத்து வரக்கூடிய ஒன்றென்று காட்டித் தருகிறார். அவற்றின்படி அந்த நிலைப்பாட்டிலிருந்து பிற மதத்தினரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ அவசரமாகப் பின்பற்றுவதற்கோ அதில் எந்தவொரு ஆலோசனையும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. விசேடமாக, “பிறருக்குச் செய்யும் உபகாரம்’ என்ற அர்த்தம் பொறுமையில் கருக்கொண்டிருக்கிறது.
அடுத்து பொறுமையோடு இருப்பதால் கருணைப் பண்பு போன்று, பெருந்தன்மையும் இருக்கலாம். பெரும்பாலும் வரையறையற்ற அதிகாரம் கொண்ட பெரும்பான்மை மூலம் சிறுபான்மையினர் மீது பொறுமை மேற்கொள்ள முடியும். அத்துடன் எந்த நேரத்திலும் மேற்படி பொறுமையை நிறுத்திக் கொள்ள அவர்களாலே முடியும். அப்போது ஏனைய பலவீனமான சிறுபான்மை (எண்ணிக்கையின் அடிப்படையை பொறுத்தே இங்கு கருத்துக் கொள்ளப்படுகிறது). மதத்தினரின் குரல் மேலோங்குவதற்கும் இடம் கிடைப்பதில்லை. பெரும்பான்மையோரால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது போன சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட பாராதூரமான அநியாயங்கள் ஏராளமானவற்றை அண்மைக்கால வரலாற்றில் காண முடிகிறது.
பகலில் தமது வீட்டில் உணவு உண்ட அயலவர் மாலையில் தனது வீட்டை தீக்கிரையாக்குவதைக் காண்கின்றோம். இது சர்வசாதாரண காட்சிகளாகும். பழைய யூகோஸ்லேவியா உடைந்து சிதறிப்போன பின்னர், பொறுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு, சமய ரீதியான வழிமுறை ஆரம்பமானதை அண்மையில் நாம் கண்டோம். அதனால் இலங்கையிலும் அத்தகையதொரு நிலை ஏற்பட வழியிருக்கிறது.
1983 கறுப்பு ஜூலை சிறுபான்மையினர் தாங்கிக் கொள்ளாத, பொறுத்துக் கொள்ளாத ஒன்றாக அமைந்தது. அதன் சிதைந்து போன இடங்கள் இன்னும் மீள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் தமிழ், சிங்கள மக்களுக்கு முகத்துக்கு முகம் பார்க்க முடியாத அளவுக்கு தூரமாக்கப்பட்டு விட்டது.
தற்போது பௌத்த இஸ்லாமிய சமய விரிசலுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதுவும் யாராலோ வைக்கப்பட்ட பொறியாகும். நூற்றுக்கு அறுபத்தைந்து வீதமான பௌத்த மக்கள் இந்த பொறியில் அகப்பட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன்.
பௌத்தர்களுக்கு  சமய சக வாழ்வு தேவைப்படும் அதே நேரம் அதற்கான சூழல் எம் எதிரே வந்து கொண்டிருக்கிறது. நாம் தெரிந்த வரையில் சம்பிரதாயபூர்வமாக மதம் ஒன்றை அறிந்து கொள்வதற்கு மூன்று வழி முறைகள் காணப்படுகின்றன. அதாவது, சமய கிரகந்தங்கள், (Scriptures), இறைவாக்கு (God Gada) மற்றும் மறுவுலகம் (Next World) ஆகியன தொடர்பான ஆழமான கருத்துக்கள்.
இந்தியாவின் முதலாவது பிரதமர் நேரு, இந்த காரணிகள் மூன்றையும் வரையறைக்குட்படுத்தி மதம் ஒன்றை அறிமுகம் செய்தால் மக்கள் தமது விமர்சன ரீதியான அறிவை மட்டுப்படுத்திக் கொள்வர் என்று அவர் கூறினார். தமது அனுபவம் மற்றும் சுயசிந்தனை (விமர்சன அறிவு) யைப் பயன்படுத்தி உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்வது மதத்தைப் புரிந்து கொள்வதற்கான மிகவும் சிறந்த வழிமுறையாகும் என்று அவர் மேலும் கூறினார்.அவ்வாறு செய்யும் போது எமக்கு சமய மேம்பாட்டினை குருட்டு பக்தி சிரத்தையுடனும் தவறான எண்ணப்பாடுகளிலிருந்தும் தவிர்ந்து கொள்ள முடியுமாகிறது.
நேரு பின்பற்றும் சமயமானது, சிறந்த செயற்பாடு, சிறப்புக்கும் கெட்ட செயற்பாடுகள் கேட்டுக்கும் இட்டுச் செல்லும் என்பதாகும். எனது மதத்தின் அடிப்படையும் அதுவேயாகும். (Good begets good and bad bagets bad; this is the main principle of my relagion) ஆபிரகாம் லிங்கனும் அதேபோன்றே கூறியிருக்கிறார்.
“நான் நல்லதொன்றைச் செய்யும் போது நல்ல எண்ணமும் தீமையொன்றைச் செய்யும் போது தீய எண்ணமும் ஏற்படுவதை உணர்கிறேன். இதுதான் எனது மதக் கோட்பாடாகும். (When I do good I feel Good, when I do bad, I feel bad, and that’s my religion) புத்தரின் போதனைகளின்படி மதம் ஒன்றைப் பின்பற்றுவதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ என்றால் குருட்டு பக்தியோ வைராக்கியமோ இல்லாது கடைப்பிடிக்க வேண்டும் என்பதாகும். சத்தியம் தொடர்பாக காலாமயன் செய்த போதனையில், “ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு வந்ததால் மாத்திரம் மேற்படி சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைக்க வேண்டாம்.
வாய் வழியாக வந்தாலோ மேலான பண்டிதர்கள் எழுதி வைத்திருந்தாலோ அல்லது உயர்ந்த உளவியல் பண்பு உள்ளவரால் உருவாக்கப்பட்டது என்பதாலோ நம்பிக்கை கொள்ள வேண்டாம். செய்ய வேண்டியது, உங்களால் ஆழமாக ஆய்வு செய்து, தெளிவான முடிவுக்கு வந்து, உங்கள் அறிவுச் சிந்தனையோடு உடன்படுகிறதா என்பதுடன் மகிழ்ச்சிக்கும் உயர்வுக்கும் காரணமாக அமைகிறது என்பதை மாத்திரம் ஏற்றுக் கொண்டு, அதன்படி வாழுங்கள்’ (காலாம சூத்திரம், அங்குத்தர நிகாய)
(தமிழில் : ஏ.எல்.எம். சத்தார்)
நன்றி - rasmin 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger