மாலியில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மறு சீரமைக்க ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்கள் அங்கு முகாமிட்டுள்ளன. மாலியின் முழுமையான மறுமலர்ச்சிக்கு அந்த நாட்டு அரசாங்கம் 4.3 பில்லியன் யூரோ தேவைப்படும் என்று திட்டமிட்டுள்ளது
இந்த நிலையில் மாலியின் வளர்ச்சி குறித்த மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் என்ற நகரில் நடைபெற்றது. சர்வதேச நன்கொடையாளர்களுடன் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில், மாலியின் மறுசீரமைப்பிற்காக ஐரோப்பிய யூனியன் நாடுகள் 520 மில்லியன் யூரோக்கள் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
வருகின்ற ஜுலை மாதம் மாலியில் தேர்தல் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நண்றி - இந்நேரம்
Post a Comment