எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தர வரிசை பட்டியல், ஜூன் முதல்வாரம் வெளியிடப்படும்" என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில், மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 15சதவீதம், அகில இந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 11 தனியார் மருத்துவக்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லூரியின், 85 பி.டி.எஸ்., இடங்கள்; 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909 பி.டி.எஸ்., இடங்கள்ஆகியவை, ஆண்டுதோறும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை குறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுசெயலர், சுகுமார் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கைகலந்தாய்வு விண்ணப்பங்களை, வரும் மே, 9ம் தேதி முதல், 18ம் தேதி வரை, அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில், பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மொத்தம், 40 ஆயிரம்விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய் செலுத்துவதில் இருந்து, எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும், மே 9ம் தேதி முதல், விண்ணப்பங்களை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தும் முறை உள்ளிட்ட விவரங்களை, குறிப்பிட்ட இணையதளங்களில் பெறலாம்.
பொறியியல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வைநடத்த வேண்டும். இதன் முதல்கட்டமாக, ஜூன் முதல் வாரத்தில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான,மதிப்பெண் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, சுகுமார் கூறினார்.
285 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள்?: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியை, இந்த ஆண்டு துவங்க,இந்திய மருத்துவ கவுன்சிலிடம் (எம்.சி.ஐ.,) அனுமதி கோரப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள, எம்.பி.பி.எஸ்.,இடங்களை, தலா, 250 ஆக உயர்த்துவது குறித்து, இக்கல்லூரிகளில், சமீபத்தில், எம்.சி.ஐ., குழு ஆய்வு நடத்தியது.
ஆய்வு முடிவுகள், கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமாக வந்தால், இந்த ஆண்டு, 285 எம்.பி.பி.எஸ்., இடங்கள்கூடுதலாக கிடைக்கும்.
நன்றி - tntjsw
|
எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல்..
Labels:
கல்வி தகவல்கள்
பிரபலமானவை
-
''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்...
-
SAIL(Steel Authority of India Limited) நிறுவனத்தில் டெக்னீ ஷியன் டிரெய்னி பணிக்கு தகுதியான B.E பட்டதாரிகளிடமிருந்து வி...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னா அல் இஸ்லாமியா என்ற அமைப்பிற்கும் இடையில் 27.12.2012 அன்று விவாத ஒப்பந்தம் செய்வதாகவும், ஒப...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்படவில்லை என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டினோம். அவற்றில் ஒரு ஆதாரத்தைப் ப...
-
அல்லாஹ்வின் அருள் தவிர வேறு இதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. நாட்டில் இருக்கின்ற இயக்கங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான் குறைந்த அளவு...
-
கேள்வி : பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனைத் தொடலாமா? ஷாகிரா பதில் : தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன...
-
கடந்த 6-12-2012 அன்று கேப்டன் நியுஸ் தொலைக்காட்சியில் பாபர் மஸ்ஜித் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் கலந்த...
-
இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்...
-
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 10.12.2012 அன்று காளிச்சாமி என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு ...
-
அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் அராஜக காவல்துறையை கண்டித்து பொதுக்கூட்டம் 29.012.12

Post a Comment